FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதை நிகழ்ச்சி - ஓவியம் உயிராகிறது => Topic started by: Forum on December 04, 2016, 12:50:51 AM

Title: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 127
Post by: Forum on December 04, 2016, 12:50:51 AM
ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....


**இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக  )..

***தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .

**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

.


நிழல் படம் எண் : 127
இந்த களத்தின்இந்த  நிழல் படம் FTC Team சார்பாக   வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...

.

உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Ffriendstamilchat.org%2Fnewfiles%2FOVIYAM%2520UYIRAAGIRATHU%2F127.jpg&hash=52623c91bd052aee0336efd54a0ff77424aa4e68)
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 127
Post by: KaBaLi on December 04, 2016, 01:56:35 AM
 காவல் நிலையம் - இன்று
கால் மிதிக்கக் கூசும்
களங்கப்பட்ட இடமாய்....

காவல் நிலையங்கள்
ஆளுங்கட்சிக்கு
ஏவல் நிலையங்களாய்....

ஆளும் கட்சிக்கு
வாளும் கேடயமும்
வில்லும் அம்புமாக
காவலர்கள் பல நேரம்.

காவலர்கள்,
வானொலியில்
அதிகம் வரப்பட்டது
இவர்கள் இதயம் தான்
அதன் மென்மையே
தொலைந்து விடும் அளவுக்கு

காக்கிச் சட்டைக்குள்
கடமை உணர்வை
கருக்கி விட்டு
கயமை உணர்வை
பெருக்கிக் கொண்டோரும் உண்டு,
இனம் காணு அவர்களை!

காவல் அதிகாரி என்ற பதவியில்
மக்களின் பணத்தை பறிக்கும் -எண்ணத்தில்

இன்று காவல் துறை அதிகாரியின் பணவெறி !!!

 பணவெறியை மாற்றி உடைக்காக நாட்டுக்காக
பாடுபடும் மனிதராக மாற்ற உருவெடுப்போம்

லஞ்சம் வாங்கும் அதிகாரியை ஒழிப்போம்
நாட்டு  நலன்காக்க பாடு படும் ஒரு அதிகாரியாக !

அநீதி ,திருடு,ஒழுக்கக்கேடு என  இவற்றை 
ஒழிக்கும் ஒரு நல்ல  காவல் அதிகாரியை மாற்றுவோம் !   !!
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 127
Post by: JEE on December 04, 2016, 12:28:19 PM
ஏனென்னை பயத்தோடு பார்க்கிறாய்?
ஏனென்னை காவலனென்று நினைத்தாய்?
காதலனில் பிரபுதேவா ஆட்டம்  பார்த்தாயா?
மூக்கால்லா முக்கப்பில்லா லைலா
பாடலில் ஆட்டத்தை பார்த்தாயா?
துப்பாக்கி சத்தம் டுமீல்டுமீல் கேட்டாயா?
தொப்பி தனியா தொங்கும் பார்த்தாயா?................

நானும் மேடையில் நடிப்பு கலையில்
கயவனை  பிடிக்க போகையிலே
துப்பாக்கி சத்தம் டுமீல்டுமீல் கேட்டாயா?
தொப்பி தனியா தொங்கும் பார்த்தாயா?
அப்படியே என்னை இங்கு காண்கிறாய்.............

என்னை எவ்வேளையும் எண்ணி எண்ணி
கனவிலும் இந்த காட்சியை பார்த்தாயா?
நான் கடமை கண்ணியம் கட்டுப்பாடு
உடையவன்  உனக்கு தெரியாதா?
என்னவளே என்னுடை கண்டு மிரளாதே
என்றும் என் மனம் மிருதுவானதே

காவலர் உங்கள் நண்பனென முதுகிலே
நெற்றியிலே ஒட்டித் திரிந்தாலும்
மற்றோர் நம்பவில்லையென்றாலும்
உற்ற நீ நம்பவில்லையென்றால்
ஏற்றுக்கொள்ளாது நோவுது என் மனம்.............

உடையை மதிக்கிறோம்
தொப்பியை மதிக்கிறோம்
துப்பாக்கியை மதிக்கிறோம்
உள்ளிருக்கும் மனிதன்
மனிதநேயமுடன் நடப்பதையும்
யாம் மதிக்குமளவுக்கு மேலே
நேர்மையாய் செயல்படவும் ஏங்குகிறோம்................

எல்லா காவலுக்கும் மேலாய்
யாகாவாராயினும் நாகாக்க
எல்லாம் வல்ல இறைவா அருள்புரிவாயே................

