FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதை நிகழ்ச்சி - ஓவியம் உயிராகிறது => Topic started by: Forum on December 25, 2016, 05:44:48 PM

Title: ஓவியம் உயிராகிறது -நிழல் படம் எண் - 130
Post by: Forum on December 25, 2016, 05:44:48 PM
ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....


**இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக  )..

***தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .

**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

.


நிழல் படம் எண் : 130
இந்த களத்தின்இந்த  நிழல் படம் FTC Team  சார்பாக     வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...

.

உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Ffriendstamilchat.org%2Fnewfiles%2FOVIYAM%2520UYIRAAGIRATHU%2F130.jpg&hash=56e17ecc584359e6d048e54a698290ddb16232fb)
Title: Re: ஓவியம் உயிராகிறது -நிழல் படம் எண் - 130
Post by: SarithaN on December 26, 2016, 12:03:14 AM
காலமே உன்னில் ஒருபோதும்
இல்லை மாற்றம்
ஆனால் உன்னால் மட்டுமே
உலகில்
உள்ளங்களில்
உண்டாகும் மாற்றம்,
நீ மட்டுமே மாறாதவள் !

உன்னை நிலையானவள்
என சொல்லேன்.
கடவுள் சொல்லும் வரை
நீயும் இருப்பாய்.!

என்வீட்டு கடிகாரத்தில் - நீ அசையும் அழகு
என்ன அழகு அப்பப்பா...

நொடியாய் 31 557 600
நிமிடமாய் 525 960
மணியாய் 8766
நாளாய்       365    1/4
வாரமாய்     52
பன்னிரு மாதமாகி வருடமாகிறாய்.!

வருடமே!
உனக்கு இத்தனை பருவமா.?
எத்தனை அழகாய்.....
 
முடிவின்றி தொடர்கிறாய்
கடவுள் அனுமதிக்கும்வரை இருப்பாய் !

201ஆறே நீ இதமாய் வந்தாய்
மென்மையான பெண்ணாய்
நின்றாய். உலகில்.!

மனிதன் உன்னை குழந்தையாய்
பிள்ளையாய் குமரியாய்
தாயாய் பாட்டியாய்  பூட்டியாய்
முன்னவளாய் மூத்தவளாய்
கடவுள் முதல் படைத்தவளாய்
காணமறுத்து!

உண்னை கொடுமை செய்து
பலவந்தமாய் சீரழித்து
சிதைத்தான். மனிதன்!
நாதியற்று நின்றாய்.!

நீ கோவம் கொண்டாய்
அரக்கியானாய்.!
 
வெள்ளப் பெருக்குகளாய் மழையாய்
புயலாய்
பூவி நடுக்கமாய்
தீயாய்
இடிமின்னலாய்
தேவைக்கு மீதமாய்
ஏராளம் தாரளமாய்,,,,,

கிழர்ந்தெழுந்தாய் கொன்று குவித்தாய்.!
ஆனாலும்  நீ 201ஆறே.....

அழகு மென்மை
நீதி உண்மை கொண்டவள்.....

கடவுள்
உலகில் உள்ளவர் மேலும்
உள்ளவை மேலும் இரங்க.
மீதம் வைத்தாய்
201ஏழாய் தொடர்வாய்

201ஏழே வழக்கம் போல் அழகாய்
அன்பாய் உண்மையாய் நன்மையாய்
வருவாய்.....

மனிதன் தன் பாவத்தை கொடுமையை
அநீதியை நிறுத்தபோவதும் இல்லை!
புண்ணியனாய் மாறப்போவதும் இல்லை!
கட்டளையும் தொடர ஊழியும் இறங்கும்,
கொண்ட அன்பால் கலங்குவார் கடவுளும்.

உலகில் கொடியவன் மனிதன்!
பாவமாய் பாவத்தின் உருவமாய் - நிற்பான்
உன்னை சீர்கெடுப்பான்.!

நன்மைகளை பலர் சொல்வார்
அனுபவித்து - ஆனால்!

தீமைகளும் கொடுமைகளும் நீ செய்வது
உன்னை காயம் செய்வதாலே, - எனும்
உண்மையும் நான் சொல்ல வேண்டுமே!

இயற்கை தானே இயங்குவதில்லை
இயக்கப் படுவதனாலே இயங்கும் சக்தி.!
முதலும் முடிவுமில்லாது.....
இருப்பவராய் இருப்பவரால் .....
இயக்கப்படு சக்தியே இயற்கை.!

