FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: SarithaN on February 14, 2017, 02:36:07 PM
-
பெண்ணுக்கு மட்டுமா.....!
கற்பு என்பது ஒரு பெண்ணினோ
ஆணினோ விருப்பின்றி இழக்கப்பட
இயலாதது என்பது என் நிலை,
பெண்கள் ஆபாச அலங்காரம் இன்றி
வாழும் நிலத்திலும் மனிதத்தை மறந்த
மிருகங்கள்!
பெண்ணினத்தை பீறிப்போடவில்லையா?
கற்பு என்பது இரு பாலாருக்கும் உரியது
என்பதை எப்போதும் அனைவரும்
நினைந்திடல் வேண்டும்.
கற்பு என்பது சலனத்துக்கு உரியது
உள்ளத்தால் தவிர்த்தால் அதுதான்
முத்தி நிலை.
பலாத்காரத்தால் உடலை அனுபவிக்க
முயல்வதால் அங்கே மனச்சான்றுக்கு
எதிரான பங்கம் நேராது கற்புக்கு.
அது மரத்தோடு சேர்வதுக்கு ஒப்பானது.
ஆணோ பெண்ணோ யாராகிலும்
உடலாலும் உள்ளத்தாலும்
கணவன் மனைவியாக
இல்லா நிலையில் இணங்கி
உணர்ச்சிக்கு அடிமையாகும் போதுதான்
கற்பு களங்கமடைகிறது.
தாயின்றி பிறந்த ஆண் இல்லை
பலாத்காரம் என்பதன் இயல்பான
பிறப்பிடம் ஆண் என்பதை
உலகெங்கும் வரும் செய்திகள்
சொல்கின்றன
ஆடவர் காமத்தின் மீது
மோகம் கொள்ளும்போதும் சரி
பொண்ணால் தூண்டப்படும்
"அரிய" சந்தர்ப்பம் நேர்ந்தாலும் சரி
தாயை நினை.
அப்போது உணர்ச்சிகள் செத்து
உணர்வுக்குள் புகுவாய்.
கட்டாயங்களாலும், கட்டளைகளாலும்
விபச்சாரத்துள் தள்ளப்பட்டவரும்
விடுதலை பெற்ற பின்
ஒருத்தருக்காக வாழ்ந்தால்
அதுவும் தூய்மையே.....!
பலாத்காரத்தலும் வன்புணர்வினாலும்
சீரழிக்கப் பட்ட பெண்களை இழிவாகவும்
கற்பிழந்தவளாகவும் காணும் உள்ளமதை
கொல்வோம் மானிடரே.....!
குறைகள் என்னுடையவை நிறைவுகள் கடவுளால்
நன்றியும் மேன்மையும் கடவுளுக்கே