FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: SarithaN on February 25, 2017, 08:20:57 PM
-
காதல் காலம்
வசதிகளே இல்லா
அழகிய கிராமமது
வாழ்வோர் உள்ளமதில்
குறைவே இல்லா அன்பு
அன்று ஒரு நாள்
காலை பனி கலைய
ஆத்தாவின் ஆடைகள்
கழுவ குளத்தடிக்கு
போயிருந்தான்
குளம் நிறைமாத
கர்பிணியாகையில்
பிரசவமென வான்பாயும்
ஒருமுனையில்
அந்த ஓரத்தில்
ஆடைகளை குதம்பி
துவைத்து கொண்டிருந்தான் மதன்
வகுப்பு மாணவிகள் ஐந்துபேர்
டைனோசர் இருந்ததை அறியாமல்
வான்தூணின் மறைவில்
ஆடைகள் மாற்றி
மதகிலிருந்து கீழே இறங்கினர்
பைங்கிளியோ மைனாக்களோ ?
இல்லை பேய்களோ!
ஐயோ டைனோசர் என்றொரு அலறல்!
தனை வர்ணிக்கும் வசைமொழியில்
பேய்கள் வந்ததென உணர்ந்த மதன்
குளக்கட்டில் நடக்வே பயந்தவன்
வானொட்டின் எல்லைவரை
தலைதெறிக்க ஓடினான்
வெறுமேனியில்
கோடை வெய்யில் கொதிக்க
அனாதைபோல் நின்றிருந்தான்
வந்த பேய்களில் மதனின்
மச்சாளும் ஒருத்தி
கிண்டல் கேலி சரசங்களென
பேகளின் ஒலிகேட்டு
சுற்றியுள்ள காடுகள் அதிர்ந்தன
துவைத்து போட்ட ஆடைகள்
மெல்லிடையார் குளித்து
மேனி துவட்டையில் காய்ந்துவிடும்
அத்தனை கொடும் கோடை
பேய்களெனும் மாலையில்லா
பச்சை பசுங்கிளிகள்
ஆடைகள் உலரையில்
குளத்தில் இறங்கினர்
மதனை வெறுப்பேற்ற
குளியாத குரங்குகள் போல
நெடு நேரம் நின்றாடினர்
நீர் நடுவே..... குளத்தடியில்
பிந்தியும் முந்தியும்
குளறியும் அலறியும்
அபாயச் சங்கொலி முழங்க........
மதனெனும் மார்பகண்ற காளை
தாமரை தடாகம் புகுந்தான்
முதலையை கண்ட மரகதம்
மூர்ச்சையாகி நீர்நடுவே கிடந்தாள்
மெல்லிடையாளை
கரத்தில் தாங்கி
தோளில் சாய்த்து
கரைவந்தான் காளை
மூர்ச்சை தெளிய வாயிலில்லை!
மூக்கை வாயை பொத்தி உச்சியிலே
தன் மூச்சை ஊதினான் டைனோசர்.....
மதனை கண்ட பொழுதெல்லாம்
முகத்தை கோணும் மரகதம்
மறு பிறப்பெய்தி
தியங்கி கண்விழித்தாள்
மதனின் கரத்தை உயிர் பிரியினும்
உனை பிரியேனென சொல்வதாய்
இறுகப்பிடித்தாள் உயிரை.....
சரசகாறி மொழிகிறாள்
முதலையிடம் தப்பி
டைனோசரிடம் மாட்டி கொண்டாய்
அத்தையிடம் ஆடையை கொடுக்கையில்
உங்கள் காதலையும் சொல்வேனென்றாள்
தோழியர் ஓரமாய் ஒதுங்கியே இருக்க
தியங்கிய தளிர்மேனியாள் தயங்குகிறாள்
எழவும் இயலவில்லை அவனை
அணைக்கவும் முடியவில்லை நாணத்தால்
சங்கடங்கள் நடுவே காளையரை
கட்டியாளும் மதனின் கோவக்குரல்
தோழியரை தேடி ஒலிக்கிறது
மரகதம் திடுக்குற்றாள்
முதலையை கண்டபோது கொண்ட
திகிலுக்கும் மேலாய் நிலைகுலைந்து
பறந்து வந்த இளைத்த மைனாக்கள்
தோழியை தாங்க
கட்டிளம் காளை இடமகன்றான்
என் தாயின் ஆடைகளை
சலவைசெய்து உலர்த்தி மடித்து
பக்குவம் செய்தே இருந்தனர்
பாவையர்!
மதனெனும் அகன்ற புயமுடையவன்
குளத்தில் வாழும் முதலைகள் அப்பாவிகள்
மனிதரை தீண்டாதென்பதை நன்கறிந்து
முதலையை காக்கவே போனான் .....
நன்றி கொண்ட முதலை காலதை கொடுதது.........
குறைகள் என்னுடையவை நிறைவுகள் கடவுளால்
நன்றியும் மேன்மையும் கடவுளுக்கே
(https://s15.postimg.org/ti64xk8if/47491205.jpg) (https://postimg.org/image/ti64xk8if/)
(https://s15.postimg.org/enhjjdyxj/IMG_0958.jpg) (https://postimg.org/image/enhjjdyxj/)