உண்டானவை எவையும்
தானாய் உண்டானவை அல்ல
உண்டாக்க ஒருவர் இருந்து
மனிதனுக்காகவே உண்டாக்கப்பட்டவை
உண்டாக்கியவரே கடவுள் - முதலும் முடிவுமில்லாதவர்.

உலகில் பெருகிய பாவம்
முடிவின்றி தொடர்ந்து பெருக
கடவுள் சினம் கொள்ளவார் -  கவலையோடு கட்டளையிடுவார் !
இயற்கை நிறைவேற்றும் கண்ணீரோடு !

நீயும் பொறுமை இழப்பாய்
பொங்கி எழுவாய் 2016 அழித்ததிலும்
அதிகமாய் அழித்து போவாய்!.




குறைகள் என்னுடையவை  நிறைவுகள் கடவுளால்
நன்றியும் மேன்மையும் கடவுளுக்கே
Title: Re: ஓவியம் உயிராகிறது -நிழல் படம் எண் - 130
Post by: SwaranGaL on December 26, 2016, 11:40:34 PM
2016 ஆம் ஆண்டு எல்லா விதத்திலும் அழகாய்
அன்பாய் ஆரவாரமாய் அரவணைத்து
ஆசிர்வதித்தது குழந்தை போல் தவழ்ந்து
தவழ்ந்து  தவழ்ந்து  வளர்ந்து முதிர்ந்து
காலமும் விரைந்து விரைந்து உதிர்ந்து
 
அமைதியும் மனநிறைவும் தந்த
இனிமையான நாட்கள் நினைவுகளாய்
சோகமான நாட்கள் தந்த
வருத்தமும் மனக்கஷ்டமும் கசப்புகளாய்
 
ஒன்றல்ல இரண்டல்ல மூன்றல்ல
தினசரி பசுமையாய் புது அனுபவங்கள்
ஓவ்வொரு நாளும் ஏற்றமும் இறக்கமும்
மறப்பதற்கு சில நினைப்பதற்கு பல
 
இயற்கையின் அழகு தினம் ஒரு வண்ணம்
செயற்கை அழகு மனிதனின் எண்ணம்
இயற்கை மனிதனைக் காட்டிலும் வலிமை
வர்தா புயல் தாக்கத்தின் விளைவுகள்
இயற்கை செய்த இவ்வாண்டின் பதிவுகள்

வாழ்க்கை எல்லா ஆண்டிலும் வேடிக்கைதான்
எது நடந்தாலும் மீண்டு எழுவது வாடிக்கைதான்
 எதனையும் எதிர்கொள்ளும் மனத்துணிவே
எவ்வகை சங்கடங்களுக்கும் விடுதலை.

இந்த நிறைவில் தான் என்னவோ மனிதன்
இயற்கையின் மேன்மையினை உணர மறுத்து
இயற்கையோடு விளையாடுகிறான் .
 
காலங்கள் மாறும் இயற்கையிலே
கோலங்கள் மாறும் வாழ்வினிலே
மாண்டவர் மீண்டோர் யாரும் இல்லை
சென்ற வருடம் சென்ற வருடமே
 
2017ஆண்டிற்கு  தயாராய் மாலையோடு
கண்ணில் மின்னிடும் ஜோதியோடு
மறந்து விட்ட பணியின் குறிப்போடு
அடைய துடிக்கும் இலக்கோடு
வரலாற்றின் பக்கம் நல்ல செய்தியை
நித்தம் எழுதிட இந்த பேனாவோடு
உன் விடியலுக்காய் காத்திருக்கேன் !

Title: Re: ஓவியம் உயிராகிறது -நிழல் படம் எண் - 130
Post by: EmiNeM on December 27, 2016, 10:46:00 AM
கசந்த நிமிடங்களை
கடத்தியது உன்னோடான
பந்தத்தின் நினைவுகள்,
காரணங்கள் அற்ற
சண்டைகள் எல்லாம்,
நினைத்து சிரிக்கிறேன்,
இன்பத்தின் இனிமைகளை
இலக்கின்றி தந்தாய்,
உனக்கும் எனக்குமான
பந்தத்தில் தீண்டாமையை
வழக்கொழிய செய்தாய்...
காரணம் தெரியவில்லை
உன்மீதான ஈர்ப்பிற்கு...
தேடவும் தோன்றவில்லை,
காரணம் எதுவாயினும்
கடந்த காலத்தில்
நீயின்றி முழுமையில்லை
என் வாழ்க்கை பயணத்தின் பக்கங்கள்.

