FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Forum on January 06, 2017, 03:10:00 AM

Title: பொங்கல் சிறப்பு கவிதை நிகழ்ச்சி 2017
Post by: Forum on January 06, 2017, 03:10:00 AM
பொங்கல் சிறப்பு கவிதை நிகழ்ச்சி (2017)

நண்பர்கள் கவனத்திற்கு,
 எதிர் வரும் பொங்கல் தினத்தை முனிட்டு .. சிறப்பு கவிதை நிகழ்சிக்காக தங்கள் கவிதைகளை வழங்குமாறு கேட்டுகொள்கிறோம் ... நண்பர்கள் இணையதள வானொலியூடாக உங்கள் கவிதைகள் பொங்கல் தினத்தன்று தொகுத்து வழங்கப்படும். எதிர்வரும்  செவ்வாய் கிழமை  (10-01-2017) இந்திய நேரம் இரவு 12 மணிக்கு  முன்பாக கவிதைகளை பதிவிடுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

சொந்தமாக எழுதப்படும் கவிதைகளுக்கே முன்னுரிமை கொடுக்கப்படும்.
Title: Re: பொங்கல் சிறப்பு கவிதை நிகழ்ச்சி 2017
Post by: ChuMMa on January 06, 2017, 06:53:57 PM

பொங்கலோ பொங்கல்


தை மாதம் பிறக்க போகுது ..
பொங்கல் நாளும் வர போகுது ...

குழைந்தைக்கு புது ஆடை வாங்கணும்
பட்டொளி வீசி நடக்கறத பாக்கணும்

பொங்க வைக்க பொருள் வாங்கணும்
கூட கரும்பும் வாங்கணும் ...

மாட்டுக்கு தான் அலங்காரம் பண்ணனும்
மாலை மரியாதை செய்யணும் ..

காணும் பொங்கலுக்கு தான் என் புள்ள
காணாத இடத்துக்கு கூட்டிகிட்டு போகணும்

எல்லாம் தான் யோசிச்சிட்டேன்
ஆனா

இந்த வங்கியில பணம்
எப்ப தான் கொடுப்பங்களோ....

தை பொறந்தா வழி பொறக்கும்
நம்பிக்கையில நான் இருக்கேன் ...

பொங்கலோ பொங்கல் ........

Title: Re: பொங்கல் சிறப்பு கவிதை நிகழ்ச்சி 2017
Post by: BlazinG BeautY on January 07, 2017, 11:15:13 AM
பொங்கலோ பொங்கல் !
பொங்கலோ பொங்கல் !

வந்ததாம் தை பொங்கல்..      
அனைவர் மனத்திலும் இன்பம்
அகத்தினில் துன்பம் விலகி 
இன்பமான பொங்கல் திருநாள்! அங்கே

பொங்கல் திருநாள் முன்னே வருவது போகி
பழையதை நீக்கி புதியதை வரவேற்போம்
நம் கெட்ட எண்ணங்களை திறப்போம்
நன்மைகளை நினைப்போம்

முதல் நாள் சூரியனுக்கு பொங்கல்
கரும்பு தோரணம் அங்கங்கே
பல வீடுகளில் கம்பிரமாய்..
வண்ண வண்ண கோலங்கள்
கண்கவர் விளக்குகள் சேர்த்தே அங்கு

சின்னஞ்சிறு குழந்தைகள் அழகழகாய்
வண்ணத்து பூச்சியாய் ஜொலிக்க
அம்மா பொங்கல் பானை வைக்க
இன்னும் மெருகுட்டியது முன்னே 
கொண்டதே பொங்கல் திருநாள்.

இரண்டாவது நாள் மாட்டு பொங்கல்
அன்றே அவன்தான் ஹீரோ
நம்மை தோற்கடிக்க ஆயுதமாவன்
உனக்காக காத்திருக்கும் பல பேர்
பொங்கல் திருநாள் நீ இன்றி எங்கே ..

