FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: ஸ்ருதி on February 07, 2012, 08:56:54 PM

Title: அடுத்த பிறவியில்
Post by: ஸ்ருதி on February 07, 2012, 08:56:54 PM
என்னை விட்டுச்
செல்லும் போது
என் உயிரையும்
உன் கைப் பையில்
போட்டு எடுத்துச்
செல்லும் வித்தையை
எங்கே கற்றுக்
கொண்டாய்..!!!

உனக்கென்ன எளிதாய்
சொல்லி விட்டாய்,
”முடிந்தால் அடுத்த பிறவியில் சேருவோம்”
என்று..
என் உயிர் இப்போதே
தவம் இருக்கத்
தொடங்கி விட்டது,
என் மரணத்தை எதிர்பார்த்து..!!
Title: Re: அடுத்த பிறவியில்
Post by: Yousuf on February 09, 2012, 09:58:15 AM
காதல் தோல்வியை பற்றிய உணர்ச்சி பூர்வமான கவிதை என்று நினைக்கிறேன்!

நல்ல கவிதை சகோதரி ஸ்ருதி!
Title: Re: அடுத்த பிறவியில்
Post by: Dharshini on February 09, 2012, 02:54:02 PM
arumaiyana kavithai chlm kaathal valiyai veli paduthiya vitham super
chlm inime boys ku bag thara kudathunu rules podalamda

Title: Re: அடுத்த பிறவியில்
Post by: aasaiajiith on February 09, 2012, 04:57:38 PM
மறுபிறவிகளில் நம்பிக்கை அற்றவன்  நான்
இருந்தும் ,அறிந்தே உரைத்தேன் நான்
மண்ணில் வாழும்போதே எனக்கு
சொர்க்கம் காட்டிய  வானதேவதை நீ
எப்படி விட்டுசெல்வேன்  உனை அப்படியே
அதனால் தான் மாறுதலாய் ,
மனதிற்கு முழு ஆறுதலாய் ,
தேவையானபொழுது தேறுதலாய்
இருக்குட்டுமே எனும் அர்பாசையில் ...
Title: Re: அடுத்த பிறவியில்
Post by: RemO on February 09, 2012, 06:38:25 PM
Kaathal kavithai elam super ah eluthura shur nee

very nice

but elam failure ah irukuthu
Title: Re: அடுத்த பிறவியில்
Post by: gab on February 10, 2012, 04:02:22 AM
நெஞ்சை தொடும் காதல் உணர்வுகள் கவி வரிகளாய் மிளிர்கின்றது. நல்ல கவிதை ஸ்ருதி.