FTC Forum
Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: RemO on February 10, 2012, 01:05:25 AM
-
உண்பது நாழி உடுப்பது நான்கு முழம் என்றனர் நம்முன்னோர்கள். நாம் உண்ணும் உணவு உடலுக்கு ஆரோக்கியத்தை தரவேண்டுமே தவிர உபத்திரவத்தை தரக்கூடாது. இன்றைக்கு பல நாடுகளிலும் சைவ உணவின் அவசியம் உணரப்பட்டு வருகிறது. நமது உடலமைப்பு உணவை ஈசியாக அரைத்து சத்துக்களாக மாற்றும் வகையில் இயற்கை வடிவமைத்துள்ளது. காய்கறி உணவுகள் தான் உணவுகளை எளிதில் ஜீரணமாக்கும். அதேசமயம் அசைவ உணவுகள் ஜீரணமாக்க நேரம் எடுத்துக்கொள்வதால் அஜீரணம் உள்ளிட்ட கோளாறுகள் ஏற்படுகின்றன. எனவே தான் மருத்துவம் மற்றும் ஊட்டச்சத்து நிபுணர்கள் சைவ உணவுகளை அதிக அளவில் பரிந்துரைக்கின்றனர்.
நார்ச்சத்துள்ள காய்கறிகள்
இறைச்சி உடலில் புரதத்தை அதிகமாக்கி, கொழுப்பை கூட்ட வழி வகுக்க கூடியது. மேலும் நமது சிறுநீரகத்திற்கு அதிக வேலைப் பளுவை ஏற்படுத்த செய்வதோடு, எலும்பிலுள்ள கால்சியத்தையும் உறிஞ்சி விடுகிறது. அதே சமயம் சைவ உணவில் இந்த பிரச்சினை இல்லை.
நார்சத்து மிகுந்த சுரைக்காய், பூசணி, பசலைக்கீரை மற்றும் முட்டைகோஸ் ஆகியவை சைவ உணவ வகைகளில் மிக முக்கியமானவை. உடலில் சேரும் நச்சுகளை அகற்றும் திறன் இந்த காய்கறிகளுக்கு உண்டு. அதே சமயம் முட்டை, மீன் மற்றும் இறைச்சி போன்றவற்றில் புரதச்சத்து இருக்கும் அளவுக்கு நார்ச்சத்து இருப்பதில்லை.
ரத்தத்தை சுத்திகரிக்கும்
பீட்ரூட், தக்காளி, பூசணி, பாகற்காய் போன்ற சைவ உணவுகள் ரத்தத்தை நன்கு சுத்திகரிப்பதோடு, தோலுக்கு மினு மினுப்பையும் கொடுக்கிறது. அத்துடன் கொய்யா, ஆப்பிள், பேரிக்காய் போன்ற பழங்களை உண்பதும் மேனிக்கு மினுமினுப்பை கூட்டும் என்கின்றனர் உணவியல் வல்லுநர்கள்
எளிதில் ஜீரணமாகும்
சைவ உணவுகள் மூலமாக கிடைக்கும் ஹார்போஹைட்ரேட் படிப்படியாக ஜீரணமாக உடலுக்கு தேவையான குளுகோஸ் சத்தை சீராக அளிக்கும். அதே சமயம் கொழுப்பும், புரதமும் அதிகம் நிறைந்த இறைச்சி உணவு ஜீரணமாகவே அதிக நேரம் எடுத்துக்கொள்ளும். சில சிமயங்களில் சிலருக்கு அது சிரமமாக கூட ஆகிவிடும்.
அசைவ உணவு அதிகம் எடுத்துக்கொள்பவர்களுக்கு கார்போஹைட்ரேட் பற்றாக்குறை ஏற்படும் வாய்ப்பும் அதிகம் உண்டு. இதனால் உடல் தனது இயக்கத்திற்கு தேவையான சக்தியை கார்போஹைட்ரேட்டிலிருந்து பெறுவதற்கு பதிலாக சேமித்து வைக்கப்பட்டுள்ள கொழுப்பிலிருந்து எடுத்துக்கொள்ளும் கீட்டோனியம் என்ற நிலை ஏற்படும். எனவே தான் சைவ உணவின் அவசியத்தை வலியுறுத்துகின்றனர் மருத்துவர்கள்
-
பச்சை காய்கறியில் இத்தனை அற்புதன்களா என்று ஆச்சர்ய படும் அளவுக்கு ஒரு நலல் மருத்துவ குறிப்பு மட்டும் அல்லாமல் எளிதாக ஆரோக்கியம் பெற நல்ல பதிவு! அனைவரும் பயன் பெறுவார்கள் என்று நம்பிகிறேன்!
-
சைவ உணவுகளில் மிக சிறந்தது மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கு உகந்தது என்றால் கீரைகள் , பச்சை காய்கறிகள், பழங்கள் இவைகள் யாவும் தினமும் உணவில் சேர்த்துவந்தால் நோயற்ற வாழ்வு நூறு ஆண்டுகளுக்கு நிலைக்கும். நல்ல பதிவு ரெமோ.
-
Thanks Usf
THanks Gab