FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Anu on February 13, 2012, 06:48:26 AM

Title: உன் நினைவுகளை நேசிக்கிறேன்
Post by: Anu on February 13, 2012, 06:48:26 AM
அடிக்கடி எட்டிப்
பார்க்கும்
மழையை போல
தலையை காட்டுகிறது
உனது ஞாபகங்கள்

*


உரம் போட்டு
வளர்ப்பது போல
உன் நினைவுகளுக்கு
உயிர் வரும் போதெல்லாம்
உரமாகிறது என்
கண்ணீர்

*


அது எப்படி?
சந்தோஷமான
தருணங்களின் பதிவுகள்
அப்படியே தலைகீழாக
துக்கத்தை
தருகின்றன?

*


யார் எதை கேட்டாலும்
அதை பற்றி எனது
கருத்து என்ன
என்பதை விட
நீ என்ன சொன்னாய்
என்பதுதான்
நினைவுக்கு வருகிறது

*


உன்னைவிட உன்
நினைவுகள் என்னை
அதிகமாக நேசிக்கிறன
என நினைக்கிறேன்
இல்லாவிட்டால்
வெறுத்தாலும்
வேண்டாம் போ என்றாலும்
என்னையே சுற்றி சுற்றி
வருமா...

Title: Re: உன் நினைவுகளை நேசிக்கிறேன்
Post by: Yousuf on February 13, 2012, 11:47:42 AM
நல்ல கவிதை சகோதரி அணு தொடரட்டும் உங்கள் கவிதை பயணம்!
Title: Re: உன் நினைவுகளை நேசிக்கிறேன்
Post by: RemO on February 13, 2012, 02:51:09 PM
Quote
உன்னைவிட உன்
நினைவுகள் என்னை
அதிகமாக நேசிக்கிறன
என நினைக்கிறேன்
இல்லாவிட்டால்
வெறுத்தாலும்
வேண்டாம் போ என்றாலும்
என்னையே சுற்றி சுற்றி
வருமா...

intha varigal enaku rompa pidichuruku anu

nala kavithaikal

Title: Re: உன் நினைவுகளை நேசிக்கிறேன்
Post by: Global Angel on February 14, 2012, 04:41:23 PM
Quote
உன் நினைவுகளுக்கு
உயிர் வரும் போதெல்லாம்
உரமாகிறது என்
கண்ணீர்

nice one  anuma :-*
Title: Re: உன் நினைவுகளை நேசிக்கிறேன்
Post by: supernatural on February 19, 2012, 09:26:24 AM
உன்னைவிட உன்
நினைவுகள் என்னை
அதிகமாக நேசிக்கிறன     
   
miga azagana varigal ...
migavum azagana unmai....