FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: ChuMMa on February 06, 2017, 12:38:26 PM
-
பாசம் என்பதை அறிய
தாயை தேடினேன்
கிடைக்கவில்லை
அறிவு என்பதை அறிய
கல்வியை தேடினேன்
கிடைக்கவில்லை
பணம் என்பதை அடைய
வேலை தேடினேன்
கிடைக்கவில்லை
காதல் என்பதை உணர
காதலியை தேடினேன்
கிடைக்கவில்லை
ஞானம் என்பதை அடைய
ஞானியை தேடினேன்
கிடைக்கவில்லை
தேடியது கிடைக்கவில்லை
தேடாமல் ஒன்று
கிடைத்தது -அது
" மரணம் "
-
Nanum job tednen ..
Kidakavilai
Chumma na nice kavidai
-
வாழ்த்துக்கள்
-
நண்பா மிகவும் அவதானம்!
மரணம்தான் கிடைத்தது
என சொல்கையில் வாழ்த்து
சொல்கின்றார் அக்கா.
கவிதையின் கவலை அழகு!
வாழ்த்துவது மாண்டுபோ
என்பதுபோல் உள்ளது...! :) :) :)
-
அவர் வாழ்த்தியது
நம் கவலைகள் மரணிக்க
என்று எடுத்துகொள்வோம் தோழா
அடுத்தபிறவியெனும்
தேடியது கிடைக்க
வாழ்த்தியதாய்
எடுத்து கொள்கிறேன்
நன்றி நன்றி
-
மாசு படியாத உங்கள் மனசுக்கு வாழ்த்துக்கள்.
நன்றி