FTC Forum

தமிழ்ப் பூங்கா => பொதுப்பகுதி => Topic started by: Yousuf on February 07, 2012, 10:23:05 PM

Title: நடிகை கொஞ்சியதும் மனம் உருகினார் இந்திய பிரதமர்!
Post by: Yousuf on February 07, 2012, 10:23:05 PM
இந்தி நடிகரும், ஹேமாமாலினியின் கணவருமான தர்மேந்திராவிற்கு இந்தாண்டு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டிருந்தது.

தர்மேந்திரா BJP யின் பஞ்சாப் மாநில எம்.பி.,யாக இருந்தவர். அவரது மனைவி ஹேமாமாலினி தற்போது BJP யின் ராஜ்யசபா எம்.பி.,யாக உள்ளார். எப்படி தர்மேந்திராவிற்கு விருது கிடைத்தது?


ஹேமாமாலினியும், பிரதமர் மன்மோகன் சிங்கும் ராஜ்யசபா உறுப்பினர்கள். அதனால் பிரதமரைச் சந்தித்தார் ஹேமா. "என் கணவர் தர்மேந்திரா சினிமா உலகத்திற்காக தொண்டாற்றியுள்ளார். அவர் BJP,யில் இருந்தாலும், BJP ஆட்சியில் இருந்த போது அவருக்கு எதுவும் செய்யவில்லை.

என்னுடைய ராஜ்யசபா பதவிக்காலமும் முடியப்போகிறது. எனவே, தர்மேந்திராவிற்கு  பத்ம பூஷன் தர, நீங்கள் உதவ வேண்டும்' என்று
கெஞ்சி வேண்டுகோள் வைத்தார் ஹேமா. அதன் பலனாக மன்மோகன் சிபாரிசில் தர்மேந்திராவிற்கு விருது கிடைத்தது.

சிந்திக்கவும்: தர்மேந்திரா எம்பியாக இருந்து மக்கள் தொண்டு செய்யவில்லை, மாறாக தனது சினிமா துறைக்குத்தான் தொண்டு செய்துள்ளார். நாட்டின் உயர்ந்த விருதுகளை ஏன்? நடிகர், நடிகைகளுக்கு வழங்குகிறார்கள்.

நடிகை கெஞ்சியதும் மனம் உருகினார் இந்திய பிரதமர். குஷ்பு கொஞ்சினால் அவருக்கும் விருது கொடுக்க ஏற்ப்பாடு செய்வார். தேசத்து விவசாயிகள் வறுமையில் சாவது தொடர்கிறது. ஏழ்மை, அடிப்படை சுகாதார வசதிகள் இல்லாமை என்று மக்கள் தவிக்கும் பொழுது அதை பற்றியெல்லாம் கவலைப்படாத பிரதமர் கார்பரேட் நிறுவனங்களின் கைக்கூலி ஆகிப்போனார்.

பாரத பிரதமர் தன்னை போன்ற ராஜியசபா உறுப்பினர்களின் சினிமா குடும்பங்களுக்கும், பணக்காரர்களுக்கும் பதவிகளும், பரிசுகளும் கொடுப்பதில் மூழ்கிக்கிடக்கிறார். நாடுமுழுவதும் அணு உலைகளை கட்டி இந்தியாவை இருளில் இருந்து ஒளிரவைக்க போகிறார் இந்த அற்புத பிரதமர் நம்புங்கள்! மக்களே நம்புங்கள்!.
Title: Re: நடிகை கொஞ்சியதும் மனம் உருகினார் இந்திய பிரதமர்!
Post by: RemO on February 11, 2012, 08:48:31 PM
sevai seithavargalai maranthu , thiraipada nadikarkalaiyum , vilayattu veerarkalaiyum perithaaga ennum thesathil thaaney irukiraar antha pirathamarum

makkalai polavey avarum nu than sola thonuthu