புத்தாண்டின்
புதிய பக்கங்களிலும்
நீயே நிறைந்திருப்பாய்...
அதில்
சண்டைகளுண்டு
சமாதானங்களுக்காக..
தவிப்புகள் உண்டு,
உன் வார்த்தைகளுக்காக..
எதிர்பார்ப்புகளுண்டு,
உன் மௌனக்கலைப்பிற்காக..

இனிய புத்தாண்டு
 நல்வாழ்த்துக்கள்...
Title: Re: ஓவியம் உயிராகிறது -நிழல் படம் எண் - 130
Post by: இணையத்தமிழன் on December 27, 2016, 11:46:47 AM

ஆதவனும் மறைந்தது இருளும் பிறந்தது
கடிகாரமும்  ஒலித்தது  புத்தாண்டும் பிறந்தது
வீதி முழுக்க மக்கள் கூட்டம்
எங்கும் முழங்கிடும் வேட்டு சத்தம்
வானம் முழுக்க வண்ண பட்டாசுகள்
மக்களோ ஆரவாரத்தில் துள்ளிக்குதிக்க

நம் வாழ்வினில்  தொலைத்த வருடத்தினை மறந்து
அனைவரும் ஆனந்தத்தில் திளைத்திட கண்டேன்

ஆங்கில புந்தாண்டு மட்டும் விடுமுறையில்
தமிழர் புத்தாண்டு எங்கே  நம் தலைமுறையில்

பச்சிளம் குழந்தையும் கூறிடும் ஆங்கில மாதங்களை
அடுக்குமொழி பேசுபவரும்
தடுமாறி நிற்கிறோம் தமிழ் மாதங்களில்
நம் அடையலைத்தாய் தொலைத்து
நம் மரபையும் மறந்து
நம் மொழியையும் சிதைக்கிறோம் எனவே

வீழ்ந்துகொண்டிருக்கும் நம் தமிழ் அன்னை
இந்த வருடமாவது வாழும் என்றும் எண்ணி
புத்தாண்டை எதிர்நோக்கி காத்திருக்கும் தமிழன் 
இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்
                                                          -இணையத்தமிழன்
                                                           ( மணிகண்டன் )
Title: இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
Post by: BlazinG BeautY on December 27, 2016, 01:48:54 PM
இனிதாய் இன்பமாய்  துடங்கி 
இன்னும் சில வினாடிகள் ..
என் ஆயுள்  முடிய
உலா வருகிறது என்னுள் பல ..

நான் கடந்து வந்த பாதைகள் 
சுகமான  கசப்பான நினைவுகள்
நான் 2016 ஆனந்தமாய்  பிறந்தேன்
என்னை வரவேற்றனர் மிக சிறப்பாய்..

நான் சந்தித்த அனைத்தும்
நிறைய வித்தியாசங்களை கண்டேன்
ஒவ்வோர் நாளும் பல மனிதர்கள்
அவர்களுள் பல வித குணங்கள்

அன்பாய் அனுசரணையை பலர்
நேசித்தனர் இயற்கை மிருங்களின் மேல் 
சிலர் அசுர குணம் தலைவிரித்தாடியது
துன்புறுத்துவதில்  ஓர்  இன்பம்   

இயற்கையும் மனிதர்கள் போல
அமைதியான  சுபாவம் உண்டு ..
அதற்கும் கோபம் வரும்  என்று
காட்டியது வர்டா புயல்.. 

இன்பத்தை புரட்டி போட்ட துன்பம் ;
துன்பத்தை புரட்டி போட்ட இன்பம்  ;
என் நினைவுகளுக்கும் கவலைகளுக்கும் 
இந்த நொடி முடியட்டும்   ..

புதியவனை வரவேற்கிறேன் 2017 
நம் இன்னல்களை எதிர்கோள்ள
மனஉறுதி கொள் -இன்பமாய்
நகர்ந்து செல் தோழா ..

விடைபெறுகிறேன் தோழா நான் 2016
அன்பான இதயத்தில் இருந்து வரும்
வாழ்த்துக்கள் - புதியதொரு வருடம் 2017 
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்


(https://s28.postimg.org/qlvtuyavx/2017_1.jpg)
Title: Re: ஓவியம் உயிராகிறது -நிழல் படம் எண் - 130
Post by: DaffoDillieS on December 27, 2016, 05:28:26 PM
மாற்றம் ஒன்றே நிலையானது..!
நினைவு ஒன்றே மாறாதது..!
வீணாக்கிய காலம் திரும்பப் போவதுமில்லை..
காலம் நமக்காகக் காத்திருக்கப் போவதுமில்லை..

