FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: thamilan on December 03, 2016, 07:08:29 PM
-
பத்து மாதமேனும்
என் பரிசுத்த நிம்மதிக்கு
சொர்க அறை தந்த
தாயிடம் கேட்க வேண்டும்
என்னைத் தெரியுமா என்று
வாழ்வெனும் ஓட்டை ஓடத்தின்
வழிபாதைகளை
அக்கறையாய் செப்பனிடும்
தந்தையைக் கேட்க வேண்டும்
என்னை தெரியுமா என்று
என் மோக அனல் மூச்சில்
முழுச் சுவாசம் தேடி
என்னை பிரித்தெடுக்கும் பெருமுயற்சியில்
சரிபாதி பங்கெடுக்கும்
என் இல்லாளை கேட்க வேண்டும்
என்னைத் தெரியுமா என்று
கூத்தாடும் குரங்கு மனதை
தொட்டும் அதட்டியும்
நில்லென நிலைப்படுத்தும்
நண்பர்களை கேட்க வேண்டும்
என்னைத் தெரியுமா என்று
ஏனெனில்
என்னை எனக்கே தெரியாமல்
எண்ணற்ற ராத்திரிகள்
ஞான விளக்கேற்றி
விடைதேடி தொலைந்த்திருக்கிறேன்
இருந்தாலும்
இன்னமும் எனக்கது
பனிமூடிய பேருண்மை தான்
-
உங்களை படைத்த பரமாத்மாவிடம் கேடடால் விடை கிடைக்கும்.
வாழ்த்துக்கள்
-
ஐயா தமிழனுக்கு வணக்கம், அழகிய தேடல்,
அம்மா அப்பா இல்லாள் தோழமை, பதில்
கிடைத்ததா?
உங்கள் பிறந்ததின வாழ்த்துக்கள் வாயிலாக
அறிந்தேன் நல்லதொரு மனிதர் என்று,
தோழனாய் எனது பதில் நீங்களொரு
தமிழ் பற்று,
உங்களை யாரென நீங்கள் அறிந்தால்
உலகம் போற்றும் வாழ்க வளமுடன்.