உன் நினைவுகளோடு நான் இருக்க..
எதிர் பார்த்த வார்த்தை
என் செவிகளில் கனமாய் விழ..
ஒரு வருடம் ஆகிற்று..
அப்போது ஒவ்வோர் நிமிடமும்
காத்திருந்த காலம் கனவை போக..
வேண்டவே வேண்டாம் என்றாய்..
என்னை விட்டு போய் விடு ..
கனல் காற்றை வீச..
என் மனம் சுக்கு நூறாய் போக..
ஒவ்வோர் நிமிஷங்கள் யூகங்களாக..
விழிகளில் கண்ணீர் கடலாக ..
உன்னிடம் பேசிய வினாடிகள்
மனதில் இருக்க..
இப்போது என் மனம் மகிழ்ச்சியில் இருக்க ..
உன் வார்த்தைகள் என் மனதில் தேனாய் இருக்க..
எதிர் பார்த்த இதயம் திரும்பவும் இனைத்திடாய்..
ஒரு புறம் இன்பத்தில் இன்னோர் புறம் துன்பத்தில் ..
இன்று விழிகளில் கண்ணீர்.. சந்தோஷத்தில்
அன்று மனதின் வேதனையை காட்டியது விழிகள் ..
என்றும் எப்போதும் உன் நினைவில் வாழும் நான்..
(https://s29.postimg.org/6pua5akl3/image.jpg)