FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: thamilan on February 19, 2017, 10:20:51 AM
-
கண்சிமிட்டாமல்
உனைப்பார்க்க ஆசைப்பட்டேன்
ஆனால்
கண்சிமிட்டும் நேரமாவது பார்க்க
ஆசைப்படுகிறேன் இன்று
நான் கடவுளிடம்
கேட்டும் கொடுக்காத வரங்கள் பல
ஆனால்
நான் கேட்டதுமே
கடவுள் கொடுத்த வரம்
நீ........
உன்னை எந்த அளவுக்குப் பிடிக்கும்
என்று தெரியவில்லை எனக்கு
ஆனால்
உன்னை பிடிக்கும் அளவுக்கு
வேறு எதுவும் பிடிக்கவில்லை
உலகில் எனக்கு ........
பட்டுப் போன
என் இதயத்தை
தொட்டுப் போன உன் காதல்
காத்திருந்த கண்களுக்குள்
பூத்திருக்கும் உன் நினைவுகள்
எப்படி மறப்பேன் உன்னை ......
-
nice kavithai .
பட்டுப் போன
என் இதயத்தை
தொட்டுப் போன உன் காதல்
காத்திருந்த கண்களுக்குள்
பூத்திருக்கும் உன் நினைவுகள்
எப்படி மறப்பேன் உன்னை ......
migavum azhagna aazhamana varigal. kaathalayum kaathalikum pennayum marapathu saathiyame illai enbathai unarthukirathu thangal kavithai thamilan. vaazhthukkal ungal kavi payanam thodara.