FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: ChuMMa on January 09, 2017, 06:01:02 PM
-
என் கண்களில் கண்ணீர் எட்டி பார்க்கிறது தோழா
வந்தாரை வாழ வைக்கும் தமிழ்நாடு
வீரத்தால் மூவுலகம் ஆண்ட தமிழன்
இன்று ஒரு விவசாயின் மரணம் கூட
தலைப்பு செய்தியாய் கடக்கவில்லை
மரணம் கூட பழகிவிட்டோம்...
பட்டாசுக்கு செலவழிக்கும் நாம்
பக்கத்துக்கு வீட்டு குப்பனின் பசி அறியோம்
விவசாயத்தை அழித்தோம் இன்று
விவாசியியை அழிக்கிறோம்
தமிழா,
நீ நாட்டுக்குக்காக போராடினாய்
உன் குலம் காக்க போராடினாய்
உன் பெண், பிள்ளை காக்க போராடினாய்
இன்று உன் உயிர் காக்க போராடுகிறாய்
உனக்காக குரல் கொடுக்க ஆள் இல்லை ...
உனக்கு நீயே....
நாளை நமதே ...
நம்பிக்கையுடன் போராடுவோம்
வா தமிழா .....