FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: இணையத்தமிழன் on December 03, 2016, 05:31:24 PM

Title: ஏறுதழுவுதல்
Post by: இணையத்தமிழன் on December 03, 2016, 05:31:24 PM
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi1378.photobucket.com%2Falbums%2Fah107%2Fmkbull%2F056_zpskkpjn3id.jpg&hash=c5cf167e2a7c3e07bff59a920bdc452406a79387) (http://s1378.photobucket.com/user/mkbull/media/056_zpskkpjn3id.jpg.html)


வில்தொடுத்த அம்பு போல்
சீறிப்பாய்ந்து ஓடும் காளை
அவற்றை வீரத்தோடு அணைந்தான் தமிழன்
மாட்டை மிருகமாக மட்டும் பாராமல்
மாட்டிற்கும் விழா கொண்டாடினான்

மாட்டை அணைந்தவனுக்கே
மண்ணும் பெண்ணும் கொடுத்தான் அன்று

இன்றோ பன்னாட்டு நிறுவனங்கள்  கேலிபேசிட
மட்டை பிடித்தவனும் மடிக்கணினி தட்டியவனும்
மாடலிங் செய்பவளும் மதிகெட்டு பேசிக்கிடக்க
அரசியல் கட்சிகள் ஆளுக்கொன்றாய் பேசிட
மத்திய அரசோ கைகட்டி நிற்க
இம்மண்ணின் மரபோ இங்கேய மாட்டிதவிக்கிதடி
     
                                                   -இணையத்தமிழன்
                                                     ( மணிகண்டன் )
Title: Re: ஏறுதழுவுதல்
Post by: DaffoDillieS on December 03, 2016, 06:01:52 PM
Super super
Title: Re: ஏறுதழுவுதல்
Post by: இணையத்தமிழன் on December 03, 2016, 07:03:00 PM
tnx charm
Title: Re: ஏறுதழுவுதல்
Post by: SarithaN on December 10, 2016, 02:29:02 AM
வணக்கம் சகோதரா, மரபை சிதைப்போருக்கு எதிரான உணர் பொங்கி பாய்கிறது, இவைகள் உள்ளவரைதான் தமிழ் வாழும், தமிழன் வாழ்வான். காளையின் படம் பார்க்கையில் அழிக்க படுகின்றனவே எனும் கவலை வருகிறது, காளையும் கவியும் உணர்வு.