FTC Forum

தமிழ்ப் பூங்கா => கதைகள் => Topic started by: BlazinG BeautY on January 07, 2017, 06:52:41 PM

Title: படித்ததில் பிடித்தது
Post by: BlazinG BeautY on January 07, 2017, 06:52:41 PM
காமராஜர் ஒரு முறை ஒரு கலெக்ட்டரை அழைத்து இருந்தார்.. உரையாடலுக்கிடையே தேநீர் வந்தது.. டீயக் குடிங்கன்னேன்.. என்றார் காமராஜர்.. தேநீரைப் பருக சில நிமிடங்கள் தயக்கம் காட்டினார் அந்த கலெக்டர்..

உடனே காமராஜர் அவரது டீக்கோப்பையை அருகில் சென்று பார்த்தார். அதில் ஈ ஒன்று விழுந்து துடித்துக் கொண்டு இருந்தது...

ஈயை கையில் எடுத்து வெளியே பறக்க விட்டார் காமராஜர்...
பிறகு கலேக்ட்டரிடம்... "...டீயைக் குடிப்பதா வேண்டாமான்னு யோசித்த நீங்க.. அந்த ஈயைப் பத்தி நினைக்கலையே... உங்களுக்கு டீ தான் பிரச்சனை.... ஆனா அந்த ஈக்கு..? வாழ்வா சாவா-ங்கறது பிரச்சனை.... இப்படி உங்க சைட்ல இருந்து மட்டுமே நீங்க சிந்திச்சு செயல்பட்டா... மக்களோட சைட்லே எப்படி சிந்திப்பீங்க..??.."­

கலெக்டர் தலை குனிந்தார்... படிக்காத மேதை...
பகிரலாமே.....

(https://s27.postimg.org/3rvpljorn/kamarajar.jpg)
Title: Re: படித்ததில் பிடித்தது
Post by: ரித்திகா on January 12, 2017, 04:04:35 PM
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fwww.sherv.net%2Fcm%2Femoticons%2Fhand-gestures%2Fhand-clapping-smiley-emoticon.gif&hash=a03cc3517d54fd920b870874b8d10a8c4f9db6c7)

பகிர வேண்டிய கதை ....
ஆழமான பொருள் உள்ள கதை ....
நம்ப எந்த  விஷயம் செய்தலும் ....
நம்மை மட்டும் அல்லாது நம்மை
சுற்றிலும் இருப்பதை  இருப்போரை
நினைத்து சிந்தித்து செயல்பட வேண்டும் .....

அருமையான கதை ...!!!
பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி அக்கா ...!!!
பகிர்வு தொடரட்டும் ....!!! 
Title: Re: படித்ததில் பிடித்தது
Post by: SarithaN on April 14, 2017, 05:03:12 PM
ஆழமான சிந்தனை .....

மக்களை... யீவராசிகளை.....
நேசிக்கும் ஆழ்மனத்தின்
புலப்பாடு..... 

நன்றி அக்கா.....