மூன்றாம் நாள் காணும் பொங்கல்
கண்கவர் நங்கைகள் காளையர்களுக்கு
அங்க திருவிழா எங்கும் காணாத நாள்
மங்கையை கண்டதும்  போனதே மனம்

தை பொங்கல் இனிதாய் முடிய
அனைவர் மனதிலும் இன்பம்

பொங்கலோ பொங்கல்! பொங்கலோ பொங்கல்! 
என் FTC அருமை நட்பிற்கு என் பொங்கல் வாழ்த்துக்கள்
Title: Re: பொங்கல் சிறப்பு கவிதை நிகழ்ச்சி 2017
Post by: இணையத்தமிழன் on January 08, 2017, 07:34:47 PM

பழையன கழிதலும் புதியன புகுதலும்
போக்கி மருவி போகியாய் முடிந்தது
தைமகளின் முதல் நாளாம்
தமிழ்மகளின் பெருநாளாம்
உழவர்களின் திருநாளாம்
பொங்கல் திருநாள்

அள்ளித்தந்த ஆதவனுக்கே அர்ப்பணிக்க
வாசலிலே மாக்கோலமிட்டு
மாவிலை தோரணம் கட்டி
அழகாய் பானை செய்து
மங்களம் சேர்த்திட மஞ்சளிட்டு
வாழ்கை இனித்திட
செங்கரும்பு வெட்டி 
ஆழாக்கு நெல்மணியில் பொங்கலிட்டு
அனைவரிடமும்  ஆனந்தம் பொங்கிடும்

அள்ளித்தந்தவனை வணங்கிய
மறுத்தினமே காட்டில்
தன்னுடன் உழைத்தவனுக்கும்
பொங்கல் வைத்து வழிபட்டான் தமிழன்
மாட்டுக்கும் மாலைசூட்டி
மஞ்சள் குங்குமம்மிட்டு
கழுத்திலே சலங்கை மாட்டி
வீதியிலே ஊர்வலமாய் கூட்டிச்செல்ல
காளையின் அழகும் நம்கண்ணை பறிக்கும்
பொங்கல் கடைசிநாளம்
காணும் பொங்கல்
உறவுகளோடு ஒன்றுசேர்ந்து
கொண்டாடி மகிழ்ந்தான் தமிழன்


பொங்கும் சந்தோசம் என்றும்
வீட்டிலே தங்கிட அனைவர்க்கும்
இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்
                                            -இணையத்தமிழன்
                                               ( மணிகண்டன் )



Title: Re: பொங்கல் சிறப்பு கவிதை நிகழ்ச்சி 2017
Post by: பொய்கை on January 08, 2017, 08:43:35 PM
போகி புகை மண்டலத்தில் - நான்
மூச்சு அடைச்சு போயிருந்தேன்..
மூச்சு மீண்டும்  வந்த போது - நான்
யோகி போல் வீற்றிருந்தேன்..

மண்பானை வாங்க சந்தையில் - நான்
மணிக்கணக்கா  காத்திருந்தேன் ..
கண்டாங்கி சேலைகாரி கால்காசு குறைக்க
முண்டாசு கட்டி மூணுபானை வாங்கிவந்தேன்..

இஞ்சி கொத்து ,மஞ்சள் கொத்து - இன்று
கடைத்தெருவில் வாங்கவந்தேன் ..
இஞ்சி இடுப்பழகி வஞ்சி சொன்னவிலைக்கேட்டு
அஞ்சி நானும் ஓடிவந்தேன் ..

மாக்கோலம் போட்ட வீடு  - இன்று 
மங்களமாய் காணக் கண்டேன் ..
கரும்பு கடிக்கும் ஓசை - இப்போ
காதோரம் இசைக்க கண்டேன் ..

ஜல்லிகட்டு நானும் காண -  இன்று
துள்ளிக்கிட்டு போயிருந்தேன் ..
நீதிமன்ற ஆணை  கேட்டு - மனம்
விம்மிகிட்டு ஓடிவந்தேன் ..

காணும் பொங்கல் அன்று - நான்
காணத்தான் போயிருந்தேன் ..
கன்னியரின் கால் கொலுசில் - நான்
காணாமல் போயிருந்தேன் ..

