FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: இணையத்தமிழன் on November 26, 2016, 07:59:52 PM

Title: மதுநிலாவின் கவிதைகள்
Post by: இணையத்தமிழன் on November 26, 2016, 07:59:52 PM
இயற்கையின் அதிசயம் ...

பல இரவுகள் என் கவிதைத்தாய்க்கு
இயற்கை தான் குழந்தை ..
என்றும் இன்றும் ..

வழக்கம் போல் திறந்தவெளியில்
இந்த மேகங்கள் தான் எதனை ஜாலங்கள் செய்து

என் நிலாப் பெண்ணை
உற்சாகப் படுத்துகிறது ..

அவள் விளையாட வானவில் ..
அவள் தாளத்துடன் நாட்டியமாட இடி முழக்க ஓசை ..

அவள் நடனத்தை ரசிக்க கண் சிமிட்டும்  விண்மீன் கூட்டங்கள் ..

அவள் ஆடி களைத்த சோர்வு வர கூடாது என மலை சாரல் சாரல் .

மலை சாரலில் நனைத்தாள் தலை துவட்ட பரந்த வானம் .

அவள் தினம் தூங்கி துயிலுறங்க 
தாலாட்டு இசையுடன் பெருங்கடல் அலைகள் ..

அவள் கண்முழிக்க எண்ணிடலங்கா  இசை பறவைகள் ..
அவள் குளிக்கும் பேரழகை காண கூடாது என மலைச்சிகர குடில் ..

அவள் பால் நிலவு முகம் சிவக்க பகலவன் .

இவ்வளவு அழகையும் திறமையும் அதிசயமும்
இவள்  ஒருத்திக்கே வரி வழங்கிய பூமி தாய் ..⇓

இவ்வளவு மகிழ்ச்சியாக வைத்து இருந்தாலும்
இந்த இயற்கை அத்தனையும் துணை இருக்க
 என்

நிலாப்பெண்ணை கடத்தி போகும்
கந்தர்வ காதலன்  யாரோ ....
அய்யோகோ ....
நீ பௌர்ணமியாய் முழுமதியாய்
 எப்போதும் ரசிக்க ..

பிரியப்படும் உன் ரசிகை .........
Title: Re: மதுநிலாவின் கவிதைகள்
Post by: இணையத்தமிழன் on November 26, 2016, 08:00:53 PM
தொலை தூர கல்வி காதல் .
அவள் முழுமதி முகத்தில் புரண்டு
ஓடிய கார்குழல் மேகங்கள்  ...

அவள் மேனி வனமோ பால் நிலவு ..
அவள் மூடிய கண் இமைகள் மயில் தோகைகள் ..

அவள் கன்னங்கள் சரி பாதி வெட்டிய பிறை நிலவு.
அவள் இதழ்களின் வண்ணங்கள் வானவில் ஜாலங்கள் ..

அவள் இதழ்  சிரிப்பின் சிணுங்கல்  நட்சித்திரங்களின் மினுமினுப்பு .

நான்  செய்யாத லீலைகளை கற்பனையில் ரசிக்கும்
இவளை இன்று தான்  முதல் முதலாக ரசிக்கிறேன் .

அவள் கேலி பார்வை உன் நிலா காதலியை
நேசிக்கும் நீ ஒரு முறை என்னை பார் .

இன்று தான்  உணர்ந்தேன் வீண் ஆகிய நாட்களை ..

தினமும் மேகமும் நிலவும்
பகலில் பாடம் கற்ற கொண்டது என்று..

அந்த பாடத்தை இரவில் திறந்த வெளியில்
பால் நிலவு வழியாக தொலை தூரக்கல்வி திட்டத்தில் பயில்கிறேன் ..

கற்பனை காதலர்களுக்கு சமர்ப்பணம் ..


உங்கள் நிலா பெண்ணே ..
Title: Re: மதுநிலாவின் கவிதைகள்
Post by: இணையத்தமிழன் on November 26, 2016, 08:02:38 PM
கடிகாரம் அழுகிறது ....
நாம் பிறந்தது சரித்திரம்...
படைக்கவா .. சாதிக்கவா..
இல்லை ? வாழவா ...

ஆனால் இன்று நடை முறையில் ...

