FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Anu on February 09, 2012, 08:00:01 AM

Title: அந்த நாலு பேர்
Post by: Anu on February 09, 2012, 08:00:01 AM
வாழ்ந்தேன்
வயிறெரிந்தார்கள்
வீழ்ந்தேன்-நான்
வீண் என்றார்கள்
இவர்கள் தொல்லை தாளாமல்
இறந்தேன்
இடுகாடு வரை வந்தழுகிறார்கள்
இனி நாம் விமரிசிக்க
இவன் இல்லையே என்று!
Title: Re: அந்த நாலு பேர்
Post by: Yousuf on February 09, 2012, 09:40:21 AM
வாழ்ந்தாலும் ஒரு கூட்டம் குறை கூறும்
வீழ்ந்தாலும் ஒரு கூட்டம் குறை கூறும்...
இவர்களை எண்ணி மனம் தளர்ந்தால் நம் வாழ்வு வீணாய் போகும்!

நல்ல கவிதை சகோதரி அணு!
Title: Re: அந்த நாலு பேர்
Post by: RemO on February 09, 2012, 06:47:15 PM
Anu super poem

Ulagam naama epadi irunthaalum pesitey than irukum

Title: Re: அந்த நாலு பேர்
Post by: gab on February 10, 2012, 03:51:16 AM
 வாழ்ந்தாலும்  பேசும்  வீழ்ந்தாலும்  பேசும் வையகம்  இதுதானடா. எதார்த்தமான கவிதை வரிகள் அன்றே திரைப்பட பாடலாக ஒலித்த நினைவுகள்.நன்றி அனு.
Title: Re: அந்த நாலு பேர்
Post by: benser creation on February 10, 2012, 03:57:49 AM
அருமையான வரிதுளிகள் அணு வாழ்த்துக்கள் புறம் பேசபவர் வாயை அமைதியான வார்த்தையால் புண்ணாக்கியதற்க்கு           (https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi1123.photobucket.com%2Falbums%2Fl543%2FNASAR786%2FTamilLovesong1-YouTubeflv_000045414.jpg&hash=44cb4c3921a4f14c2970635c40eb8ae9eb9bfa01)
Title: Re: அந்த நாலு பேர்
Post by: Global Angel on February 12, 2012, 01:52:21 AM
நல்ல கருத்துள்ள உண்மையுள்ள கவிதை அனும்மா