FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: thamilan on February 05, 2017, 04:50:36 PM

Title: நீ தான்
Post by: thamilan on February 05, 2017, 04:50:36 PM
என்னை அடிக்காமல்
அழவைப்பது நீ தான்
என்னை காயப்படுத்தாமல்
வலிகள் தருவது நீ தான்
என்னை வெறுக்காமல்
வேதனை படுத்துவது நீ தான்
என்னை சிதைக்காமல்
சித்திரவதை செய்வது நீ தான்
நான் வாழ்ந்தாலும் வீழ்ந்தாலும்
எனக்குள் இருப்பது நீ தான்
Title: Re: நீ தான்
Post by: SarithaN on February 16, 2017, 05:36:28 PM
பெரிய வரப்பிரசாதம்
நீங்கள் பெற்றிருப்பது.
வாழ்வின் எல்லைவரை
நீளட்டும் பெற்ற பேறு...