FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: aasaiajiith on February 09, 2012, 12:19:02 AM

Title: நற்கவிஞனாய் இருந்திருந்தால் !
Post by: aasaiajiith on February 09, 2012, 12:19:02 AM

ஆக்கும் சக்தி எனக்கு  மட்டும் இருந்திருந்தால்
 
அலைபாயும் கடலலை அத்துனையையும்
வான்தோன்றும் மேகங்கள் , நட்சத்திரங்கள் அத்துனையையும்
வீசி  செல்லும் வாசகாற்றையும் , வசந்தகாற்றத்தனையும்
பூ உலகில் பூத்துகுலுங்கும் உலக பூக்கள் அத்துனையையும்
அப்பூக்களில் வெளிப்படும் வகைவகைவாசனைகள் அத்துனையையும்
அஞ்சுகமே உன் அந்தப்புரம்  அனுப்பிருப்பேன்,
காதல் காணிக்கையாய்,  கவிதையை  ஆக்கிருப்பேன் ,
கத்துக்குட்டி கவிஞனாய் இல்லாமல் நற்கவிஞனாய் இருந்திருந்தால் !
Title: Re: நற்கவிஞனாய் இருந்திருந்தால் !
Post by: benser creation on February 09, 2012, 03:45:18 AM
நண்பரே ஒருவிதத்தில் நானும் நீங்களும் ஒற்றுபோகிறோம் என நினைக்கிறேன் நல்ல கவிதை வாழ்த்துக்கள் (https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi1123.photobucket.com%2Falbums%2Fl543%2FNASAR786%2F299546_200970729963465_100001516182944_547650_3724516_n.jpg&hash=67ef6f0f713b2d01f50db4f99b8b927ae3686fbd)
Title: Re: நற்கவிஞனாய் இருந்திருந்தால் !
Post by: aasaiajiith on February 09, 2012, 07:20:02 AM
vanakkam Benser,

           indha karuththaiye naan pala naaatkal munbaagavey munmozhindhirukindrein ena nambhugirein ?
சக ஏமாளியே !  வணக்கம் !
என்ன? சக ஏமாளியா ? ஆம் ,
நீயும் நானும் ஒரே நிலையில் இருப்பதனால் .marandhirukkamaateeer irundhum adikoadiduvadhu adiyenin kadamai adhanaal adhan adikoadidugirein!nadrigalodu Naan.
Title: Re: நற்கவிஞனாய் இருந்திருந்தால் !
Post by: benser creation on February 09, 2012, 11:05:14 AM
எனக்கு நினைவு இருக்கின்றது நண்பரே நன்றி
Title: Re: நற்கவிஞனாய் இருந்திருந்தால் !
Post by: RemO on February 09, 2012, 06:49:29 PM
nice poem ajith

Quote
கத்துக்குட்டி கவிஞனாய் இல்லாமல் நற்கவிஞனாய் இருந்திருந்தால் !

ithuku per than thanadakama :S
Title: Re: நற்கவிஞனாய் இருந்திருந்தால் !
Post by: gab on February 10, 2012, 03:45:13 AM
குருவை மிஞ்சின சிஷ்யனை போல , நற்கவிஞனை மிஞ்சிய கத்துக்குட்டி கவிஞனின் கவி காண்போரை கவரும் வண்ணமே அமைந்திருக்கிறது. வாழ்த்துக்கள்.
Title: Re: நற்கவிஞனாய் இருந்திருந்தால் !
Post by: aasaiajiith on February 10, 2012, 06:29:11 AM
வா கேப் வா, வா !
           பாலைவனத்தில் பூ பூத்தது போல் ,இந்த கவிதை வனத்தில் உன் தகவல் ...
ஆரோக்கியமான ஒரு விடயம் , தொடர்ந்து தொடர்பில் இருக்கவேண்டும்!
கத்துக்குட்டி கவிஞன் நான் என்பதை அங்கீகரிதிருந்தாலும்,எனக்கென்னவோ
வசிஷ்டரின் வாயால் பிரம்மரிஷி பட்டம் பெற்றதாய் ஒரு பெருமிதம் !
வசந்தத்தை (வாழ்துக்கள்), வரவேற்க்க காத்திருக்கும் வாடிய மலராய் !

                                                      (ஆசை அஜீத் )
Title: Re: நற்கவிஞனாய் இருந்திருந்தால் !
Post by: Global Angel on February 12, 2012, 01:51:09 AM
Quote
Quote
கத்துக்குட்டி கவிஞனாய் இல்லாமல் நற்கவிஞனாய் இருந்திருந்தால் !
ithuku per than thanadakama :S

இதற்க்கு பெயர் அவை அடக்கம்
Title: Re: நற்கவிஞனாய் இருந்திருந்தால் !
Post by: RemO on February 12, 2012, 10:23:26 AM
Thanks angel