மஞ்சு விரட்டினிலே .. மாமன் பொண்ணு
மஞ்சு விரட்டினிலே .. நானும் இங்கே
தலை தெறிக்க ஓடி வந்தேன்..

பொங்கலோ பொங்கல்! பொங்கலோ பொங்கல்!
Title: Re: பொங்கல் சிறப்பு கவிதை நிகழ்ச்சி 2017
Post by: SarithaN on January 09, 2017, 05:28:48 PM
பொங்கல் பொங்கல் பொங்கல்!

பொங்கல் பானையை தேடுகிறேன் காணவில்லை!
குயவரை குயவர்கலத்தை நாடி ஓடுகிறேன்!
நையாண்டி சிரிப்புடன் சொல்லுகிறார்கள்
மாண்டு மறைந்து போயினதாம் குயவர் குலம்.!

பானையில்லை.
பானை செய்ய குயவரும் இல்லை.
ஏன் மண்தான் இருக்கா! மண்ணில்?
பானைசெய்து பழகிட!

கிராமங்களை சுடுகாடாக்கி
விவசாயமின்றி
விவசாயிகளை சாவடித்து
நிலத்தை பிடுக்கும் நாடகம்தானும் நமக்கு புரியுமா தமிழா?

தனக்கென ஓர் நாடில்லா நாதியற்ற இனமடா நாம்!
ஆப்கான் இந்தியா இலங்கை மலேசியா சிங்கபூர் வர்மா
இன்னும் எத்தனை உன் தேசமடா!
ஆனால் இன்று நமக்கேதட தேசம் தமிழா?

கிண்டுவதை முண்டி விழுங்கவா பொங்கல்?
நம் முன்னோரும் மூத்தோரும் விட்டுசென்ற
உன்னத நெறிகளை மரபை மீட்டு மீண்டும்
உலகுக்கு சொல்வதற்கு இல்லையா பொங்கல்?

குமரிக் கண்டமும் பூர்வீகமாய் கொண்டவர் நாம்.
குனிந்ததலை நிமிர இயலா அடிமையாய் வாழ்வதும் நாம்.
பொங்கவேண்டியது பானையிலா நம் உணர்விலா தமிழா?
உணர்வில் பொங்குவதனால் பானையிலும் பொங்கினால்
நானும் சொல்லுவேன் பொங்கலோ பொங்கல்.....

நானும் சொல்லுவேன் பொங்கலோ பொங்கல்
இல்லையேல் சொல்லேன் பொங்கலோ பொங்கல்!
தமிழன் உண்ணான்!சொல்லான்! உணர்வில்லா பொங்கல்.

பிரித்து கொடுத்த துண்டு நிலத்திலும் ஆழ நாதியில்லை
கொண்டாட நீதியான விதிமுறைதான் உண்டா?
இல்லை விடுமுறைதான் உண்டா? சல்லிக்கட்டு எங்கே!?

அறுவடை திருநாளாம் வேதனை வெட்க்கம்.
விவசாயிகள் உயிர் தூக்கு கயிற்றில் அறுபட!
உன் துடிப்புகள் உணர்வுகள் எங்கே தமிழா?
தட்டிக்கேட்கும் அக்கறை பரிவு பிறரன்புமா இழந்துபோனாய்?

வந்தாரை வாழவைத்து மாண்டுபோன! தமிழ்நாடே!
வந்தாரை எனியும் வாழவை தவறில்லை தமிழ்நாடே!
வந்தாரை எல்லாம் வாழவைப்பாய்
உன்னில் பிறந்தவரை ஏன் கொல்கிறாய்

உன்னையே நீ இகழ்ந்து இழிவுபடுத்தி அழிக்காதே
உன் மண்ணுண்டு வளர்ந்த உன் தமிழ்ப் பிள்ளை
உயர்கையிலும் தட்டிகொடு அது முதலில்
திரையுலகிலும் தொடங்க்கட்டும்


பொங்கலாம் பொங்கல் இயற்கைக்கு நன்றி சொல்லி
தமிழனெனும் தன் மான்பை காட்டவா? பொய்...?
பகட்டு ஆடம்பர நாட்களின் அடுக்கில் இதுவும்
ஒன்றாகி உணர்வற்றுப்போன நாளாகுமோ தமிழா?

