FTC Forum
Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: RemO on February 13, 2012, 02:36:42 AM
-
மூக்கிரட்டை தாவரம் தரையோடு படரும் கொடி இனத்தைச் சேர்ந்தது. நெருக்கமாக வளரும் இந்த தாவரத்தின் பூக்கள் வெள்ளையாகவும் மஞ்சளாகவும் இருக்கும். சாலையோரங்களிலும், வெளியிடங்களிலும் செழித்து வளர்ந்திருக்கும் இந்த தாவரம் மருத்துவ குணம் கொண்டது. இதன் இலைகள் கீரையாக சமைத்து உண்ணப்படுகிறது. இதனை தனியாக சமைத்து சாப்பிட்டால் கசப்பு சுவையுடன் இருக்கும் என்பதால் கூட்டாக சமைத்து சாப்பிடுவார்கள்.
கண் கோளாறு நீங்கும்
மூக்கிரட்டை கீரையை பறித்து நன்றாக அலசி எடுத்து பொடியாக நறுக்கி நெய் சேர்த்து பொரியல் செய்து சாப்பிட்டால் கண் தொடர்புடைய நோய்கள் நீங்கும். மூக்கிரட்டை கீரையை கசக்கி சாறு பிழிந்து சுத்தமான துணியில் வடிகட்டி அதனை கண்களில் இரண்டு சொட்டு ஊற்றினால் கண் எரிச்சல் நீங்கும்.இதனை உணவில் அடிக்கடி உபயோகித்து வர கண் தொடர்புடைய நோய்கள் எட்டிப் பார்க்காது.
சிறுநீர் கோளாறு நீங்கும்
சிறுநீர்க் குழாய் கோளாறுகளை இக்கீரை உணவு குணமாக்கும். சிறுநீர் கோளாறு உள்ளவர்கள் மூக்கிரட்டையை சமைத்து உண்ண இது சிறுநீரை சுலபமாக பிரித்து வெளியேற்றும். இது மலச்சிக்கலை போக்க வல்லது. மூக்கிரட்டை கீரை இதயத்திற்கு பலம் தரும், அதை நல்ல முறையில் இயங்கச் செய்யும்.
மூலநோய் குணமாகும்
மூக்கிரட்டைக் கீரையைக் கொண்டு அதைச் சுத்தம் செய்து, அம்மியில் வைத்து மைய அரைத்து நெல்லிக்காய் அளவு எடுத்து அரிசி மாவுடன் கலந்து தண்ணீர் விட்டு கெட்டியாக பிசைந்து அடைபோல தட்டி சாப்பிடலாம். காலை, மாலை தொடர்ந்து ஏழு நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர அனைத்து வகையான மூல நோய்களும், குணமாகும். இது காய்ச்சல் மற்றும் மலேசிய ஜூரத்தை போக்கும். மூட்டு வலிக்கு இது சிறந்த மருந்தாகும்.
இந்த கீரையை சாப்பிடும் போது அதிக காரம், மீன், கருவாடு, அதிக உஷ்ணம் தரும் உணவுகள், பழம் ஆகியவற்றை சாப்பிடக்கூடாது.
-
கீரைகள் என்றாலே உடலுக்கு ஆரோக்கியம் தான் அதிலும் குறிப்பாக ஒரு கீரையை பற்றியும் அதன் மருத்துவ குணம் பற்றியும் விளக்கி உள்ளீர்கள் ரெமோ நன்றி!
-
thanks usf