FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: இணையத்தமிழன் on December 11, 2016, 01:53:05 PM

Title: இணைய காதல்
Post by: இணையத்தமிழன் on December 11, 2016, 01:53:05 PM

இணையத்தில் காதலித்து
இனிய வாழ்வினை மறந்து
இன்னல்கள் பலஅடைந்து
சுற்றி உள்ள அனைத்தையும்  மறந்து
அவளையே நினைத்து
அவள் ஆனா பெண்ணா அறியவில்லை
அவள் கூறியது மெய்யா பொய்யா தெரியவில்லை
இது காதலா நட்பா என்றும் புரியவில்லை
கண நேரமும் சாட்டிலே கதைத்து
எனக்குள்ளே  காதலை விதைத்து

நிஜத்தினை மறந்து நிழலிலே மிதந்து
காதலை வளர்த்தோம்
நாட்களும் கடந்தோடின
மாதங்கள் பறந்தோடின
வருடங்கள் உருண்டோடின
இறுதியில் காதலும் கரைந்தோடிட

நிஜத்தையும் இழந்து 
நிழலையும் தொலைத்து
அவள் நினைவை மறக்க
நீரிலே மிதக்கிறேன்
நிலத்திலே மூழ்கும்வரை
                                   - இணையத்தமிழன்
                                       ( மணிகண்டன் )
Title: Re: இணைய காதல்
Post by: SarithaN on December 15, 2016, 08:46:57 PM
சகோதரா வணக்கம்,

இணைய உலகில் இணையா தவிப்பினால்
தொலைக்கப்படும் இளமை பருவமும்
வாழ்க்கையும் வேதனையானவை!.

தடைகள் தகர்த்து, தூரங்கள் கடந்து, அன்பில்
இணைந்தவர்கள் உண்டுதான் ஆனாலும்
பிரிவின் வலியால் வாழ்வை தொலைத்து
அழுபவர்கள் மிகமிக அதிகம்.

அறிவுக்கு தெரிகிறது மனது மறக்கிறது
அனுபவித்தே தெளிவேன் என்கிறது!
மாயை உலகம்.

இணையத்தில் நட்பாய் உறவாய் கிடைகும்வரை
ஏங்குகிறது மனது, கிடைத்தபின் புதிதை தேடி
அலைகிறது, புதியவை அமைய அமைய இலாபம்
எதிலென அலைகிறது, இணையத்தில் அன்பு
இல்லாமல் இல்லை, ஆனால் அன்பென மயக்கும்
முகமூடி கொண்டு ஆறாத்துயரில் தள்ளுவாரை
இனம்கண்டு கொள்ளல் வாழ்வுக்கு மகிழ்ச்சி!.

சகோதரா அவலத்தை சொல்ல காரியங்கள் செய்யும்
வேளை நீங்களும் அத்தனை தெளிவாய் சொல்லிவிட
எனது உழைப்பு வீணானது,

உங்கள் கருத்தை நான் களாவாடியதாக கொண்டே எனது
உருவாக்கத்தையும் விரைவில் பதிவிடுகின்றேன்,

சகோதரனின் சிந்தையை களவாடிய பெருமையுடன்
இருந்து விடுவேன்.

கவிதை, இணைய காதலின் தெளிவான காட்ச்சி, சகோதரா.

வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன், நன்றி
Title: Re: இணைய காதல்
Post by: இணையத்தமிழன் on December 16, 2016, 07:05:22 PM
படித்தமைக்கும் உங்கள் கருத்தை பகிர்ந்தமைக்கு நன்றி சகோ
Title: Re: இணைய காதல்
Post by: AnoTH on December 16, 2016, 11:20:42 PM
அண்ணா

அருமையான கவிதை
நிஜத்தில் நடந்த விடயமா?
அல்லது தாங்கள் கண்ட விடயமா ?

அனுபவத்தின் வரித்துளிகள்
ஆழமான அன்பின் வெளிப்பாடு

வாழ்த்துக்கள்
Title: Re: இணைய காதல்
Post by: இணையத்தமிழன் on December 17, 2016, 10:01:49 AM
ஹாஹா தம்பி இல்லை இல்லை தம்பி வெறும் கற்பனை தான் தம்பி. நன்றி  தம்பி 
Title: Re: இணைய காதல்
Post by: ரித்திகா on December 17, 2016, 12:36:18 PM
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Forig08.deviantart.net%2Feab0%2Ff%2F2013%2F328%2F5%2F9%2Frose_divider_by_sugaree33_art-d6v6tob.png&hash=e4ca6bf5cccc471d4908d99026eed33be49812c6)
தங்கமே .....
 வணக்கம் அண்ணா ....
~ !! மீண்டும் ஒரு அழகியப் படைப்பு !! ~
~ !! அழகான கவிதை அண்ணா !! ~
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fimg.webme.com%2Fpic%2Ft%2Ftello303%2F727912x174vlvk4a.gif&hash=9d397b39e60df33bbf9600aaaf4af8434e245044)
'' நிஜத்தினை மறந்து நிழலிலே மிதந்து
காதலை வளர்த்தோம்
நாட்களும் கடந்தோடின
மாதங்கள் பறந்தோடின
வருடங்கள் உருண்டோடின
இறுதியில் காதலும் கரைந்தோடிட

நிஜத்தையும் இழந்து 
நிழலையும் தொலைத்து
அவள் நினைவை மறக்க
நீரிலே மிதக்கிறேன்
நிலத்திலே மூழ்கும்வரை''
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fimg.webme.com%2Fpic%2Ft%2Ftello303%2F727912x174vlvk4a.gif&hash=9d397b39e60df33bbf9600aaaf4af8434e245044)

அழகான வரிகள் ....
உண்மையும் கூட ....

என் தங்கத்தின் கவிப்பயணம் ....
மென்மேலும் சிறப்பாகத் தொடர எனது மனமார்ந்த
~ !! வாழ்த்துக்கள் !! ~
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Forig08.deviantart.net%2Feab0%2Ff%2F2013%2F328%2F5%2F9%2Frose_divider_by_sugaree33_art-d6v6tob.png&hash=e4ca6bf5cccc471d4908d99026eed33be49812c6)

~ !! ரித்திகா !! ~
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Forig02.deviantart.net%2F73fd%2Ff%2F2011%2F103%2Ff%2F7%2Fprincess_luna___animated___by_nesbael-d3dvy1x.gif&hash=f7b589195c9716e620cc022120072e565fd4d51b)
Title: Re: இணைய காதல்
Post by: இணையத்தமிழன் on December 17, 2016, 03:34:04 PM
haha rithi thangam nandri ma