FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: EmiNeM on January 27, 2017, 11:31:24 AM

Title: கண்களின் ஈரம்
Post by: EmiNeM on January 27, 2017, 11:31:24 AM
கண்களின்  ஈரம்  வறண்டு  போயின
வாழ்க்கை  வெறுமை  ஆயின
இதயம்  ஊமை  ஆனது
உயிர்  அற்ற  உடலாய் உலவுகிறேன்

இருதயக்கூட்டில்  அன்பை  பரிமாறிய  பாவை
சில  புரளிகளில்  என்னை  விட்டுச்சென்றதேனோ
எவரோ  ஒருவரின்  விளையாட்டில்
 இரையாகி  போக  விடலாமோ நம்  அன்பை
தலை  நரைத்து  கூன்  விழுந்து
புது  நடை  பயிலும்  நாட்களிலும் -
நம்  அன்பது இளந்தென்றலாய்  பயணிக்கும்
உறவுகளுக்கு  முடிவென்பதில்லை
என்பதை  உணர்வுடன்  பகிர்ந்த  நாட்கள்  எங்கே

உன்  இருதய  வாசலில்  அனுதினமும்
தவம்  கிடக்கிறேன் - ஒற்றை  வார்த்தை
உன் நாவில் இருந்து
வராதா  என்று  ஏங்கி  தவிக்கின்றேன்

போதும்  பெண்ணே  உன்  மௌனம்
தாங்க  இயலவில்லை  என்  மனம்
ஆயிரம்  உணர்ச்சிகள்  மனதிலே
சில  சிதறல்களை  இறைத்து  விட்டு செல்கிறேன்
இங்கே
இது  கவிதை  அல்ல
என்  உள்ளத்தின்  வெப்பத்தில்
 வெளியேறும்  சிறு  அனல்கள்.
Title: Re: கண்களின் ஈரம்
Post by: ChuMMa on January 27, 2017, 09:16:48 PM
உங்கள் அன்பின் வெளிப்பாடு
மிக அழகாய் கவிதையாய்..
புரிந்து கொள்வாள் மிக விரைவில்
சேர்ந்துவிடுவாள் உங்கள் அருகாமையில்
.

வாழ்த்துக்கள் தோழா
Title: Re: கண்களின் ஈரம்
Post by: SweeTie on January 30, 2017, 05:06:23 AM
இன்னும்  இரண்டு வாரம் பொறுத்திருங்கள்.   விடை கிடைக்கும்.
வாழ்த்துக்கள்.
Title: Re: கண்களின் ஈரம்
Post by: EmiNeM on January 30, 2017, 04:02:52 PM
நன்றி, நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன் ChuMMa and SweeTie..

Title: Re: கண்களின் ஈரம்
Post by: LoLiTa on January 31, 2017, 05:47:43 PM
Emi ungal kadhal success adaya valtukal tolare[!/color]
Title: Re: கண்களின் ஈரம்
Post by: SarithaN on January 31, 2017, 08:12:15 PM
வணக்கம் சகோதரா.

கவிதை படித்தேன்
மனதை உணர்ந்தேன்
கலக்கம் தவிர்த்து
திடம் கொள் தோழா

கவிதை வாழ்வின் வலியென்றால்
அதன் நிலை வேதனைதான்

முலைப்பாலுக்கு குழந்தை காத்திருக்க
தாயவள் போனபாதையில் மாண்டால்
தனித்திருக்கும் குழந்தை அழுதே மாழும்

என் கவியில் குழந்தை வலி
இது உங்கள் நிலைபோல்.

இதயத்தால் நேசிப்பவர்
நேசித்துக் கொண்டே இருப்பர்
அன்புக்குரியவர் பேசமுடியா
சூழ்நிலையில் இருக்காலாம்
வேண்டுதல் செய்து
திடம் கொள்க தோழா!

நன்றி வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன்
Title: Re: கண்களின் ஈரம்
Post by: EmiNeM on February 15, 2017, 04:12:36 PM
நன்றி சரிதன் சகோ.. இன்னும் கோபங்கள் இருக்கலாம் .
கோபம் கண்களை மறைத்து உண்மைகளையும் நோக்க
தவறிவிடும் அல்லவா. நித்தம் வேண்டுதல் செய்கிறேன்.
காத்திருக்கிறேன்.