FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: JoNeS on December 07, 2016, 08:58:44 PM

Title: kavithai
Post by: JoNeS on December 07, 2016, 08:58:44 PM
என் காற்றும் உனை நோக்கியே  வீசும்
அதில்  என் சுவாசம் உன்னோடு பேசும்

உன் காலடி மண்ணில் என் மழைத்துளிகள்
அதில் என் கண்ணீர்துளிகள் உன் பாதம் தொடும்

என் வானம் உனை பார்த்து தான் விடியும்
அதில் என் மனசும் உன் கண்களில் ஒளி வீசும்

என் மாலையும் உனை பார்த்துதான் மயங்கும்
அதில் என் நெஞ்சம் உன்னிடத்தே பாடி வரும்

என் ராகம் உன் காதோரம் மெல்லிசை போடும்
அதில் என் வரிகள் உன் மனதை தொடும்

என் நாவல் உன் கண்களில் கதை எழுதும்
அதில் என் தமிழும் உன் உதடுகளில் முத்தமிடும்
Title: Re: kavithai
Post by: SarithaN on December 10, 2016, 03:34:36 AM
வணக்கம் தம்பி,
நல்ல தூதுவர்கள் வாய்த்தனர்
இதமான வரிகள்
விரிவாய் தேடினாய்
பிரபஞ்சம் முழுதும்,

அனுபவம் சொல்கின்றேன்,
நீ தேடுவதை கண்டு கொண்டால்
மாண்டு மீண்டெழவேண்டும்
தெரிந்து கொண்டு தேடு.

ஆத்மாவில் கலந்த உணர்வுதான்
யான் பெற்றபேறு நீயும் பெறுகவே
யாரையும் வஞ்சிக்காது பயணிக்க

வாழ்க வளமுடன், நன்றி