FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: thamilan on January 21, 2017, 09:54:44 AM
-
என் வீட்டுக்கு
எதிர் வீட்டில்
வந்திறங்கியது ஒரு வானவில்
பிரமன்
தன்னிடம் மிஞ்சி இருந்த
அழகையெல்லாம் ஒன்று திரட்டி
வடித்தெடுத்த ஒரு அழகுத் தேவதை அவள்
அன்னத்தை விட அழகிய நடை
மின்னலை விட குறுகிய இடை
ஆலம் விழுதென நீண்ட சடை
வர்ணங்கள் அனைத்தையும் ஒன்று குழைத்தாற்போல
ஒரு அழகுக்கு குவியல் அவள்
கண்டதும் மனதுக்குள்
தீபாவளித் திருநாள்
மனமெங்கும் மத்தாப்பூ
பட்டாம்பூச்சிகளின் படபடப்பு
மார்கழி மாதத்தின் கதகதப்பு
எனக்காகப் பிறந்தவளை
என் கண்முன்னே காட்டிவிட்டான்
கடவுள் என
ஆனந்தக் கும்மாளமிட்டது மனது
எடுத்தேன் காகிதத்தை
அடைத்தேன் காதல் உணர்வுகளை
மையாக பேனைக்குள்
வடித்தேன் ஒரு காதல் கடிதம்
கொடுத்தேன் அதை ஒரு பூவுடன்
அவள் தம்பி மூலம்
நாட்கள் நகர்ந்தன
பதிலைக் காணவில்லை
காலாற நடந்த நான்
தடுக்கி விழுந்தேன் - காரணம்
ஒரு பூ......
ஓ பெண்ணே
நான் கொடுத்தப் பூவை- நீ
கசக்கி எறிந்தால்
கல்லாகிப் போனதந்தப் பூ!!!!!
-
அட எங்க மிச்ச அழகில் செய்த அழகுக்குவியலா அது? அப்படின்னா எங்க மொத்த அழகும் எப்பிடியிருக்கும் என்று கொஞ்சம் யோசிச்சு பார்த்திங்களா?....
உங்கள் அழகோவியத்துக்கு எங்கள் வாழ்த்துக்கள்
-
Sari anna arumai kavidhai