FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: SarithaN on December 12, 2016, 07:24:55 PM
-
அம்மா எனும் ஆழியில் இது ஓர்துளி
நீயில்லா பிள்ளாயாகும் வரமெனக்கு வேண்டாம் தாயே
உன் மடிதனிலே வேண்டும் மரணமெனு சுகமெனக்கு
பட்ட கடன்தீர்க்க உன் மடிதனிலே நான் இறக்க
சிலகாலம் இருதாயே நான் அங்கே வரும் வரையில்
முற்றத்தில் விழுந்தவேளை முழங்காளில் தேய்பட
பட்டகாயம் ஆறவென்று
எண்ணைபூச மயிலிறகு மாமாதர
வேண்டாம் மயிலிறகு பிள்ளைக்கு வலிக்குமடா
என்கையால் பூசிகிறேன் என்றாயே என் தாயே
அறிஞருக்கும் கவிஞருக்கும் மயிலிறகு சுகமம்மா
பிள்ளைக்கு தாய்கையே சுகமெனும் உண்மை
சொன்னாயே உண்மையம்மா
சொன்னபடி கைபட பட்டதம்மா என்காயம்
பொல்லாத உலகத்தின் பொயில் மாட்டிகொண்டேன்
வெளிநாடு வெளிநாடு எனும் நரகம் வந்தடைந்தேன்
வெந்து நொந்து வாடுகின்றேன் தினம்தோறும்
தாயே உன் அன்பிளந்து
அம்மா சொன்னாயே ராசா போகாதேயென்று
ஏன் என்று சொன்னாயா என்தாயே
நண்பர் சொல் நான்கேட்டேன் சொர்க்கம் என்றேன்
ஏன் தாயே சம்மதித்தாய் உனைபிரிந்து நான் போக
எல்லோரும் வெளிநாடு போவதுபோல் ஏன் ஆசை
அன்பெனுமுன் கருவறையில் நிரந்தரமாய் குடியிருந்தேன்
உணவைக்கூட இளஞ்சூடாய் தருவாயே அன்போடு
அனல்கொதிக்கும் அடுப்பிலே வேலையம்மா
என்னதான் செய்தாலும் இல்லையம்மா நன்றி
திரும்பும் இடமெல்லாம் சுடுமம்மா சட்டி
தட்டுப்பட்டால் முட்டுப்பட்டால் திட்டுவார்கள்
உண்ண வருவோரெல்லாம் ராயாக்கள்
பரிமாற செல்வோர்கள் தூதுவர்கள்
சமைப்போர்கள் அடிமையள்
பாத்திரம் தேய்ப்பவன் கொத்தடிமை
வேலைமுடிந்தால் வெள்ளைக்காரன்
நம்மைவிட நல்லவன் அம்மா
கையெல்லாம் காயமம்மா மருந்துபோட யாரிருக்கா
வலியறியாமல் வளர்த்து விட்டாய் உன் நிழலில்
தொலைவில் நான் வாடுகின்றேன் அன்னையே நீயின்றி
ஓடிவர ஆவலுண்டு அனுமதிகள் இல்லையம்மா
வெள்ளைக்காரன் இட்ட சட்டம் நம்மை பிரிக்குதம்மா
உன்நாடு எனக்கு வேண்டாம் அன்னை அன்பு போதுமடா
திரும்பி நான் போகவெரு சட்ட வழி சொல்லென்றேன்
சொல்லி விட்டார் நல்ல சேதி
பார்த்து வைதாயே ஏழு காளைமாடும் பசுவும்
மரபை மீட்க காளையும் வாழ்க்கைக்கு பசுவும்
சொந்த நிலத்தில் விவசாயமும் போதும்
அன்பாய் அடிமையற்று ஏழையும் வாழ
விரைவில் நான் வந்திடுவேன் உன்னருகில்
நீ சொன்னபடி மாமா மகளை கட்டுகிறேன்
சொல்லிவை உன்னை என்னை அவள் பிரித்தால்
பிரிவது உறவல்ல, உன் மடியின் உயிரே
குறைகள் என்னுடையவை நிறைவுகள் கடவுளால்
நன்றியும் மேன்மையும் கடவுளுக்கே
-
வலியின் உச்சகட்ட உணர்விலிருந்து
வடிந்த வரி முத்துக்கள்
தங்களின் தமிழ் பற்றும்
தமிழன் என்ற உயிர் துடிப்பும்
நான் உணர்ந்தேன்.
வாழும் இடம் தாயகம் இல்லையேல்
வாழ்ந்தும் வாழா நம் மனம்.
பொல்லாத உலகத்தின் பொயில் மாட்டிகொண்டேன்
வெளிநாடு வெளிநாடு எனும் நரகம் வந்தடைந்தேன்
வெந்து நொந்து வாடுகின்றேன் தினம்தோறும்
தாயே உன் அன்பிளந்து
அம்மா சொன்னாயே ராசா போகாதேயென்று
ஏன் என்று சொன்னாயா என்தாயே
நண்பர் சொல் நான்கேட்டேன் சொர்க்கம் என்றேன்
ஏன் தாயே சம்மதித்தாய் உனைபிரிந்து நான் போக
வரிகளின் ஆழம் அளப்பரியது
இனி வரும் காலம் மகிழ்ச்சி
நிலைக்க அன்பு வாழ்த்துக்கள்
அன்பிற்குரிய அண்ணா
-
அன்போடு தம்பிக்கு வணக்கம்,
உனது கருத்துக்கள் மூலமாய்
உன்னில் நான் மகிழ்கின்றேன்
என்னை பொறுத்தவரை புதிதாக
எழுதுவதை குறைத்து, சகோதரர்
தோழர்கள் ஆங்கங்களை படித்து
ஊக்கம் கொடுக்க விரும்புகின்றேன்
சில எல்லையை கடந்தபின்னர்
ஊங்கங்கள் தேவைபடாது
தேவையான காலத்தில் உந்தி
தள்ளுதல் பலரை தடையற
ஓடச் செய்யும்.
நானும் உன்னைபோல அம்மா அப்பா
அனைவரோடும் ஒன்றாகவேதான்
வாழ்கின்றேன், சமூகத்தில் வாழும்
மானிதர்கள் வலியும் வலிக்கிறது.
நன்றி தம்பி
-
வணக்கம்.
தங்கையர் தம்பி, சகோதரர்,
மற்றும்
கவிதையை சிரமம் தவிர்த்து
காலம் ஒதுக்கி வாசித்தோருக்கும்
பணிவான நன்றிகள்.
வாழ்க வளமுடன்.