FTC Forum

Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on February 21, 2017, 07:04:25 PM

Title: ~ ராகி மசாலா ரிப்பன் ~
Post by: MysteRy on February 21, 2017, 07:04:25 PM
(https://2.bp.blogspot.com/-PlBcdBpM6vI/WHDbVY2QaPI/AAAAAAAAR6w/3Y9Fw9T0QsQeonJxw810voiy3wacoTutwCLcB/s1600/19.jpg)

(https://3.bp.blogspot.com/-c5UtRES3YJE/WHDbVKroTmI/AAAAAAAAR6s/TSJ04Vx3B20XrD4ZY1YdXms8vDJMLxRTQCEw/s1600/20.jpg)  '’முன்பு எல்லாம் கேழ்வரகு மாவில் அடை, தோசை, புட்டு போன்றவை செய்வதுதான் எங்கள் வீட்டில் வழக்கம். ஆனால், குழந்தைகள் டிபனைவிட, நொறுக்குத் தீனி சாப்பிடத்தான் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். அதனால், இப்போது கேழ்வரகு மாவில் பக்கோடா, தட்டை, முறுக்கு, ரிப்பன் என்று வகை வகையாகச் செய்து தர ஆரம்பித்துவிட்டேன். தட்டில் வைத்த அடுத்த நொடியே அத்தனை யும் காலியாகிவிடுகிறது. கேழ்வரகு முறுக்கைக் கேட்டுக் கேட்டு வாங்கிச் சாப்பிடுகிறார்கள். சத்துக்குச் சத்து... சுவைக்குச் சுவை!''  சென்னை, ஈக்காட்டுத்தாங்கல் இந்திராணி சொன்ன அசத்தல் டிப்ஸ் இது. ராகி
மசாலா ரிப்பன் செய்யும் முறையையும் அவரே விவரிக்கிறார்.

தேவையான பொருட்கள்:

கேழ்வரகு மாவு - 2 கப், பொட்டுக்கடலை மாவு - அரை கப், மிளகாய்த்தூள், பூண்டு விழுது - தலா ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள், சோம்புத்தூள் - தலா கால் டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை:

 எண்ணெயைத் தவிர, மற்ற எல்லா பொருட்களையும் ஒன்றாகச் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, முறுக்கு மாவு பதத்தில் கலந்துகொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் நெருப்பை சிம்மில் வைத்துக்கொள்ளவும். முறுக்குக் குழாயில் ரிப்பன் அச்சுப் போட்டு மாவை வைத்து காய்ந்த எண்ணெயில் ரிப்பன்களாகப் பிழியவும். சிவந்ததும் எடுக்கவும். ராகி மசாலா ரிப்பன் தயார். பூண்டுக்குப் பதில் வெங்காயத்தையும் விழுதாக அரைத்துச் சேர்த்துச் செய்யலாம்.

சித்த மருத்துவர் வேலாயுதம்:

 கேழ்வரகில் கால்சியம், இரும்புச்சத்து, அமினோ அமிலங்கள் அடங்கி இருக்கின்றன. நீரழிவு நோய் தாக்கத்தில் இருந்து விடுபடவும், உடல் வலுப்பெறவும், குடல் புண்ணை ஆற்றவும், பித்தம் தொடர்பான நோய்களைப் போக்கவும், நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கவும், உடல் சூட்டைத் தணிக்கவும், சருமத்தைப் பளபளப்பாக்கவும் கேழ்வரகு உதவுகிறது. இதனுடன், புரதச்சத்து நிறைந்த பொட்டுக் கடலை மாவும் சேர்ப்பதால் குழந்தைகளின் வளர்ச்சி அதிகரித்து உடலுக்கு நல்ல உறுதியைத் தரும்.