FTC Forum

தமிழ்ப் பூங்கா => கதைகள் => Topic started by: BlazinG BeautY on January 12, 2017, 01:41:15 PM

Title: அரண்மனையில் ஒரு போட்டி!
Post by: BlazinG BeautY on January 12, 2017, 01:41:15 PM
அரண்மனையில் ஒரு போட்டி!

விஷ பாம்புகள் நிறைந்த ஒரு குளத்தை நீந்தி கடந்து சாதனை புரிபவருக்கு

1000 வராகன் பொன்,

அல்லது 10 கிராமங்கள்,

அல்லது தன் ஒரே மகளான இளவரசியை திருமணம் செய்வது,

இந்த மூன்றில் ஒரு பரிசை போட்டியாளர் தேர்ந்தெடுக்கலாம்.

உயிர் பிழைப்பது சிரமம் என்பதால் போட்டி அறிவித்து வெகு நேரம் ஆகியும் யாரும் போட்டிக்கு வரவே இல்லை.

திடீர் என்று ஒரு இளைஞன் குளத்தில் குதித்ததும் மன்னருக்கு குஷி.

 உயிரையும் துச்சமாக மதித்து ஒரு சாதனையாளன் போட்டிக்கு தயாராகி விட்டானே?

ஒரு வழியாக நீந்தி பத்திரமாக கரையேறி விட்டான்.
அவனை கட்டி அணைத்து, பாராட்டுதல்களை தெரிவித்து,

"உனக்கு என்ன பரிசு வேண்டும் கேள்!

ஆயிரம் வராகன் பொன்னா?"

"இல்லை..."

"பின்னே... 10 கிராமங்களா?"

"ப்ச்! வேண்டாம்..."

"ஆஹா! அப்படி என்றால் இளவரசியை திருமணம் செய்து கொள்கிறாயா?"

"தேவை இல்லை..."

"இது மூன்றில் ஒன்றை தானே பரிசாக அறிவித்து இருந்தேன். மூன்றுமே வேண்டாம் என்று சொல்லி விட்டாயே?

 ஆனாலும் உன்னை வெறும் கையுடன் அனுப்ப எனக்கு மனம் வரவில்லை. உனக்கு என்ன வேண்டுமோ அதை கேள், கட்டாயம் அதை தருகிறேன்..."

"என்னை எவன் இந்த குளத்தில் தள்ளி விட்டான் என்று தெரியனும்...!

🍓

படித்ததில் சிரித்தது
Title: Re: அரண்மனையில் ஒரு போட்டி!
Post by: ரித்திகா on January 12, 2017, 02:45:46 PM
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2F4.bp.blogspot.com%2F-_F3Cza63WK4%2FU52CxFX8d-I%2FAAAAAAAAJY4%2F0vyNz8InZko%2Fs1600%2Fsmiley-laughing-out-loud.png&hash=d61e0c22b690b249ce5479a8685544e512d6a31f)

~ !! Baby ...semma ....
padichathum sirippu thaangale .....
oruthana thalli vittu
vedikka paathurukangaiya.......

super super super baby.... !! ~
superb funny story .....

thank you for sharing ....
keep sharing bb akka ...
Title: Re: அரண்மனையில் ஒரு போட்டி!
Post by: SarithaN on April 14, 2017, 04:58:23 PM
அக்கா.............................  :) :) :)

சந்தோசம் சிரித்தேன்

இப்படியாக தமிழ் திரைப்பட
நகைச்சுவை இரட்டையர்கள்
கவுண்டமணி செந்தில் ஐயாக்களின்
நகைச்சுவையும் உண்டு.....

"என்னை எவன் இந்த கிணற்றிலே தள்ளி விட்டான் என்று தெரியனும்...!
  :) :) :)