என்றைக்கோ நிகழ்ந்தது நேற்று நிகழ்ந்தது போல..
அடிமனதில் வேரூன்றிக்கிடக்க..
நாட்கள் மட்டும் வேகமாய் நகர்வது தாம் ஏனோ!
ஓட்டமும் நடையுமாகக் கடந்து கொண்டருக்கும் மனித வாழ்வின் நியதி..
இது தாமோ!

2016 அள்ளித் தந்தது பலதும்..
செல்லும் போது..
விட்டு வைத்திருப்பதேனோ சொர்ப்பம்..
கடந்த காலத்தின் நினைவுகளும் சுவடுகளும்..
அழியாக் கோலமாய் இருதயங்களில் கொலு வீற்றிருக்க..
வரும் காலத்தின் இனிய நினைவுகளைப் பூட்டிக் கொள்ளத்தான்..
மனதில் இடமிருக்குமோ!..
கசந்த நினைவுகளைத் தள்ளி விட்டு..
வரப்போகும் அழகிய நினைவுகளுக்கு வழிவகுப்போமே..!

கடந்த காலமோர் துன்பம்..
வருங்காலமோர் புரியாப்புதிர்..
நிகழ்காலமோ நம் கையில் கிடைத்த வரம்..!
சென்றதையும் வரப்போவதையும் உதரி..
இன்றைய தினத்தை மனதார ரசித்து..
சுதந்திரப் பறவைகள் போல்..
வாழ்வை எதிர் கொள்வோமே!!..

குறையேதுமில்லா வாழ்வு தான் இப்புவிதனில் உண்டோ!
மகிழ்ச்சி மட்டுமே கண்ட வாழ்க்கை தான் சிறக்குமோ!
குறையாவற்றையும் நிறைகளாக்கும் தந்திரங்கள் தாம் கற்போமே!..
வாழ்வின்..
இலையுதிர் காலங்களையும்..
புயல் வீசும் காலங்களையும் மறந்து..
வசந்த காலத்தை தாம் உருவாக்குவோமே!!

இறுதியில் எதையும் நாம் எடுத்துச் செல்வதில்லையே!
இழந்தவற்றையும் நிகழ்ந்தவற்றையும் மாற்ற இயலாதிருப்பின்..
நினைப்பது மட்டும் என்ன புண்ணியமோ!

மனதின் புணிதம் நல்ல சிந்தனைகளின் வெளிப்பாடு..!
தேவையற்ற சிந்தனைகளை ஒதுக்கி..
வாழ்வியல் பாடங்களில் தேர்ச்சி பெற்ற மாணவர்களாய்..
2017ஐ ஆரவாரத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும்..
வரவேற்போமே!!

Wish u all a very happy 2017.. !!
Title: Re: ஓவியம் உயிராகிறது -நிழல் படம் எண் - 130
Post by: RyaN on December 27, 2016, 09:50:57 PM
நான் உன்னை மன்னித்தது போல் நீயும் உனக்கதிதிராய் குறை செய்தோரை - மன்னி

2016 நான் நன்மையாகவே வந்தேன்
இன்பமே தந்தேன்
அற்பமாய் அன்று மட்டுமே போற்றி
புகழ்ந்தீர்கள்

கண்டவரை எல்லாம் வாழ்த்தி
முத்தமிட்டு கட்டியணைத்து - மகிழ்ந்தீர்கள்

என் பெயரால் மது புகை போதை விபச்சாரமென
கேடுகளும் கேவலங்களும் செய்து மகிழ்ந்தீர்கள்
கவலையோடு நிண்றிருந்தேன் - நானோர் பாவமாய்.

நான்வரும் முதல் நாளே உலகத்தில்
பாவம் அதிகாமாய் போவதேனோ - மனிதா

என் காலமதை கொண்டு நீ செய்த வெகுமதிகள்
என்னவென்றால் பதிலுண்டா உன்னிடம் - சொல்
அயலார்க்கு நீ செய்த நன்மை என்ன ?
பெற்றாருக்கும் உற்றாருக்கும் நீ தந்த
மகிழ்ச்சி என்ன ?

நண்பர்களாய் சேர்ந்து நாட்டுக்கு தந்த
நன்மை என்ன ?
இயற்கையை வளத்தை காக்க நீங்கள்
செய்த கடமை என்ன?
எந்த நன்மையும் செய்யவில்லை.
ஏன் தீங்காவது செய்யாதிருந்தாயா?

