மைனா தமிழ் பிரியை..
எத்தனை நாட்கள் ஆகிவிட்டன
இந்த அடைமொழியை எழுதி
என யோசித்த வண்ணம்
ஆர்வமாய் அறைக்கு விரைந்து
இருக்கையில் அமர்ந்தபடியே
கவிதை ஒன்றை கிறுக்கிட
பேனாவை கையில் எடுத்தேன் ..
கவிதைக்கு பதிலாக என்
வேதனையும் கோவமும்
வரிகளாய் மாறிடவே..
வீண் சொற்போர் வேண்டாமென
கசக்கி எறிந்து விட்டேன்
நான் கிறுக்கிய காகிதத்தை..
எப்படி பத்தோடு பதினொன்றாக
சிலர் தூக்கி எறிகின்றனரோ அப்படி ..
பெண் மனமும் கசங்கி கந்தலாகும்
காகிதம் என நீ நினைத்திருந்தால்
மானிட .. கண்ணீரிலும் கூட மிதக்கும்
காகித கப்பலை மாறிவிட்டேன் நான்.. மடலும்
கவியும் என் வேதனையை தணிக்கவில்லை
வேடனின் பிடியில் அகப்பட்டு தவிப்பதை விட
பறவை அது தன் கூட்டிலே தினம்
பாதுகாப்பாய் அடைந்து கிடப்பதே மேல் ..
போதும் இந்த நாடகம்
என்னை தீண்டவும் வேண்டாம் ..
என் மௌனத்தை சீண்டவும் வேண்டாம் ..
இந்த மௌனம் நான் காயப்பட்டதால் அல்ல..
பிறர் காயப்பட கூடாது என்பதற்காக ..
உடைத்துவிட்டாய் நீ கூறிய வார்த்தையையும்
நான் வைத்த நம்பிக்கையையும் அடியோடு
இனி நெருங்க நினைப்பது அவசியமற்றது ..
விலகி விட்டேன் முழுவதுமாய் நான் ..
நன்றிகள் பல ..
உன்னால் பலரை அறிந்து கொண்டேன் .
சிலரை நன்கு புரிந்து கொண்டேன் ..
இனிதே தொடரட்டும் உன் பயணம்
நல்லதொரு எதிர்காலத்தை நோக்கி ..
அன்று என் வாழ்க்கை பயணத்தை நல்லதொரு
துணையுடன் துவங்க சரியான வாய்ப்பினை
எனக்கு அமைத்து தந்தமைக்கு
மீண்டும் ஒரு முறை
கோடான கோடி நன்றிகள் __/\__