FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: thamilan on December 20, 2016, 02:38:44 PM
-
எலும்புகள் கொண்டு
தூண்கள் எழுப்பி
நரம்புகள் கொண்டு
வேலி இட்டு
இரத்த ஆறு கொண்டு
அகழி கட்டி
இதயம் எனும்
கோட்டைக்குள்
குடி வைத்திருந்த உன்னை
திருடிச் சென்றவர் யார்? !!!
கம்பனிடம் தமிழ் கற்று
வள்ளுவனிடம் வரிகள் வாங்கி
கண்ணதாசனிடம் களவாடி
நான் வடித்த கவிதையை
களவாடிச் சென்றது யார்? !!!
தேடுகிறேன் தேடுகிறேன்
தெரிந்தால் சொல்லுங்கள்!!!
-
உங்கள் காதலாக இருக்குமோ இல்லை காதலியாக அதுவும் இல்லை என்றல் நட்பாக இருக்குமோ.. நாங்களும் தேடுகிறோம் நீங்களும் தேடுங்கள்... விக விரைவில் கிடைக்கும் நீங்கள் தொலைத்த ஒன்றை ..அழகிய தேடல் .. வாழ்த்துக்கள் தோழா
-
ஐயா தமிழ் வணக்கம்.
எலும்புகள் கொண்டு
தூண்கள் எழுப்பி
நரம்புகள் கொண்டு
வேலி இட்டு
இரத்த ஆறு கொண்டு
அகழி கட்டி
இதயம் எனும்
கோட்டைக்குள்
குடி வைத்திருந்த உன்னை
திருடிச் சென்றவர் யார்? !!!
இத்தனை ஆழமான அன்புக்காவலை
மீறியும் திருடு போகுமோ!
திருடினாரை மனிதரென சொல்லிடல்
தகுமோ!
இல்லை!
திருடு போக ஒன்றிப் போயிருந்தால்
இதுவல்லோ உலகில் பெருத்த கொடுமை.
தேடித்தர முடியவில்லை
தோழமையாய் வருகின்றேன்.
வாழ்த்துக்கள் தோழா, வாழ்க வளமுடன்.
நன்றி