FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: SarithaN on January 18, 2017, 11:41:28 PM

Title: மருந்தில்லா நோய் - காதல்
Post by: SarithaN on January 18, 2017, 11:41:28 PM
தூக்கம் தொலைக்கும் மருந்தில்லா நோய் - காதல்

தூக்கம் தொலைக்கும்
மருந்தில்லா நோய் இது - காதல்
வருமென நினைத்தால்

வருவதுபோல்
அறிகுறி தோன்றினால்
சிந்தை உண்டானால்

இயல்பு மறந்து கடமை தெலைத்து
இதயமேங்கி இமைக்காமல்
காத்திருக்கும் - நோயிது!

தலையணைகளை அரவணைக்கும்
அவைகளும் தற்காலிக துணையாகும்!

தூக்கம் தொலையும்
தொலைந்த தூக்கம் நிலைக்க
இதயத்தில் நிலைத்தவன் அருகில் - வேண்டும்

நிலைத்தவன் நிலைத்தால்
அன்றி தொலைத்த - தூக்கம்!
பெண்ணுக்கு மீள்வது
மீளாமையே உண்மை!

காதல் நிறைவேறட்டும்
இல்லை அழுதே மாண்டுபோகாதே
மீண்டு வா!


குறைகள் என்னுடையவை  நிறைவுகள் கடவுளால்
நன்றியும் மேன்மையும் கடவுளுக்கே
Title: Re: மருந்தில்லா நோய் - காதல்
Post by: ரித்திகா on January 20, 2017, 09:08:13 AM
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fquinousse.q.u.pic.centerblog.net%2Fc27392c1.gif&hash=7f993cc7473dbb8e5ad6bb0cd564ebddea39f356)

~ !! வணக்கம் சகோதரர் ...!! ~

காதலென்பது ஒரு நோய்....

அதற்கு எக்காலத்திலும் மருந்தில்லை ...!!!!

அழகான கவிதை .....

~ !! தொடரட்டும் கவிப்பயணம் !! ~
 ~ !! வாழ்த்துக்கள் !! ~

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fquinousse.q.u.pic.centerblog.net%2Fc27392c1.gif&hash=7f993cc7473dbb8e5ad6bb0cd564ebddea39f356)

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fimages4.fanpop.com%2Fimage%2Fphotos%2F16900000%2FAngel-Sisters-angels-16972238-300-245.gif&hash=fecd4f9e1cd2ca9863e7fdd7a7785177f32ce4db)
~ !! ரித்திகா !! ~
Title: Re: மருந்தில்லா நோய் - காதல்
Post by: LoLiTa on January 31, 2017, 06:10:11 PM
Sari na kadhal noi azhagana imsai
Title: Re: மருந்தில்லா நோய் - காதல்
Post by: SarithaN on January 31, 2017, 08:28:38 PM
வணக்கம்.

தங்கையர் இருவருக்கும்
அண்ணாவின் நன்றிகள்

sweetie மற்றும் கவிதையை
சிரமம் தவிர்த்து காலம்
ஒதுக்கி வாசித்தோருக்கும்
பணிவான நன்றிகள்.

வாழ்க வளமுடன்.