வாழ்க வளமுடன்..................
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 127
Post by: DaffoDillieS on December 04, 2016, 01:37:46 PM
தன்னம்பிக்கையும் துணிவும் கொண்டு..
விடாமுயற்சியும் விவேகமும் கலந்து..
உயிரைத் துச்சமென எண்ணி..
மக்களைப் பாதுகாக்கும் போலீஸ்..

அல்லும் பகலும் தூக்கமின்றி..
மனைவி மக்களைத் துறந்து..
எண்ணமும் செயலும் என்றும் ஒன்றாகக் கொண்டு..
சட்ட ஒழுங்கைக் காக்க ஓயாது செயல்படும் போலீஸ்..

அடிபட்டும் மிதிபட்டும்..
மேலதிகாரிகளிடம் குட்டு பட்டும்..
அரசியல்வாதிகளின் ஆதிக்கத்துக்குள்ளாகியும்..
உள்ளுணர்வுகளை மறைத்து..
ஊரை அமைதிப் பூங்காவாக்கும்  போலீஸ்..

சாதாரண மனிதனுக்கே ஆயிரம் சங்கடங்கள்..
போலீஸ் காரணுக்கோ ஆயிரத்தெட்டு...
அன்னம் ஆகாரமேதுமின்றி..
ஓடாய் உழைக்க..
மக்களின் பார்வையில்..
கொடியவராகிப் போன நம் போலீஸ்..

தீரா வெறுப்புக்குள்ளாகி..
முன்னே சார் என்பதையும்..
பின்னே மாமா வென்பதையும்..
கேட்டுக் கொண்டும்..
காசுக்காக எதையும் செய்யும்  சில போலீசாரால்..
கேடு கெட்டுப் போயும்..
கடமையைச் செய்யும் நல்ல போலீஸ்..

தீபாவளி பொங்கல் என எந்நாளும்..
"அப்பா சீக்கிரம் வந்துவிடு".. எனும்..
தன் பிள்ளையின் அழுகுரலைக் கேட்டும் கேட்காமலும்..
ஊர் ஊராய்ச் சுற்றித் திரிந்தாலும்..
மனதை இல்லத்திலேயே விட்டுச் செல்லும் பாசமிகு போலீஸ்..

காவல்துறையில் கெட்டவர்களையே..
பார்த்துப் பழகிப்போன மக்களுக்கு..
காக்கி உடையணிந்த நல்லவர்களுமுண்டு..
என எடுத்துக்காட்டாய்த் திகழும்..
கம்பீரமாய் நடை பயின்று..
காக்கிச் சட்டையின் மிடுக்கு மாறாமல்..
பொது நலனில் அக்கரையும் ..
சேவை மனப்பான்மையும் கொண்டு..
மக்களுக்காக உழைக்கும்..
கண்ணியமிகு போலீஸ்..
உமது சேவை எமது நாட்டுக்குத் தேவை!!


thanks..

Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 127
Post by: AnoTH on December 04, 2016, 04:46:31 PM
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே.

அச்சமுண்டு அச்சமுண்டு அச்சம் என்பதுள்ளதே
துச்சம் என்றுப் பதுங்கி வாழும் கயவர் குற்றம் புரிந்தும்.
அச்சமுண்டு அச்சமுண்டு அச்சம் என்பதுள்ளதே

காக்கியணிந்து நமைக் காக்கும் காவலனே !
மக்கள் சேவையே மகேசன் சேவை என்ற சேவகனே !
காவியணிந்து காமம் புரிந்த காடையனே ! அவன்தன்
போலி வேஷம் கலைத்து போலீஸ் என்று நிமிர்ந்து
நின்ற பெருமகனே !

சீருடையணிந்து சீறிப்பாயும் சினம் கொண்ட
சிங்கம் இவன். அவன் ஓங்கி அடிக்கும் அடியில் தப்பி
ஓடிப் பிழைப்பான் எவன் ? பல பாவிகளை தண்டிக்கும்
சாமி இவன். அவன் துணிச்சல் கண்டு பதுங்கி வாழும்
ஆசாமிகள் பலர்.

காக்க காக்க கனகவேல் காக்க நோக்க நோக்க
பாவம் புலப்பட தன் பிள்ளைகள் செல்லுமிடமெல்லாம்
பாவம் தளைத்தோங்க. வீரம் கொண்ட காவலனே   
பல பெற்றோரின் செல்வனே! அன்புச் செல்வனே!

எத்தனை சத்திய சோதனை வந்தாலும் தேவர்
குலத்து பெருமகன் அவன் அசராது பல அசுரர்களை
வேட்டையாடும் சத்யதேவன். வேட்டையாடி விளையாடி
ஓட்டம் தொடர பதற்றமின்றி பதுங்கிப்பாயும் ராகு காலத்தில்
சாதுவாய் வேட்டையாடும்  ராகவன்.

