FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: ChuMMa on February 24, 2017, 11:50:00 AM
-
சுடச்சுட உணவு இருந்தால் தாத்தா அதிகம் சாப்பிடுவார்.
அம்மா உணவு பரிமாறினால் அப்பா அதிகம் சாப்பிடுவார்..
தூக்கி வைத்துக்கொண்டு உணவு ஊட்டினால் தங்கை அதிகம் உன்னுவாள்..
தொட்டுக்கொள்ள ஏதேனும் இருந்தால் தம்பி அதிகம் சாப்பிடுவான்..
சமைத்து மீதமானால் மட்டுமே
அம்மா அதிகம் சாப்பிடுவாள்..!!
-
சகோதரா வணக்கம்
சொல்வார்கள் உணவு உண்ணும்போது
பானையை பார்த்து உண்ணவேண்டும்
ஏன் என்றால் அனைவருக்கும் போதிய
அளவுக்கு உணவு உள்ளதா என்பதை
அறிந்துகொள்ள.....
அம்மாக்கள் பிள்ளைக்கு உணவுதரும்போது
பானையை காட்டுவதே இல்லை
தனது பட்டிணியை பிள்ளைகள் அறிந்து
கவலைப்பட கூடது என்பதர்க்காய்.....
உங்கள் கவிதை அம்மாவின் தியாகம்
சகோதரா வாழ்த்துக்கள்.
தொடரட்டும் பயணம்.