ஆதிக்குடியாம் பழங்குடியாம் நம் மூதாதைகள்
மலைவாசிகளாய் மாற்றப்பட்ட பட்டமளிப்பு விழா
கண்முன்னே நேர்ந்ததை அறிந்தாயா தடுத்தாயா?
நாமே பூர்வீகக் குடியெனும் உரிமையை பறித்தகதை


புது ஆடை பட்டாசு ஆபரணம் அணிகலன் இதுதன்
பொங்கலென பராக்கு பார்த்து ஏமாந்தியோ! தமிழா!
நிர்க்கதியாய் நிர்வாணியாய் உலமேடையில்
அடையாளம் அற்று அசிங்கப் படுவாய் தெரிந்துகொள்!

இருப்பவர் நாம் ஆடம்பரத்தில்,
அழிந்து சாம்பலாகும் பட்டாசு - செலவில்
கொஞ்சமாவது ஒறுத்து அயல்வீட்டில் பொங்கிட
சொல்ல உள்ளத்தில் பொங்கியதா தமிழா! அன்பு?

வங்கி அட்டையில் ஒற்றைதாளாய் 2000/=தான் வருகிறது.
மருந்தை வாங்க, சில்லறை இல்லை. வாங்கினால் வாங்கு
2000/= ரூபாய்க்கும் மருந்தே வாங்கு! உணவுக்கு எங்கே போக?
எனக்கேது இந்தாண்டு பொங்கல்!? அடுத்தாண்டு இருப்பேனோ?
பொங்கி வழிகிறது பானையில் அல்ல கண்களில் கண்ணீர்!

சொல்லச் சொல்கிறீர்களா என்னையும்
பொங்கலோ பொங்கல்?
சொல்ல முடியவில்லை ஆனாலும் சொல்கிறேன்
கொண்டாடுவோர் கொண்டாட!

பொங்கல் வாழ்த்துக்கள் மனுக்குலமே.
தமிழா நீ வாழ்ந்தால் எல்லோரும் வாழ்வர்!
பிறரால் ஒருபோதும் நீ வாழமுடியாது - தமிழா
பொங்கலோ பொங்கல் விழித்துக்கொள் தமிழா!!!



குறைகள் என்னுடையவை  நிறைவுகள் கடவுளால்
நன்றியும் மேன்மையும் கடவுளுக்கே

(https://s23.postimg.org/x7shlscyv/anna.jpg) (https://postimg.org/image/x7shlscyv/)
Title: Re: பொங்கல் சிறப்பு கவிதை நிகழ்ச்சி 2017
Post by: SweeTie on January 09, 2017, 06:37:54 PM
காடு வெட்டி வரம்பு கட்டி
நீர்பாச்சி நாற்று நட்டு   
குருவி  காடை  கொத்தாம
அங்கும் இங்கும் வெருளி வச்சு
கண் முழிச்சு வேர்வை சிந்தி
ஏர் புடிச்சு உழுத வயல்
மும்மாரி மழை பொழிஞ்சு
நெல்மணியாய் வெளைஞ்சுருக்கு 

வீடு வந்த நெல்மணிய
 குத்தி அரிசாக்கி
சூரியன வேண்டிக்கிட்டு   
கிழக்கு தெச நோக்கி
புது பானை அடுப்பேத்தி
பச்சரிசி பயறு சேர்த்து
பாலோட  சக்கரையும்
வகைவகையாய் முந்திரியும்
ஊரு மணக்க  வா சனையும்
நெய்யோட தேனும் ஊத்தி
பொங்கிடுவோம்  தைப்பொங்கல்

