FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: aasaiajiith on February 06, 2017, 10:33:00 PM
-
காதலாய்
காதலில்
காதலோடு
காதலே வேண்டுமென
கொஞ்சும் குழந்தையாய்
கொஞ்சி கெஞ்சி கேட்டிடும்
வஞ்சி க் கிழவியே !
நடுக்கடலில் நின்று நீரையும்
நிலவிடம் சென்று குளிரையும்
நட்சத்திரங்களிடம் ஒளிர்வையும்
பகல் வானத்திடம் நீலத்தையும்
சீனச்சுவர அதனிடம் நீளத்தையும்
பிரசித்தமாய்
வேண்டுவதை போல் தான் ....
நின் காதலே காதலாய் எங்கும் நிறைந்திருக்கும் என்னிடம்
நித்தம் நித்தம் முத்தம் கேட்டு
வீண் மல்லுக்கு நிற்பதுவும் ......
#ஆசை அஜீத்
-
மல்லுக்கு நிக்கும் வஞ்சிக்கிழவிக்கு வாழ்த்துக்கள்.
-
அழகான உணர்வை
மென்மையாக சொல்லிய
உங்கள் கவியில்
ஆபாரம்....
நின் காதலே காதலாய்
எங்கும் நிறைந்திருக்கும்
என்னிடம் .!
ஒரு சந்தேகம் சீனச் சுவருக்கு
அளவு உண்டல்லவா தோழா?