FTC Forum
Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: RemO on February 13, 2012, 02:48:40 AM
-
வேலைப்பளுவினால் கைகள் சொர சொரப்பாக மாறிவிடும். விரல்களின் முட்டிகளில் கருமை ஏறிவிடும். முக அழகுக்கு ஒதுக்கும் நேரத்தை கைகளையும், விரல்களையும் பாதுகாக்க நேரம் செலவிடுவதில்லை. மென்மையான கைகளும், கருமை விரல்களும் போக அழகியல் நிபுணர்கள் கூறும் ஆலோசனைகளை பின்பற்றுங்கள் மென்மையான கைகள் கிடைக்கும்
எலுமிச்சை வைத்தியம்
கை விரல்களின் கருமை போக்குவதில் எலுமிச்சை மிகவும் சிறந்தது. தினமும் எலுமிச்சையை சிறு துண்டுகளாக வெட்டி எடுத்து அதனை கை விரல்களில் தேய்க்கவும் பளிச் தோற்றம் கிடைக்கும்.
எலுமிச்சை சாறுடன் சிறிதளவு சீனி சேர்த்து கலந்து அதனை கை முட்டிகளில் பூசி நன்றாக ஸ்கரப் கொண்டு தேய்க்கவேண்டும். பின்னர் மாய்ச்சரைசர் பூசவும். வாரம் ஒருமுறை ரெகுலராக செய்து வர கருமை காணமல் போகும்.
வெது வெதுப்பான நீரில் அரை மூடி எலுமிச்சை சாறு கலந்து கைகளை 15 நிமிடங்கள் ஊற வைத்து பின் மென்மையான துணியில் கைகளை துடைக்க வேண்டும். இதனால் கைகள் மென்மையாகும், நகங்கள் பளிச் ஆகும்.
பால் ஏடு, ரொட்டித் துண்டுகள்
பால் ஏடு எடுத்து அதனை கை விரல்களில் மென்மையாக பூசி மசாஜ் செய்யவேண்டும். பின்னர் எலுமிச்சை தோல் கொண்டு அந்த இடத்தை நன்றாக தேய்த்து பின் குளிர்ந்த நீரில் கழுவினால் பட்டுப்போன்ற கைகளும், கை முட்டிகளில் கருமையும் மறையும்.
ரொட்டித் துண்டுகளை நைசாக உதிர்த்து அதனுடன் பால் கலந்து கருமையாக உள்ள இடங்களில் அப்ளை செய்யவும். பின்னர் தேய்த்து கழுவ கருமை மறையும்.
கைகளின் கருமை போக்குவதில் தயிர் சிறந்த பொருள். சிறிதளவு கெட்டித் தயிர் எடுத்து அதனுடன் சிறிதளவு எலுமிச்சை சாறு கலந்து கைகளில் பூசி ஊறவைக்கவும். 15 நிமிடம் கழித்து வெது வெதுப்பான நீரில் கழுவ விரல்கள் பளிச் தோற்றம் தரும்.
ஆலிவ் எண்ணெய்
கோதுமை மாவு ஒரு ஸ்பூன் பால் ஏடு அல்லது எலுமிச்சை சாறு கலந்து முட்டிகளில் தேய்த்து 15 நிமிடம் ஊறவைக்கவும். பின்னர் கழுவினால் மென்மையாகும்.
இரவு நேரத்தில் தூங்கும் போது கைகளில் ஆலிவ் ஆயில் பூசலாம். காலை நேரத்தில் எழுந்து வெதுவெதுப்பான நீரில் கழுவ கைகள் மென்மையாகும். நகங்கள் உடையாமல் பாதுகாக்க சிறிது வெண்ணெய் தடவினால் நகங்கள் உறுதியாகும்.
மேற்கூறப்பட்ட முறைகளில் தினசரி ஏதாவது ஒரு முறையை பின்பற்றி கைவிரல்களை கவனித்தால் விரல் முட்டிகளில் கருமை மறையும்
-
நல்ல தகவல் ரெமோ நானும் முயற்சி செய்து பார்க்கிறேன்!
-
thanks usf :S namma kai, viral menmaiya irunthu ena seiya :D un gf ah try pana solu machi