FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: SarithaN on December 17, 2016, 02:39:19 AM

Title: முகநூலில் மூன்று பிள்ளை
Post by: SarithaN on December 17, 2016, 02:39:19 AM
முகநூலில் மூன்று பிள்ளை


ஏழு ஆண்டுகள் முன்னெழுந்த முகநூல் காதல்
சிறிதும் ஓய்வின்றி தொடர்ந்த காதல்
சிந்தனை வீரியங்கள் கொண்டு உயர்ந்த காதல்
அறிவின் ஆழத்தில் நிலைபெறுமென நினைத்த காதல்
கண்ணீராய் போன கதையென்னவோ!

அன்பான காதல் அழகாய் பூத்த காதல்
ஆசைகள் அனுமதியா இதயத்தின்
அன்பால் யாசித்த காதல்
 இருவருமே ஒன்றென இயம்பிய காதல்

எதிர்காலம் ஒளிபெறுமென நம்பியகாதல்
இல்லறத்தில் மூன்று பிள்ளைகள் வேண்டிய காதல்
இணைவோமென காத்திருந்த காதல்
தொடர்கையில்..........

கொலையிலும் கொடியதாய் ஓர் மௌனம்
தனியாய் பேசுகிறான் பதிலோதும் இல்லை
பதறிய இதயம் கண்ணீர் மழையில் ஏங்க
கொலையிலும் கொடிய மௌன நாதங்கள்
ஒலியின்றி இசைக்க காலங்கள் கடந்தன

மௌன நாதத்தின் கீதம் இதயத்தை பிளக்க
ஐந்து முகநூல் கணக்குகள் பிறந்தன
உயிரும் அவனும் மூன்று வரமுமாய்
ஐவர் உறவையும் ஒருவனே இணைத்தான்
தானும் அவளும் பிள்ளைகள் மூன்றும்
பேசுவது போல சுவரிலே பேசி மகிழ்ந்தான்

மூன்றுமே அவள்போல அழகிய செல்வங்கள்
கல்வியில் உயர்ந்து வளந்தனர் தாய் நாட்டுக்கு
கனிதரும் மரங்களாய் வளர்ந்து நின்றனர்
கொலையிலும் கொடிய மௌன நாதம் கலைந்து
அவள்வரும் வேளை வாழ்ந்த குடும்பவாழ்வை
காண்பிக்க காத்திருந்தான்

அவளும் வந்தாள் ஆறு ஆண்டுகளாய் கூடிவாழும்
கணவனோடும் அவன் கொடுந்த வரமாம் அவளது
மூன்று பிள்ளைகளளோடும் மகிழ்ச்சியாய் வாழும்
வாழ்க்கை அடையாளம் கொண்டே வந்தாள்!


குறிப்பு:
வலித்தவரை தேற்றும் கடமை எனக்கு தரப்பட்டது
நானறிந்த ஒருவர் வாழ்வில் நிகழ்ந்த உண்மை.
புத்திமதிகள் சொல்வது சுகம் ஏற்பது தியாகம்!
மௌனங்கள் காத்திருப்புக்களுக்கான காலங்களை
வரையறுப்போம், வாழ்வை தொலைக்காமல்.



குறைகள் என்னுடையவை  நிறைவுகள் கடவுளால்
நன்றியும் மேன்மையும் கடவுளுக்கே