FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: SarithaN on February 14, 2017, 04:50:33 AM

Title: கலத்தல் எதுவரை காதலில்
Post by: SarithaN on February 14, 2017, 04:50:33 AM
கலத்தல் எதுவரை காதலில் 10/2010


காமம் உடல் நோக்கி நகரும்
காதலெனச் சொல்லி
கற்ப்பை பறிக்கும்வரை
 
நட்பு உயிர்தர துணியும்
பால் வேற்றுமை பாராது
 
அன்பு காதலாகும்
காதல் திருமணத்தை
அடைந்தால் இன்பமாகும்
 
திருமணத்தில் கலப்பவர்கள்
கலந்த பின்னும் பிரியும் நிலை
கொண்டோர் இவ்வுலகில்
 
எனவேதான் வேண்டுகின்றேன்
திருமணமும் பிரியாமை வேண்டும்
தசைமேல் நகம்போல்
தசையுள் உதிரம்போல்.
 
காதலால் கூடிய திருமண வாழ்வு
வாழ்வின் முடிவு வரை நிலைத்தாலே
அது உயிர்வாழும் காதல்
 
இல்லையேல் காதலால் கலந்தது
திருமணமல்ல
காமத்தால் இழந்தது கற்பே என்றாகும்.


குறைகள் என்னுடையவை  நிறைவுகள் கடவுளால்
நன்றியும் மேன்மையும் கடவுளுக்கே