FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: SarithaN on December 13, 2016, 03:25:49 PM

Title: "மலடு" மரத்துக்கு கூட வலிக்கும் வார்த்தை
Post by: SarithaN on December 13, 2016, 03:25:49 PM
"மலடு" மரத்துக்கு கூட வலிக்கும் வார்த்தை

என்வீட்டு முற்றத்தில் பெரியதோர் மாமரத்தி
பூப்பாள் பூப்பாள் இலைகளிலும் அதிகம் பூப்பாள்
காய்கனிகள் ஏதுமில்லை மலடாய் நின்றாள்
எப்போதும் ஏமாற்றம் திட்டுவது ஏராளம்
"மலடு" மரத்துக்கு கூட வலிக்கும் வார்த்தை

பலனற்றது வெட்டிவிடலாம்
தச்சனிடம் விற்று மீதம் விறகுக்கும் உதவும்
உச்சியில் தொடங்கி கிளை வெட்டையில்
மேலேறி வெட்டுபவன் வீணாக்க வேண்டாம்

வெட்டிய அனுபவத்தில் நல்மரம் வெட்டியதில்லை
மரத்தோடு கிளைக்கு நீண்ட ஆயுளுண்டு என்றான்
என்னை மேலே அழைத்தான் ஏறப்பயம் மாவை காக்க
மனிதன் சாவதா பரவாயில்லை அப்பா வைத்தமரம்

வெட்டிய கிளையருகே சென்றால் மரம்வெட்டி
கலங்கிய கண்களுடன் கூலி வேண்டாமென்றான்
மரத்துக்காய் அழுகின்ற மனிதனா மனதில் பலகேள்வி
வெட்டிய காயத்தில் மரத்தின் குருதி வழிகிறது

கையில் பிடித்து பார்க்கின்றேன் கொதிக்கும்
வெய்யிலில் உள்ளங்கை குளிர்கிறது
மரத்தின் குருதி கைவழியே பேசுகிறது
உள்ளத்தில் உரைக்கும் வண்ணம்

"மலடு" மரத்துக்கு கூட வலிக்கும் வார்த்தை
சுட்டெரிக்கும் வெய்யிலில் என்னையே
உலர்த்தி உனக்கு நிழல் தந்ததில்லையா?
உன்னை தண்ணி பசளை போடென
வருத்தியதுண்டா?
எனை உதிர்த்தியுன் கால்நடைக்கு
உணவு தரவில்லையா?
சிறுவயது முதல் என்னிடம் நீ கனியுண்டது
இல்லையா?

"மலடு" எனக்கே கூட வலிக்கும் வார்த்தை !
ஆரோக்கியமான சுவாசத்துக்கு துணை நின்றேனே
என்னையேன் கொல்கிறாய்?
நானிருக்கும் இடத்தில் எதை நாட்டபோகிறாய் ?
நாட்டுவது வளருமுன் சகிப்பாயா என்றதென்னிடம்?
 
"மலடு" மரத்துக்கு கூட வலிக்கும் வார்த்தை
புத்தி தெளிந்தது கீழே இறங்கினேன்
அடிமரம் சுற்றி பாத்தி வெட்டினேன்
பசளையிட்டு நீர் பாச்சினேன்
காய்க்காதுபோன ஏழாண்டு பலனும்
ஒன்றாய் தந்தது பல்சுவையாய்

நன்றிகடன் தீர்க்க மரத்தை காத்தவரை அழைத்தேன்
வீடு வந்தவர் மரத்தின் செழிப்பை கனியோடு கண்டார்
கதறி அழுதார் எனென கேட்டேன்?

இளம் மனைவியை மலடியெனெ விவாகரத்து செய்...
மறுமணத்தில் தாய்மை கண்டாள்;  இரட்டைப்பிள்ளை.
மலடு நானென அறிந்தேன், எனக்கென இருந்த
நிழலையும் இழந்தேன்!. ஐயோ என்றார் ? விடை!

மலடென யாரும் யாரையும் சொல்லாதிருங்கள்
"மலடு" மரத்துக்கு கூட வலிக்கும் வார்த்தை
மரத்தில் வடிந்தது குருதியா கண்ணீரா நானறியேன்
உங்கள் உள்ளங்களே தீர்மானிக்கட்டும்



குறைகள் என்னுடையவை  நிறைவுகள் கடவுளால்
நன்றியும் மேன்மையும் கடவுளுக்கே
Title: Re: "மலடு" மரத்துக்கு கூட வலிக்கும் வார்த்தை
Post by: Maran on December 17, 2016, 06:53:34 PM



வாழ்த்துக்கள் SarithaN நண்பா... கவிதை வெகு அருமையாக இருக்கிறது... புதுமையான சிந்தனை, அதிகம் பேசாப் பொருளை கருவாகக் கொண்டு கவிதை புனைந்திருக்கிறீகள் பாராட்டுக்கள். லேசான விசும்பலுடன் கூடிய சோகமும் கவிதைக்குள் இழைந்திருக்கிறது!...  சிந்தை சிறப்பு!!

கொஞ்சம் கவிநடை இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். எழுத்துப் பிழைகளை கவனித்துக் கொள்ளுங்கள்.

தொடர்ந்து பல அழகழகான கவிதைகளை பதிவிட என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.




Title: Re: "மலடு" மரத்துக்கு கூட வலிக்கும் வார்த்தை
Post by: SarithaN on January 31, 2017, 09:11:01 PM
வணக்கம், தோழன் மாறன்.

தோழா உங்கள் கருத்துக்களை
கவனத்தில் கொண்டுள்ளேன்
எனது தமிழறிவு வெகுவான
தெளிவுடன் இல்லை

கவிதை நடை எனது தமிழ்
வளத்துக்கு ஒப்ப ஒலியில்
வடித்து பார்க்கின்றேன்
சந்தங்கள் உண்டான பின்னே
பதிவிடுகின்றேன்.

கற்ற தமிழுக்கு அப்பால்
வாழும் சூழலில் வளக்கில்
உள்ள தமிழ்
பெட்டிபோல் கடுமையாயும்
வட்டமாய் மென்மையாயும் தெரிகிறது

ஆனாலும்
உங்கள் அறிவுரையை சிரம்தாழ்த்தி
உள்வாங்கி கொள்கின்றேன், நன்றி.

வாழ்க வளமுடன்.
Title: Re: "மலடு" மரத்துக்கு கூட வலிக்கும் வார்த்தை
Post by: SarithaN on January 31, 2017, 09:12:56 PM
வணக்கம்.

சகோதரியர், தோழன் மாறன்,

மற்றும்
கவிதையை சிரமம் தவிர்த்து
காலம் ஒதுக்கி வாசித்தோருக்கும்
பணிவான நன்றிகள்.

வாழ்க வளமுடன்.
Title: Re: "மலடு" மரத்துக்கு கூட வலிக்கும் வார்த்தை
Post by: BlazinG BeautY on February 04, 2017, 07:09:53 PM
romba nalla kavithai sarithan.. vallthukal
Title: Re: "மலடு" மரத்துக்கு கூட வலிக்கும் வார்த்தை
Post by: SarithaN on February 24, 2017, 09:37:48 PM
அக்கா உங்கள் நேரமதை
கவிக்காக ஒதுக்கியதும்
கருத்திட்டமைக்கும் நன்றி.