FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: SarithaN on January 21, 2017, 05:11:11 PM
-
உடன் பிறந்தவன்! மாமன் கண்ணீர்!
என் அக்காவை அறையில் - இரவில்
கொடுமை செய்கிறார் அத்தான்
மகளும் வளர்ந்துவிட்டாள்!
தகப்பன் செய் - வினைப்பயன்!
என் மருமகளை தாக்குமோ என கலங்கி
வாடுகின்றேன்!
எனது அக்காவுக்கு அத்தான் செய்த
கொடுமைக்கு அவர் பிள்ளை அனுபவிக்குமே!
அப்போது அவர் உணரட்டும்
என என்னால் எப்படி எண்ணிட முடியும்?
அக்காவும் பிள்ளையும் மாமா உடலில்
பாயும் குருதியல்லவா!
தகப்பன் செய் பாவம் என் மருமகளை
தாக்காது போகட்டுமென கண்ணீரோடு
கடவுளை வேண்டுகின்றேன்.
மகள் மணவாழ்வில் படும் துயர் அறிந்து
மனைவியிடம் கண்ணீர் விடுகின்றான் - கணவன்.
அப்போது அவளால் சொல்ல முடியுமா?
நீ கணவனாய் செய்தாயே அதையே தானே
உன் பிள்ளைக்கு உன்னைப் போன்றவன்
செய்கின்றானென!
அறையில் அடித்தவன் அழுகிறான் - தாய்போல்
தலை கோதி விழிதுடைத்து தேற்றுகிறாள்!
மகள் கதறுகிறாள் கண்ணீரோடு சொல்கிறாள்
உன் அப்பாபோல் உலகில் எல்லோரும் இல்லை!
எனது வாழ்வும் உனைபோலவே என சொல்லி
வாழ்க்கை அனுபவங்களை கற்பிக்க முடியவில்லை!
பாடங்கள் தகப்பனெனும் தெய்வீகத்தை - மகளிடம்
சிதைத்து விடுமேயென!
ஆனால் இவளுக்கோ ஆறவும் தேறவும்
இடமில்லை தாய்யெனும் சுமைதாங்கி - இறந்ததினால்!
மாமனாய் தம்பியாய் அனைத்தையும் அறிந்து
அடக்கம் செய்திடா மாண்ட உடல்போல்
ஊன் உருக பிணமாய் நடக்கிறான்!
அக்கா தங்கையர் இல்லறம் நோவதால் - நோகும்
அண்ணன் தம்பியர் கண்ணீர் யாரறிவார்?
கொடுமைகள் அடிமை தனங்கள்
உணவுச் சங்கிலிபோல் விதைத்ததே விளையும்!
குறைகள் என்னுடையவை நிறைவுகள் கடவுளால்
நன்றியும் மேன்மையும் கடவுளுக்கே
-
வணக்கம்.
தங்கை மற்றும் சகோதரன்
மேலும்
கவிதையை சிரமம் தவிர்த்து
காலம் ஒதுக்கி வாசித்தோருக்கும்
பணிவான நன்றிகள்.
வாழ்க வளமுடன்.