FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: thamilan on February 02, 2017, 10:03:43 AM
-
முகநூலில் நெடுநாளாய்
குருந்தகவல் போடாத சுவீட்டிக்கு
ஒரு பிராது
ஆடிக்கும் அமாவாசைக்கும்
ஒரு தரம் வருகிறாய் அரட்டை அரங்கத்துக்கு
முகநூலில் உன்னையும் உனது லைக்கையும்
காணமுடிவதில்லை இப்போது
வலையத் தளங்களில் வளையவரும் -உன்னை
வலைப்போட்டு தேடினாலும்
அகப்படுவதில்லை இப்போதேதெல்லாம்
உலகத்தில் எத்தனனயோ இருக்கிறது
நாம் சரி செய்ய
எத்தனை நாள் தான்
தூங்கிக் கிடப்பாய் வெகுநேரம்
திரைப்படத்தில் ஒரு நடிகன்
மீசையை காணமல் தவித்ததை
காணவில்லை என்று சொல்கிறான் என
சிரித்துக் கிடந்தோம்
உண்மையிலே இப்போது
எங்கள் ஏரிகளைக் காணவில்லை
குளங்களை வயல்களைக் காணவில்லை
உன்னிடம் சொல்லலாம் என்று
அரட்டை அரங்கம் வந்தால்
உன்னையும் காணவில்லை
இதோ பார்
இதற்கும் நீ விளையாட்டாய்
சிரித்துக் கொண்டிருந்தால் நமது
கடலும் மலைகளும் கூட
காணாமல் போய்விடும்
என் மின்அஞ்சல் எல்லாம்
உன் உள்பெட்டிக்குள் வருகிறதா
இல்லை ஸ்பேம் பகுதிக்கு செல்கின்றனவா
எனது செய்திகளை நீ படிக்கிறாயா
நான் சரியாகத் தான்
பேசுகிறேனா
நீயும் இல்லையென்றால்
புத்தி இன்னும் பேதலித்து விடும்
இரு இரு
கொஞ்சம் இரு
இப்போது
உனக்கு இந்த பிராதை
முக நூல் வழியே அனுப்புவது நானா
இல்லை வேறு எவராவது
போலி ஐ-டி யில் இருக்கும்
வேறு எவனா
-
நல்லா குடுக்கறீங்கய்யா பிராது
:D :D :D :D
ஏம்மா ஸ்வீட்ய் இதுக்காவது ரிப்ளை பண்ணுங்கம்மா
என்னம்மா இப்படி பண்றீங்களே மா
-
chumma
hahaha. கொஞ்சம் சுவீட்டிக்கு எடுத்து சொல்லுங்க
-
பிராது அனுப்பினியள் .....
முத்திரை ஓட்ட மறந்துட்டியள்
அதுனால பிராது செல்லுபடியாகாது.
ஊர் பிரச்சன உலகத்து பிரச்ன
முகநூல்ல நிரம்பி வழிஞ்சுருச்சுன்னு
முகநூலுக்கு மூடுவிழா வைச்சுப்புட்டாக
வேலனு வந்த நான் வெள்ளைக்காரி மாதிரி
நாட்டாமை வேல எடுத்ததும் போதும்
நான் படுற பாடு நாய் படாப் பாடு
வாற வருஷத்துக்கும் பதவிய தக்கவைக்க
என் முத்துப்பல் வரிசைய காட்டி சிரிச்சு
பல்லெல்லாம் இப்போ சூழுக்கிப்போயிருச்சு
போலி ஐ டி ல கேடி வேல பார்க்காம
நடுச்சாமக் கோழி நச்சுனு கூவுறப்ப
மறக்காம வந்துடுங்க பேசி சரிபண்ணிடலாம்.
-
பிராது அனுப்பியவன்/ ள் ஆஹ் ?
போலி ஐ டி ல போகாதே அப்புறம் அவுக வேல எடுத்தா
நாம பஞ்சாயத்துக்கு வர மாட்டோம் சொல்லிப்புட்டோம்
கோழி "நச்சுனு" கூவுறப்ப போ...
அது "கொக்கரக்கோ" னு கூவும் போது போயிடாத
சொல்லிப்புட்டேன்
பேசி தீர்த்துக்கோ இல்ல பேசாம ஓடிடு
வரட்டா bye bye
பிராது தீர்த்து வைக்கப்படுகிறது
எல்லாம் போலாம்