இன்று என் வாழ்வில் நடந்த
பல சம்பவங்களை விஷயங்களை
அசை போட்டு பார்க்க
உறவுகளும் நட்புகளும் வேண்டும் ..

கடிகாரம் மட்டுமே

ஓடி கொண்டு இருக்கிறது ..

மற்றவர்களை ஓட விட்டு திரும்பி
பார்க்க நேரமில்லாமல் சிரிக்கிறது
மனிதர்களாகிய நாம் நினைத்து பார்க்க
நினைவுகளை சுமந்து அதை பகிர்ந்து
நம் சந்ததிகளுக்கு புரியகொடுப்போம்  வைக்க
தவற விட கூடாது ...

பெரிய பெரிய மேதைகள்
மகான்கள் அறிவாளிகள் ..
செய்த சாதனைகளை

அவரகளது பிறந்த தினம்

மறைவு நாள் அன்று மட்டுமே யோசிக்கும் உலகம் ..
நாம் சாதாரணமான மனிதர்களாக
நமது வீட்டில் இருப்பவர்களை நினைத்து
பார்க்க அன்றாடம்....


மனம் விட்டு பேசினாலே போதும்...

உறவுகளுக்கு  கை கொடுப்போம் ...
நட்புக்கு தோள் கொடுப்போம் ...

வாழ்க வளமுடன் ..
வாழ்வோம் நலமுடன் ............
                                                                               உங்கள் நிலாப்பெண் ...,,,..
Title: Re: மதுநிலாவின் கவிதைகள்
Post by: இணையத்தமிழன் on November 26, 2016, 08:03:44 PM
உன்னை நம்பு
நீ நடந்து வந்த பாதையை திரும்பி பார் ...

பதித்த உன் கால் தடங்கள் பாதைகளாக மாறி
உன் சந்ததியை அழைத்து   செல்லுமா ?

நீ பதித்த  உன் வழித்தடங்கள் நல்வழி என்றால்
உன் சந்ததியை உன் கரம் கோர்த்து வழி நடக்க சொல்வாயா ?

ஆனாலும் நீ மறுக்கிறாய் .. ஏன் ?

 உன் வழி மீது உனக்கே நம்பிக்கை இல்லை ...
நீ உன்னை நம்பு .. உன்னை நம்பி வருவோர் பலர் ..

விதைக்கும் விதை நிச்சயம் பலனாக உனக்கு வராவிட்டாலும்
பலருக்கு உபயோகமாக இருக்கும் .....

உன்னை நம்பு.....
Title: Re: மதுநிலாவின் கவிதைகள்
Post by: இணையத்தமிழன் on November 26, 2016, 08:04:53 PM
ஒரு வானத்து நிலவு ......
இந்தப் பூமிக்கு 
புதிதாய்  வந்த
ஒரு  வானத்து நிலவு ..
இன்று 
பலரது  வாழ்வில்
மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும்
அள்ளி அள்ளி  வழங்குகிறது ..
பூவுக்கு தெரியாத
அறியாத வாசம்
முகர்ந்து பார்த்தவருக்கு
சொல்ல தான் முடியும் ..
உணர்ந்து பார்த்தால் தான்
அதன் பெருமையை விளக்க முடியும் ..
உணர்ந்ததால் பகிர்கிறேன் ..
உறவுகள் மிக முக்கியம் ..
ரசிக்க  நேசிக்க நேரமில்லாமல் ஓடுகிறோம் ..

ஓடும் இலக்கு என்ன ?

அறிந்தும் அறியாமல்
நம்மை நாமே ஏமாற்றி
ஏமாற்றியே பழக்கத்தை
வழக்கமாக்கி கொள்கிறோம் ..

நேசிக்க சில நொடிகள் இல்லாமல்
நாம் வெறுமை உணர
கற்றுக்கொள்ள போகிறோம் ..
பெற்றவர்கள் நாம்
பிறந்தவுடன் ரசிக்கும்
ஒவொரு  விஷயமும்
அவர்கள் வயதான காலத்தில்
செய்யும்  குழந்தை தனமான
செயல்களை
நாம் ரசிக்க நேரம் ஒதுக்குங்கள் ..

அவரக்ளும் இளமையில்
நமக்காக தொலைத்த
அவர்களது மகிழ்ச்சியை
முதுமையில் கொடுப்போம் ..
வாழ்க வளமுடன் ...