FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: ChuMMa on February 23, 2017, 04:00:37 PM
-
அம்மா...
நான் பிறந்து
விழுந்த போது...
உன் சேலைதான்
ஈரமானது...
நான் உறங்க...
உன் சேலைதான்
ஊஞ்சல் ஆனது..
.
நான் பால்
அருந்தும் போது...
உதட்டினை துடைத்தது
உன் சேலை தான்...
எனக்கு பால்
கொடுக்கும்போது...
உன் சேலை தான்
எனக்கு திரையானது...
நான் மழையில்
நனையாமல் இருக்க...
உன் சேலை
தான் குடையானது...
நீச்சல் பழக...
என் இடுப்பில் கட்டியதும்
உன் சேலை தான்...
மழையில் நனைந்த
என் தலையை...
துவட்டியதும்
உன் சேலை தான்...
மாம்பழம் தின்று
என் கை துடைத்ததும்
உன் சேலை தானம்மா...
ஆசிரியரின்
மிரட்டலுக்கு...
ஓடி ஒளிந்ததும்
உன் சேலைதான்...
அப்பா அடிக்க
வரும் போது...
என்னை ஒளித்து
வைத்ததும்...
உன் சேலை
தானம்மா...
அண்ணனுக்கு தெரியாமல்
மறைத்து வைத்து...
மிட்டாய் கொடுத்ததும்
உன் சேலை தான்...
காசு எடுத்தால் என்னை
கட்டி வைத்து அடித்ததும்...
உன் சேலை தான்...
தலை வலிக்கு ஒத்தடம்
கொடுத்ததும்...
உன் சேலை
தான் அம்மா...
அம்மா உன் சேலையை
தொட்டு பார்க்கிறேன்...
தொலைந்த இன்பத்தை
உன் கண்ணில் பார்க்கிறேன்...
மறு பிறவியிலும்
நீயே வேண்டுமென்று...
இறைவனிடம் கேட்கிறேன்
அம்மாவாக...
-
அம்மாவின் சேலை
காப்பரண்
கண்டிப்பு
அரவணைப்பு
ஆறுதல்
சுகம்
இன்பம்
இன்னும் எத்தனை எத்தனை
நாம் வளர்ந்தபின் இழந்து
நிற்கும் சொர்க்கம் அம்மாவின் சேலை.....
வாழ்த்துக்கள் சகோதரா