தன் குடும்பம் வேரோடு சரிந்தாலும் பல குடும்பங்களுக்காய்.
விஜயம் நிச்சயம் என்று தன் எதிரிகளை தெறித்து ஓடச்செய்யும்
குமாரர்களின் விஜயகுமாரன்.

உன் முகம் சந்தர்ப்பம் அமையும் பொருட்டு மாறலாம்.
ஆனால் உன் அகம் உண்மை  வழி நிற்கலாம்.
நம்பிக்கை இழந்து மக்கள் சலிக்கலாம்.
தன்னம்பிக்கை கொடுத்து வீர நடை நீ  போடு
உண்மையின் விடைக்காய் விவேகமாய் நீ  ஓடு
உன் துறை சார்ந்த துரோகிகளை நீ  பந்தாடு.

நீதி ஏந்தி புறப்பட்டு வா !
நம்பிக்கை கொடுக்க விரைந்து வா !
தன்னலமின்றி எமைக் காக்க வா !
சட்டத்தை நிலை நாட்ட காக்கியணிந்து வா !

பின்குறிப்பு
தமிழ் police திரைப்படங்களின் கதாநாயகர் பெயரில் எழுந்த கற்பனை வரிகள் இக்கவிதை.
சிங்கம்,சாமி, அன்புச்செல்வன் (காக்க காக்க)சாத்தியதேவ் (என்னைஅறிந்தால்),
ராகவன்(வேட்டையாடு விளையாடு), விஜய் குமார் (தெறி)
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 127
Post by: thamilan on December 06, 2016, 08:06:39 AM
கடமை கண்ணியம் கட்டுப்பாடு
இது தான் காவல்துறை
ஆனால் இன்றோ
கடமையை மறந்த
கண்ணியமற்ற
கட்டுப்பாடற்ற
காவல்துறையினரே அநேகம்

நாட்டு மக்களின் பாதுகாவலர்கள்
இன்று
பணக்காரர்களின் அடிவருடிகளாக
அரசியல்வாதிகளின் கைப்பொம்மைகளாய்
நாட்டை கொள்ளையடிப்பவர்களின் பாதுகாவலர்களாய்
மாறுமா இந்த அவலம்

நாட்டை ஒழுங்கு படுத்தி
நாட்டுமக்களை பாதுகாக்கவேண்டிய இவர்களோ
பகல் கொள்ளைக்காரர்களாக வீதிகளில்
விதிமுறைகளை மதித்தால் என்ன
விபத்துக்கள் தான் நடந்தால் என்ன
பணம் கொடுத்தால் விதிகள் மாற்றி எழுதப்படும்
இது தான் இன்றைய கடமை தவறாத
காவல்துறையினர்

காக்கிசட்டைக்குள் முகத்தை தொலைத்த
தன் சுய முகவரி தொலைத்திட்ட காவல்துறையினர்
ஒருசிலரால் அந்த கண்ணியமிக்க
கடமைக்கே இழுக்கு 

நீதி நேர்மை
கண்ணியம் கட்டுப்பாடு என
வாழும் காவல்த்துறையினரும் இருக்கிறார்கள்
ஆனால் அரசியல்வாதிகளின்
அரசியல் பலம்
பணக்காரர்களின் பணபலம்
எனும் சுனாமிகளில் அடிபட்டு
அலைக்கழிக்கப்படுகிறார்கள்

நாட்டைக்காக்கும் ராணுவம்
நாட்டுமக்களை காப்பாற்றும் காவல்துறை
இவர்களுக்கு தலைவணங்குவோமாக


Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 127
Post by: ரித்திகா on December 06, 2016, 08:40:25 AM
கம்பீரம் குறைந்திடா தோற்றம் ...
சிறுத்தையின் வேகமான ஓட்டம் ....
தலை வணங்கா  நிமிர்ந்த நடை...
சட்டம் காக்கும் புனித உடை...
பயமறியா நேர்கொண்ட பார்வை...
அயராது உழைக்கும் எங்கள் சேவை....

ஆதவன் கண் அயர்ந்தாலும் ....
சந்திரன் விழித்திறந்தாலும்...
புயல் அடித்தாலும் இடி இடித்தாலும் ...
அயர்ந்திடா விழிகளுடனும் ...
சோர்ந்திடாத் தேகத்துடனும் ....
இரவு பகலாய் எங்களின் பணி.....

