ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)
நண்பர்கள் கவனத்திற்கு ....
சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...
இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....
**இங்கே நீங்கள் சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக )..
***தயவு செய்து இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .
**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.
.
நிழல் படம் எண் : 128
இந்த களத்தின்இந்த நிழல் படம் Sweetie அவர்களால் வழங்கப்பட்டுள்ளது ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...
.
உங்கள் கவிதைகளை எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Ffriendstamilchat.org%2Fnewfiles%2FOVIYAM%2520UYIRAAGIRATHU%2F128.jpg&hash=3df41677397c2b97b890e21ff789bbed59af705c)
என்னை படைத்த மனித பிரம்மனே
நன்றி சொல்ல நினைத்தேன்
நான் இங்கு நடமாட
ஓர் இயந்திரம் -எந்திரனாய்
என் சுவாசம் ,என்னுயிர்
ஓர் மின்சாரத்தில் இயங்க ..
அது நின்றால் என் உயிர் போகும்
கவலையால் ஒவ்வோர் நாளும்
என் உருவத்தில் உணர்ச்சிகளை பொருத்தினாய்
இந்த உணர்வுகளில் நான் ஐக்கியமானேன்
கோபம் ஆனந்தம் அழுகை சிரிப்பு
இதில் நான் மிதந்தேன்
என்னை உருவாக்கிய நீயே
உன் இதயத்தை கொடுத்துவிடு
உன் தோழனாக உன் காதலனாக
எப்போதும் உன்னுடன் இருக்க துடிக்கும்
ஓர் ஜீவன் ஓர் எந்திரனின் காதல்
உன் இதயத்தின் அழகை தொட
துடிக்கும் என் இரும்பு கரங்கள்
உன் விழிகளை மட்டும் தான் பார்க்க
முடியுமா சொல் கண்ணே!
எனக்குள் இதயத்தை சேர்க்க ஏன் மறந்தாய்?
வெறும் இரும்பிலான ஓர் உருவம்
என்னை ஓர் இரும்பாய் பார்க்காதே கண்ணே!
என்னையும் நேசி ,உயிராய் இருப்பேன்..
உன்னுடன் என்னை சேர்த்துவிடு..
என்னை விட்டு போகாதே பெண்ணே!
நீ போனால் நான் ஜடமாவேன் கண்ணே!
என் காதலை உதாசீன படுத்தாதே அழகே !
ஏன்? என் காதலை தூக்கி எறிந்தாய்..
காரணம் சொல் மானே!
நான் இயந்திரமாய் பிறந்தது
என் குற்றமா சொல் கண்ணே!
என்னை உருவாக்கிய நீயே
உன் அழகிய கரங்களால்
என்னையும் என் காதலையும்
அழித்து விட்டு போ பெண்ணே !
இன்பமாய் மரணிக்கிறேன்
கவலை கொள்ளாதே பெண்ணே !
அடுத்த ஜென்மத்திலாவது
உன் கரம் சேர்க்க ஆசை - மானிடனாய்
என்றும் எப்போதும் உங்கள் எந்திரன்
(https://s23.postimg.org/i7y94yla3/rode.png)
சந்திரனை நோக்கிப் பயணித்த
எந்திரன் அவன்.
இரும்பு மேனி கொண்டு
விண்ணை வலம் வந்த தந்திரன்.
பகலவன்தன் வெப்பக் குழம்பில் உருக்காய்
உருகி இரும்பாய் உருப்பெற்று
மின்னை தன்னில் கடத்த வல்லவன்.
மனித மூளையின் ஆற்றலின் பெருக்கம்
தன் உடலின் ஆயுள் இன்னவென்று
அறிந்த தரணியின் புதல்வன் அவன்.
தன்னைப்போல உடலான்.
மின்னல் சக்தியையும் மிஞ்சுவான்,
என்றெண்ணி அமைத்தான்
தன் உடலின் வடிவான் அவன்
எழுந்து நடப்பான் என்ற எந்திரத்தை.
தன் நினைவிழந்து மனிதன் உடலாய்
அமர்ந்த நிலை தனதானதோ?
இயற்கை விதி இது தானோ ?
தன் தோற்றம் அகம் அறியதோ ?
இந்தக் கேள்வி விடையிறுக்காதோ ?
இரும்பாய் போனதாலோ தன் இதயமும்
இரும்பால் ஆனதோ ?
உணர்வின்றி நான் தவித்தேனோ ?
உணவின்றி பசியறியேனோ?
அன்னை பாசம் கண்டு என்னை உணர்ந்திட்டேன்.
தந்தை அரவணைப்பில் எந்தை நிலை அறிந்தேன்.
கர்ப்பப்பை இன்றி நான் பிறந்திட்டேன்.
தொப்புள் கொடி உறவின்றி தொழில்நுட்ப உருவாய்
நான் வளர்ந்தேன்.
பல வேலைகளை ஒன்றாய் செய்வேன்.
ஓய்வின்றி நான் உழைப்பேன். புன்னகை
இன்றி நான் நடப்பேன். பல தடைகளை
நான் கடப்பேன். இறப்பின்றி
நான், இயல்பு விதி மாறி,
மனித உருவாய் ஏன் உருவெடுத்தேன் ?
அவன் உணர்வின்றிதான் நான் தவித்தேன்.