அனைத்து தீதும் செய்வாய்
கெட்டு நொந்து போவாய்
ஆனால் சொல்வாய்
2016 ஏய் சனியன் பிடித்த வருடம் என்று.
டேய் மனுசா நீயா நானா? சனியன்.

அக்காள் வருவாள் 2017ஆய்
செய்த தவறை திருத்து
என்னால் நீ இழந்தது ஒன்றுதான்
உன் ஒரு வயதே அது.


அக்காள் வருவாள்
அவளாலும் நீ இழக்கப் போவது
அதே ஒரு வயதுதான்

என் காலத்தில் நீ நீசனாய் வாழ்ந்ததால் - இழந்த
உறவை ஒற்றுமையை கல்வியை
அன்பை நன்மையை நீதிநெறியை
இன்னமும் அடையவேண்டிய
அத்தனையையும் பெற்று மகிழு
அடுத்தோரையும் மகிழ்வி

என்னை சபித்ததுபோல் என் அக்காவையும்
சபிக்காதே -
தவறுகள் அனைத்தும் நீயே செய்தாய்
தண்டணையும் வசையும் எனக்கா ?
நீதியில்லா இழிசெயல் இவை - எனியும்
நாங்கள் பொறுத்திடோம்.

உனக்காக வருகிறோம் உன்னதமாய்.
அன்புகொண்டு உலகில் வாழு.
நான் உங்களை மன்னித்து வாழ்த்தி
விலகுகிறேன்.

என் அக்காவை உனது உயர்வான
வாழ்க்கை காலமாய் கொண்டு
உயர்ந்திடு மனிதா.

குறைபொறுத்து நான் உன்னை வாத்துகின்றேன் .

Title: Re: ஓவியம் உயிராகிறது -நிழல் படம் எண் - 130
Post by: ரித்திகா on December 28, 2016, 07:34:59 AM
காலம் சக்கரமாக உருண்டதோ ....
365நாட்கள் இறக்கைகட்டி பறந்ததோ....   

கல கல வென ஒன்றுகூடி
சிரித்திட்ட தருணம் .....
அடக்கிவைத்த கவலைகள் விழிகளில்
அருவியாக வழிந்த தருணம் ....

ஈடுகொடுக்க முடியா  இழப்பு ....                                 
அதை ஏற்க முடியாமல் நெஞ்சில் தவிப்பு ...
புதியதாக சூழ்ந்திட்ட உறவுகள் ...
வரவுக்கேற்ற செலவுகள் ....

எல்லையற்ற அன்பு ...
அதனுள் கற்றேன் பல பண்பு ....
நிறைவேறா ஆசைகள் ....                                 
நிறைவேற்றிட துடித்திடும் எண்ணங்கள் ....

இணையத்தில் உண்டான பந்தம் ...
இனி வாழ்வில் தொடர்ந்திடும் சொந்தம் ....
விலைமதிப்பில்லா மகிழ்ச்சியான நினைவுகள் ....
மனதில் செதுக்கிய சிற்ப்பங்களாக  ....

தாயின் மடியில் உறங்கிய நொடி ....
தந்தையுடன் ஊர்சுற்றிய பொழுது ....                                 
உடன் பிறப்புக்களுடன் விளையாடிச் -                                                             சண்டையிட்ட தருணங்கள்  ....   
நினைக்க நினைக்க திகட்டாத தேனாய் ...                       

மறக்க நினைத்து மறக்காமல்
நெஞ்சில் சுமந்த வலிகள்....
மறந்தும்  மறந்திட வாய்ப்பின்றி
மனதில் பட்டாம்பூச்சியாய் வலம் வந்திடும்           
அழகான நினைவுகள் ....

இன்பங்களும் துன்பங்களுமாய்
காலில் சக்கரம் கட்டி 2016ஆம் வருடம் முடிகிறது .... 
துன்பங்களில் பாடம் கற்றேன் ....
இன்பங்களில் நன்றியினை தெரிவிக்க கற்றேன் ...               
2017துன்பங்கள் குறைந்து இன்பங்கள் நிறைந்திருக்க
இறைவனைப் பிரார்த்திக்கிறேன் ....                                                                         

பிறந்திடும் 2017 ஆம் ஆண்டு.....
வாழ்வில் வெற்றிகளையும் மிகிழ்ச்சியையும்
ஆரோக்கியத்தையும் பரிசளித்திடட்டும்.....
வாழ்த்துகின்றேன் என் நண்பர்களுக்கு
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.....