FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: ChuMMa on December 30, 2016, 08:13:58 PM

Title: அட சொல்லுங்களேன்
Post by: ChuMMa on December 30, 2016, 08:13:58 PM
இருபது வருடம் வளர்த்த தாயை
இருபது நொடிகள் பார்த்த அவள் மறக்கடிக்கிறாள்

இருபது நொடி அவளை பிரிந்தாலும்
இருபது யுகமாய் மாற்றியடிக்கிறாள் ..

காதல் பெரிதா இல்லை
தாயின்  அன்பு பெரியதா ?
Title: Re: அட சொல்லுங்களேன்
Post by: MyNa on December 31, 2016, 09:34:50 AM

ஆழ்ந்து சிந்திக்க வைத்த  கவிதை..

அவள் தாயை மறக்கடிக்கச் செய்யவில்லை..
இன்னொரு தாயாய் உருவெடுத்து  கொண்டிருக்கிறாள்..

பாசத்தில் ஏது  பாகுபாடு..
ஒருத்தி நம்மை சுமந்த பெண்..
இன்னொருவள் நமக்காக சுமக்க போகும் பெண்..
Title: Re: அட சொல்லுங்களேன்
Post by: Mohamed Azam on December 31, 2016, 10:04:33 AM

ஒருத்தி நம்மை சுமந்த பெண்..
இன்னொருவள் நமக்காக சுமக்க போகும் பெண்..



மிகவும் அருமையான விளக்கம் நண்பி
Title: Re: அட சொல்லுங்களேன்
Post by: ChuMMa on December 31, 2016, 12:19:47 PM
ஒரு தாய் உருவாக ...
உன் தாய் கனவாக ...
நினைப்பது என்ன நியாயம் தோழி ..?
Title: Re: அட சொல்லுங்களேன்
Post by: SarithaN on December 31, 2016, 05:36:04 PM
வணக்கம்!

தாயை மறந்தால், ஏன்!
தாயை சரியாக உணரா ஒருவனால்
இன்னொருத்தியை தாயக்க முடியும்.

ஆனால் அவனால் நல்ல
கணவனாக நிலைக்க முடியாது!
தந்தையாகவும் இருக்க முடியாது!