(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2F1.bp.blogspot.com%2F-bwwtdAGtzxg%2FTzGgEPCWFVI%2FAAAAAAAAGxQ%2FTAJrfmdZoI8%2Fs200%2Fsinthikkavum.jpg&hash=2ce5dfd958a2d370dda2e50f2b9c2663caacdb9e)
இந்திய பண்பாட்டின் காவலர்கள் என்று தங்களை காட்டி கொள்ளும் பாரதிய ஜனதா கட்சியின் உண்மை முகம் ஒன்றன் பின் ஒன்றாக வெளிவர ஆரம்பித்துள்ளது.
கர்நாடகாவின் பாரதிய ஜனதா கட்சியின் கூட்டுறவுத் துறை அமைச்சர் லட்சுமண் சவதி மற்றும் பெண்கள் நலத்துறை அமைச்சர் சி.சி.பாட்டீல் ஆகியோர் மொபைல் போனில் செக்ஸ்படம் பார்த்து மட்டிகொண்டனர்.
கர்நாடக சட்டசபை கூட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, "பா.ஜ., ஆட்சியில், தலித்துகள் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது' என, ஆவேசமாக பேசிக் கொண்டிருந்தார். இந்த விவாதத்தை கவனிக்காமல், கூட்டுறவுத் துறை அமைச்சர் லட்சுமண் சவதி, தன் மொபைல் போனை ஆன் செய்தார்.
அதில் இருந்த ஆபாச படத்தை ஓடவிட்டு ஆர்வமாக பார்த்து கொண்டிருந்தார். இதை அருகிலிருந்த பெண்கள், குழந்தைகள் நலத்துறை அமைச்சர் சி.சி.பாட்டீலும் ரசித்து பார்த்து கொண்டிருந்தார். இதை அங்கிருந்த கன்னட "டிவி' சேனல்கள் அனைத்தும் படம் பிடித்து, உடனடியாக ஒளிபரப்பியது. இதனால் பெரும் பரபரப்பு நிலவியது.
அமைச்சர் ஆபாச படம் பார்த்த சம்பவம், சட்டசபை வரலாற்றில் கறுப்பு தினமாகும். அமைச்சர் லட்சுமண் சவதி, சி.சி.பாட்டீல் ஆகியோர் அமைச்சராகத் தொடர அருகதையில்லை. இந்த ஒழுக்கமற்ற செயலுக்கு பா.ஜ., தலைவர்கள் என்ன சொல்லப்போகின்றனர் என்று பார்ப்போம் என்றும் இச் சம்பவத்தைக் கண்டித்து, கர்நாடக சட்டசபையில் இன்று போராட்டம் நடத்துவதாகவும் எதிர்க்கட்சியினர் அறிவித்துள்ளனர்.
சிந்திக்கவும்:
உலகிலேயே சட்டசபையில் வைத்து ஆபாசபடம் பார்த்தவர்கள் என்ற பெருமை பாரதிய ஜனதா கட்சி அமைச்சர்களுக்கே சாரும். அதில் ஒருவர் பெண்கள் நலத்துறை அமைச்சர். இப்படி காமபித்து பிடித்து அலையும் இவர் அமைச்சராக இருந்தால் எப்படி பெண்கள் நலம் பெற முடியும். கல்லூரியில் படிக்க போகும்போது நல்லொழுக்க சான்றிதழ் கேட்கிறார்கள. வேலைக்கு போகும்போது அவர்களை பற்றி விசாரித்து வேலையில் சேர்த்து கொள்கிறார்கள்.
ஆனால் எந்த நற்சான்றிதழும் இல்லாமல் ரவுடிகளுக்கும், கிரிமினல்களுக்கும் அந்தஸ்தும், பதவியும் கிடைக்கும் இடம் எதுவென்றால் அது அரசியல்தான். இந்தியாவை மாதிரி கேவலமான அரசியலையும், அரசியல்வாதிகளையும் உலகின் எந்த நாட்டிலும் காணவியலாது. இந்த ரவுடிகளின் ராஜ்யங்கள் அழித்தொழிக்கப்பட்டு மக்கள் ராஜ்ஜியம் மலரவேண்டும். அதுவே உண்மையான ஜனநாயகம்.