காக்கக் காக்கக் கனகவேல் காக்க
காலையில் ஒளிரும் சுப்ரபாதம்
அச்சத்தைப் போக்க ..  ....
காக்கக் காக்கத் தேசத்தைக் காக்க
மனதில் தேசத்தின்பால் பற்றுக்கொண்டு
உறுதிக் கொண்டோம்  ...
சுவாசம் தேகம் விட்டு பிரிந்தாலும் தொடரும்  ...
தேசம் காக்க எங்கள் சேவை...

நேரம் கிடைத்தால் உறக்கம் ...
ஆனால் என்றுமில்லை கலக்கம் ...
கறைப்படியா கரம் ...
எங்களின் நேர்மையைப் பறைச்சாற்றும்...
எங்களுக்கு விடுமுறை கிடையாது ...
பணியோ முறை தவறாது ...
கிடைக்கும் இடத்தில் எங்களின் உணவு ...
மக்கள் மட்டுமே எங்கள் கனவு ...

தள்ளி நின்று வேடிக்கைப்
 பார்க்கும் குளிர் ...
செடியிலிருந்து பூக்கிறது தளிர் ...
தேசம் காக்க மாட்டும் போகட்டும்
இந்த உயிர் .....!!!!

~ !! நன்றி !! ~

Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 127
Post by: SweeTie on December 06, 2016, 09:12:02 AM
சட்டங்கள்  பேசி  திட்டங்கள்  வகுத்து
நாட்டை ஆள்கிறது  அரசியல்  வர்க்கம்
அல்லும்  பகலும் அயராமல் உழைத்து
நாட்டைக் காக்கிறது காவலர் வர்க்கம்
காவலனைக்   கைப்பொம்மையாக்கிறது
அரசியல் என்னும் சாக்கடை
 
சீருடை அணிந்து  வலம் வரும் சிப்பாய்கள்
ஆறறிவு படைத்த  சாமானியர்கள்
பாசங்களையும் நேசங்களையும் புதைத்து
சமாதி கட்டும் நாட்டின்  சிற்பிகள்  இல்லை 
வாழ்க்கைக்கும்  சேவைக்கும்  நடுவே  உயிர்வாழும்
அருமைத் தந்தைகளும் அன்புத் தாய்களுமே .

 கண்ணியவான்  இவன் காலமெல்லாம் காவலன்
குற்றங்கள் புரிவோருக்கு என்றுமே எதிரி
சட்டங்கள் ஆளுவோர்க்கு  நிரந்தர கைப்பிள்ளை
மக்களின் தூற்றலில் சண்டாளன்  காமுகன்
இதயத்தில் ஈரமே இல்லாத  ஈனப்பிறவி
லஞ்சத்தின் தோழன் என பல பல நாமங்கள்.

மதிப்புக்குரியது  காவலன் சீருடை
 பெருமைக்குரியது  காவலன் சேவை
கடமை கண்ணியம் கட்டுப்பாடு  தேவை
என்றும் உங்கள் சேவை நாட்டுக்கு தேவை
செய்யும் தொழிலே தெய்வமாய்க் கொண்டால் 
விலகிச் செல்லும் வாதம் வம்பு வழக்குகள் யாவும்.
 
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 127
Post by: BlazinG BeautY on December 06, 2016, 04:12:58 PM
ஓர் சிறுவனின் லட்சிய கனவு
=========================

காக்கி உடை வந்து வந்து
போனது கண்முன்னே...
தட்டானின் அமர்வுக்கு
வேலி பார்த்து நிற்கும்
இமை தட்டா சிறுவனின்
உள்ளங்கை வியர்வை
போன்றதொரு நினைவுகள்!

எதிர்கால சுமைகளை,
எதார்த்த புன்னகையாய் மாற்றி
வாழ்க்கை சக்கரத்தில் 
சுழன்றுகொண்டு ஓர் லட்சியம்!

எதிர்காலம்
குறிக்கோள்
வாழ்நாள் கனவு - என்றும்
காவல் துறையே

காகிதக் கப்பலைப் பின்தொடர்ந்து
இழுத்துச் செல்லும் மழைகாலமாய்
எடுத்துச் சென்றது
கனவையும், மகிழ்வையும்...
அந்த மிடுக்கான உடை...!

நேர்மை, துணிச்சல் - என்றும்
கண்ணியமாய் வாழும்
காவல்துறை அதிகாரியாய்...
தீமைகளை தூக்கியடித்து
கயவர்களை நடு நடுங்க வைத்து
லஞ்சம்  சேரா என் எண்ணத்தில்
கடமைசெய்து உயிர்மரிக்க வேண்டும்.