மும்மாரி மழை பொழிஞ்சு
முப்போகம் தந்த
போகிக்கு ஒரு பொங்கல்
மாவிலை தோரணமும்
மாக்கோலமும் கரும்பும்
மஞ்சளும் குங்குமமும்
பறைசாற்றும்  தமிழ் பொங்கல்
காலமெல்லாம் உழவனுக்கு 
உழைச்ச   காளைக்கும்  பசுவுக்கும் 
நன்றி சொல்ல  மாட்டுப்பொங்கல்
உற்றார்க்கும் உறவினருக்கும்
பாசமாய் பரிமாற
வர்ண மூட்டி  வகை வகையாய்
வைச்சுடுவோம் காணும் பொங்கல்
 
பொங்கும் மங்கலம்  எங்கும் தங்குக
பொங்கலோ பொங்கல்.



 
Title: Re: பொங்கல் சிறப்பு கவிதை நிகழ்ச்சி 2017
Post by: ரித்திகா on January 10, 2017, 04:25:42 PM
  பொங்கல் திருவிழா ..

பொழுதெல்லாம் விதைத்தவனுக்கு
பொங்கி தின்ன ஒருநாள் ..

மன அழுக்கை பொசுக்கும் விதமாய் ..
காலை எழுந்து பழையன எரித்து
பண்டிகையை தெடங்கும் போகி ..

விதைத்தவனே விருந்து படைக்க ..
சூரியனையே விருந்தாளியாய் அழைக்க .
பொங்கி வழியும் மகிழ்ச்சியோடு ..
பொங்கலோ !! பொங்கல் ..

மனிதனையே வஞ்சிக்கும் இச்சமூகத்தில்
மாட்டிற்க்காய் ஒருநாள் ..
காளையின் திமிலில் கைபோட்டு ..
கடவுளாய் அவனை பார்த்து வணங்கி - மாட்டுப்பொங்கல் ..

உறவினரை வீட்டில் அழைத்து ..
அவன் வயிறார உணவு படைத்து ..
வெளியேவா என்றழைத்து உறவாட - காணும் பொங்கல் ..

பண்டிகைகள் பழமையை பிடித்து நிற்க்கும் ..
பண்டிகைகள் பண்பாட்டை அடையாளப்படுத்தும் ..
பண்டிகைகள் மனித உறவை இழுத்துப்பிடிக்கும்

நானும் காத்திருக்கிறேன் பொங்கலுக்காக ..
வாழ்த்துக்கள் என் தொப்புள் கொடி உறவுகளுக்கு ..
பொங்கலோ பொங்கல்...
 
Title: Re: பொங்கல் சிறப்பு கவிதை நிகழ்ச்சி 2017
Post by: AnoTH on January 10, 2017, 11:34:15 PM
விண்ணில் ஒளிபடைத்து
மண்ணில் கனி படைக்கும்
சூரியனே வா !

மண்ணில் நிலம் உடைத்து
நெல் மணியின் உமி உடைத்து
எண்ணில் கதிர் விளைக்கும்
கதிரவனே வா !

கண்மணிகள் கதிரறுக்க
பெண்மணிகள் கரகமிட
வெண்மணிகள் பொலி தருக
மண்நிலம் மகிழ்வுறவே
மாயவனே வா !

வாசலில் கோலமிட்டு
வாசனைகள் பல தெளித்து
வட்டப்பானையிலே
வடித்துவைப்பார் பொங்கல் என்பார்.

வசந்தங்கள் வந்ததென்று
வந்து நின்று வாழ்த்துரைப்பார்
பகலவனே வா !

காளை மாடு களத்தில் பூட்டி
காலையோடு நிலம் வரைந்து
சோலையாக பயிர் வளர்த்து
சோறு படைக்கும்
உழவனே எழுந்து வா !

பட்டியில் பசுக்கள் கூட்டி
புட்டியில் புற்கள் மேய்ந்து
தொட்டியில் பாலைத்தரும்
பசுக்களே பாய்ந்து வா !

தை மகளே ! என் கை மகளே !
வையகம் தழைத்தோங்க
வாமகளே ! இன்பங்கள் பொங்கிட
வாமகளே ! என் பூமகளே !