FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Maran on December 21, 2016, 12:26:09 PM
-
ஏரியில் ஒருவன் !
உட்காரப்
புல்வெளி.
எதிரே
நீர்வெளி.
நீர்மேல் எண்ணெயாய்
சூரியன் .
பால் சொட்டுகளாய்
பறவைகள் .
முட்டாமல் மோதாமல்
இணக்கமாய் காற்று .
தூரத் தூர ரயிலோசைக்கும்
செவிக் கூசும் நிசப்தம் .
..............................................
................................
எல்லாம் தவிர்த்து
கவனமாய் காத்திருக்கிறான்
கரையில் ஒருவன் .
தொண்டையை கிழித்து
கண்ணைத் துளைத்த
தூண்டில் முள்ளுடன்
துடிக்கும் ஒரு
மீனைக் காணும் ஆவலுடன் .
-
தோழா மாறா வணக்கம்,
சிறு கவிதையே ஆயினும்
மேலோட்டமாய் கடந்திட
முடியவில்லை தோழா!
எதையாயினும் உணர்த்தி
உலுக்குகிறாய்!
தூண்டில் முள்ளுடன்
துடிக்கும் ஒரு
மீனைக் காணும் ஆவலுடன்
வாழ்த்துக்கள் தோழா, வாழ்க வளமுடன்.
நன்றி