FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: ~DhiYa~ on November 28, 2016, 12:14:00 AM
-
காதல் இம்சைகள் தந்தென்னை கொல்கிறாய்
உன் விழி வழியாலே கவர்ந்தென்னை
செல்கிறாய்
கள்வா உன் வாசங்கள் தந்தென்னை வெல்கிறாய்
உன் கவி மொழியாலே என் மனதை களவாடி செல்கிறாய்....
என் துன்பங்களை கடன் வாங்கிக்கொள்கிறாய்
வழிந்தோடும் கண்ணீரை உன் மடியினில் தாங்கிக்கொள்கிறாய்
மாறிடும் என் வானிலையில் உன் வானவில் தோன்றிட செய்கிறாய்
இமை மூடா என் இரவுகளை உன் வரவால் விடிந்திடச்செய்கின்றாய்....
மலர்கின்ற என் அதரங்களை உன்
இதழால் நீயும் சிறைப்பிடிக்கிறாய்
விழி திறக்காத என் பெண்மையை
உன் தீண்டலில் மலர்ந்திட செய்கிறாய்
வாய் பேசா என் வார்த்தைகளை என் விழிகளால் படம்பிடித்துக் கொள்கிறாய்....
இருள் சூழ்ந்த வாழ்க்கையில் என் ஒளியாக நீ வந்தாய்
வரமெதுவும் வேண்டாமே என் வரமாக
என்னருகில் நீயிருந்தால்... :-* :-* :-* :-[ :-[ :-[ :-[ 8) படித்ததில் புடித்தது
-
நல்ல ஆர்வமாய் படித்துவர கடைசியில்,
படித்ததில் பிடித்ததென கைவிட்டது போல ஒரு உணர்வு !!
எனினும் இனிய வரிகள் !!
பகிர்வினில் மகிழ்வு !!
-
Semma dhiya very nice onw
-
super kavithai akka
alagana varikal
unarvupoorvamana
karpanaikal
super
inthamari kavithaikal padipathanalo enavo
thangkalin varikalum asathalaka irukirathu
-
ஆஹா ஆஹா என ஒரு கற்பனை . இல்லை இல்லை இது நிஜம் ! அருமையான உணர்வுகள் உணர்ச்சி மிக்க வரிகள் அனைத்தும் !
இன்னும் அளவில்லாத உணர்வுகளை எட்டி புடிக்க வாழ்த்துக்கள் தியா !
-
kavithai nalla iruku dhiya tnx for sharing :'( unoda kavithai nu asaiya padichen kadaisila padithathil pidichathunu potutiye :-\
-
சகோதரி வணக்கம், உங்கள் கவிதை நல்லதொரு வாழ்க்கை, வாழ்க வளமுடன்.
எங்கே படித்தீர்கள், யாரிதை பிரசவித்தார் என்பதை நீங்கள் சொல்லாதவரை, இது உங்கள் கவிதையே!
படித்ததில் பிடித்ததை,
உரியவர்
இடம், பெயர் சொல்லி பகிர்வோம்,
தன்னடக்கமெனும் பொய் சகோதரியின் வெட்கமே. நன்றி