FTC Forum

தமிழ்ப் பூங்கா => இங்கு ஒரு தகவல் => Topic started by: Yousuf on July 20, 2011, 12:01:11 PM

Title: புத்தாண்டின் பெயரால்!!!
Post by: Yousuf on July 20, 2011, 12:01:11 PM
கடந்த சில ஆண்டுகளாக முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு, புத்தாண்டு கொண்டாட்டங்கள் நகரங்களின் வீதிகளை நசுக்கித் தள்ளுகின்றன. பெருந்திரளான ஜனத்திரள் சாலைகளில் நிரம்பி நின்று பேய்பிடித்தவர்களைப் போன்று, புத்தி மழுங்கி கத்தி, கதறி, ஓலமிட்டு, ஒரு புதிய ஆண்டை வரவேற்கும் அவலம் தொடர்கிறது.

ஆண்டின் தொடக்கத்திலேயே, இளைஞர்களுக்கு பைத்தியம் பிடித்து விட்டதோ என்று கருதும் அளவுக்கு உற்சாகம் கட்டுப்பாடு இழக்கிறது. குறிப்பாக டெல்லி, மும்பை, கல்கத்தா, சென்னை ஆகிய பெருநகரங்கள் அன்றைய தினம் கலாச்சார சீரழிவின் விளிம்பு நிலைக்கு வந்து விடுகின்றன.. ஊடகங்கள் வர்த்தக நோக்கில் புத்தாண்டு தினத்தை ஒரு சர்வசமய பண்டிகை போல் வர்ணிக்கின்றன.

நட்சத்திர விடுதிகள் விழா ஏற்பாடுகள் செய்து தருகின்றன. சுமார் 1200 முதல் 10,000 ரூபாய் வரை அனுமதிக்காக, விடுதிகளின் தர அடிப்படையில் ஒரு நபருக்கென்று வசூலிக்கப்படுகிறது. குறிப்பாக தகவல் தொழில் நுட்பம் மற்றும் கணினி தொடர்பான பணியிலிருப்பவர்களுக்கு இந்த தொகை என்பது அவர்களுடைய ஒரு நாள் வருமானமே அதை ஆண்டுக்கு ஒருமுறை செலவிடுவதில் சுமை இல்லை. இதனால் 'ராத்திரி கூத்தடிக்கும் இந்த கொண்டாட்ட கும்மாளம் படு ஜோராக நடக்கிறது.

உற்சாக மிகுதியாலும், வெறியாட்டத்தினாலும், அத்து மீறல்கள் நடக்கிறது. குறிப்பாக, பெண்கள் மீது பாலியல் வன்முறை மிகச் சாதாரணமானவை, பலர் வெளியில் கூறுவதில்லை. சில நேரங்களில் செய்தியாகிறது. கடந்த ஆண்டுகளில் மும்பை  நட்சத்திர விடுதியில் நடந்த அட்டூழியம் பத்திரிகைகளில் புகைப்படத்துடன் வெளியானது. இரண்டு பெண்கள் மீது வெறி கொண்ட இளைஞர் கும்பல்; ஆளுமை செய்தது கும்பலில் 80 பேர் இருந்தனர் என்கிறார்கள்.. நிலைகுலைந்த பெண்கள் இருவரும் அதிர்ச்சியில் உறைந்தனர். அவர்களை அழைத்து வந்திருந்த ஆண் இளைஞர்கள் செய்வதறியாது உணர்ச்சி இழந்தனர்.

இனிமேல் அவர்கள் இத்தகைய கழிப்பிடங்களை திரும்பிக்கூடப் பார்க்க மாட்டார்கள். என்பதற்கு இந்த ஒரு சம்பவம் போதுமானது. சென்னையில், ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள சவேரா என்ற நட்சத்திர விடுதியில் நீச்சல் குளத்துக்கு மேலே கட்டப்பட்ட மேடை சரிந்ததில், பொறியியல் துறை இளைஞர் ஒருவர் பரிதாபமாக இறந்து போனார். சம்பவம், ஒரு மரணத்தை ஏற்படுத்திச் சென்றதை அடுத்தே அரசு நடவடிக்கை தொடங்குகிறது. விடுதியின் மேலாளர் கைது செய்யப்படுகிறார். நீச்சல் குளத்தின் மீது ஆண்டுதோறும் மேடை அமைக்கப்படுவது பழமையாம்.

விடுதியில் விழாக்கோலம் காண்கிறபோதே, காவல்துறை, முறையான கண்காணிப்பை செலுத்தியிருக்க வேண்டும். குற்ற முகாம்களில் இருந்தே, காவல்துறைக்கு லட்சங்களில் லஞ்சம் தரப்படுவதாக எழும் குற்றச்சாட்டுகள், இதுபோன்ற நிகழ்வுகளால் உண்மைப்படுத்தப் படுகிறது. விடுதிகளில் நிர்வாண நடனங்கள் நடத்தக்கூடாது என்று உத்தரவிடும் காவல் துறை, அந்த உத்தரவுகள் செயல்படுத்தப் படுகிறதா என்ற கண்காணிப்பைத் தொடர்வதில்லை.

பிழைப்பதற்காக விபச்சாரம் நடத்தும் கீழ்தட்டு மக்களைத் தேடிப்பிடித்து சிறையி லடைக்கும் காவல்துறை செல்வந்த வீட்டு செல்வங்கள் செய்யும் சில்மிஷங்களை கண்டு கொள்வதில்லை. 'மாடி வீட்டு' கலாச்சாரச் சீர்கேடுகளை, அவர்களது வாழ்க்கைத் தரம், அவர்களது படிப்பு மற்றும் தொழில் முனைவின் வழியே ஈட்டும் வருவாய் பயன் காரணமாக நடவடிக்கைகள் கமுக்கமாக தவிர்க்கப்படு கின்றன.

இனி வருங்காலங்களிலாவது புத்தாண்டின் பெயராலும் இதர பண்டிகைகளின் பெயராலும் நடைபெறும் காமக்களியாட்டங்களும், கலாச் சாரச் சீர்கேடுகளும் தடுக்கப்பட அரசும், காவல்துறையும் உரிய கவனம் செலுத்த வேண்டும். சமூக அமைப்புகள் இதுகுறித்த பிரச்சாரங்களை தீவிரப்படுத்தி நமது மண்ணின் பாரம்பரிய நாகரீகத்தை மீட்டெடுக்க வேண்டும்.
Title: Re: புத்தாண்டின் பெயரால்!!!
Post by: Global Angel on July 20, 2011, 02:28:58 PM
puthithaga ennanamo ellam kandu pidikuranga thanka kaliyaattathukagaa.....atha thadai  pananum mothal ;)
Title: Re: புத்தாண்டின் பெயரால்!!!
Post by: Yousuf on July 20, 2011, 03:22:53 PM
Ithai makka unarnthaal thaney thadai seiiya...!!! Avargalukku idhil yellam kavalai illai...!!!