FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: thamilan on February 05, 2017, 05:12:41 PM

Title: காதல் அனுபவம்
Post by: thamilan on February 05, 2017, 05:12:41 PM
சிட்டுக் குருவியாய்
சுற்றித் தெரிந்த எனக்கு
சிறகுகளின் கனத்தை
சொல்லித் தந்தது .....

கண்ணீரும் கவலையுமற்று
சுற்றித்திரிந்த எனக்கு
கண்ணீரையும் கவலையையும்
கற்றுத் தந்தது .......

இன்பத்தை மற்றுமே
இதமாய் அனுபவித்த எனக்கு
துன்பத்தின் சாரலையும்
தூவிச் சென்றது .......

பூக்களின் மேன்மையை மட்டுமே
அனுபவித்த எனக்கு
முட்களின் வலியையும்
உணர வைத்தது .......

குலுங்க குலுங்க
சிரிக்கமட்டுமே தெரிந்த எனக்கு
கொஞ்சம் சிந்திக்கவும் சொல்லித் தந்தது .....

வெட்டும் நகத்துக்கு
வலிக்குமோ என பயப்படும் எனக்கு
இதயத்து வலியை
காட்டித் தந்தது ......

காலம் என்மேல்
தூவின சுகமான
துன்பம் நிறைந்த இனிமையான
அனுபவம் காதல்!!!!! 
     

     

 
Title: Re: காதல் அனுபவம்
Post by: LoLiTa on February 05, 2017, 05:17:19 PM
Super na
Title: Re: காதல் அனுபவம்
Post by: SweeTie on February 07, 2017, 05:51:04 AM
காதலின் சக்தி ....சூப்பர்
Title: Re: காதல் அனுபவம்
Post by: SarithaN on February 16, 2017, 05:53:31 PM
சுகமும் துக்கமும்
கொட்டி குவிந்த

மகிழ்ச்சி நிறைந்த
துயரச் சுமைகள்

இன்பமும் சோகமும்
காதலின் இரட்டை குழந்தை...!

வாழ்த்துக்கள் தமிழன் ஐயா