FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: aasaiajiith on November 25, 2016, 11:59:03 AM

Title: கடலழகை விழுங்கிடும் அழகழகே !
Post by: aasaiajiith on November 25, 2016, 11:59:03 AM

கொச்சியின் கடல் மட்டுமல்ல
உலகின் எக்கடலும் என்ன அழகு ?

திரைக்கடலாய் திகழ்ந்திடவே
திவலைகளால் ஆன இத்திடலும் என்ன அழகு ??

தாண்டித் தாண்டியே தீண்டித் தழுவியும்
தீரா வேட்கையில் மாறா
நின் சுவாசத் தீண்டல்போல்
மீண்டும் மீண்டும் தாண்டியே, தீண்டிடத் தூண்டிடும் கரையும் என்ன அழகு ??

அவசரகதியினில்,அஸ்தமனத்தினை ஆட்படுத்தி, தன்னிடமான மொத்த குளிரினையுந்திரட்டியே...
அலைகளை ஆசிர்வதித்திடும் நின் தளிர் பாதங்களை வெல்ல
மெல்ல வெளிவரும் வெள்ளிப் பிறையும் என்ன அழகு ??

ஆர்பரித்தும், ஆக்ரோசித்தும் அமைதியாகியும் என
பன்முக தன்மையுடன் திண்மையாய்
நிதம் அலையாடி விளையாடி
நின் பாதம் தீண்டியே சாபல்யம் பெறும்
அலையும் என்ன அழகு ??

அரபிக்கடலின் அரசி யென
பட்டப்பெயரினில் அனைவராலும் அழைக்கப்பட்டபொழுதும்
அடையா ஆனந்த அத்வைதம் அதை
அழகே , தன் அலைகரங்களால்
உனை ஆராதித்ததும்
அத்தனை ஆனந்தமடைந்திடும்
அந்த நிலையும் என்ன அழகு ??
Title: Re: கடலழகை விழுங்கிடும் அழகழகே !
Post by: ரித்திகா on November 26, 2016, 10:53:39 AM
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi36.tinypic.com%2F2m7dh1c.jpg&hash=1c683240543427f71bb882badb720c65b8d5d2a5)

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fimages.wikia.com%2Fharrypotter%2Fimages%2Fd%2Fd0%2FQuill-lrg.png&hash=a324e405e51d47f5c512ef8f866ee9504a652bd3)
வணக்கம் தோழரே ....

அழகியப் படைப்பு ...!!!

''தாண்டித் தாண்டியே தீண்டித் தழுவியும்
தீரா வேட்கையில் மாறா
நின் சுவாசத் தீண்டல்போல்
மீண்டும் மீண்டும் தாண்டியே, தீண்டிடத் தூண்டிடும் கரையும் என்ன அழகு ?? ''

''ஆர்பரித்தும், ஆக்ரோசித்தும் அமைதியாகியும் என
பன்முக தன்மையுடன் திண்மையாய்
நிதம் அலையாடி விளையாடி
நின் பாதம் தீண்டியே சாபல்யம் பெறும்
அலையும் என்ன அழகு ?? ''

அருமையான வரிகள் ...!!!
வர்ணிப்பு சிந்தனை அதிச்சிறப்பு ...!!!

மென்மேலும் தொடரட்டும் கவிப்பயணம் ...!!!

~ !! வாழ்த்துக்கள் !! ~

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi36.tinypic.com%2F2m7dh1c.jpg&hash=1c683240543427f71bb882badb720c65b8d5d2a5)

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fstatic.tumblr.com%2Fwxqz3vl%2FqYFm67gha%2Fquill.png&hash=daac00209cebba7934e3cb8b27dbd4bdd17df1c1)
~ !! ரித்திகா !! ~
Title: Re: கடலழகை விழுங்கிடும் அழகழகே !
Post by: aasaiajiith on November 26, 2016, 12:24:20 PM
வாசிப்பினில்
ரசிப்பினில்
வாழ்த்தினில்
மகிழ்வு !!
Title: Re: கடலழகை விழுங்கிடும் அழகழகே !
Post by: AnoTH on November 28, 2016, 06:30:05 PM
ஆர்பரித்தும், ஆக்ரோசித்தும் அமைதியாகியும் என
பன்முக தன்மையுடன் திண்மையாய்
நிதம் அலையாடி விளையாடி
நின் பாதம் தீண்டியே சாபல்யம் பெறும்
அலையும் என்ன அழகு ??



சொல்லின்  சப்தத்திலும்  சொற்பிரயோகத்திலும்
வரிகளுக்கு  மட்டுமல்ல  வாசகர்களுக்கும்
இனிமை  சேர்க்கிறது  தங்களின்  படைப்பு
அற்புதம்.
Title: Re: கடலழகை விழுங்கிடும் அழகழகே !
Post by: aasaiajiith on November 29, 2016, 12:01:26 PM
வாசிப்பினில்
ரசிப்பினில்
வாழ்த்தினில்
மகிழ்வு !!

Title: Re: கடலழகை விழுங்கிடும் அழகழகே !
Post by: SarithaN on December 10, 2016, 04:28:44 AM
வணக்கம் தோழா,

எத்தனை பெரிய அழகு
இத்தனை சுகமாய்
எப்படி முடிந்தது
சுருங்க சொல்ல

தங்கையும் தம்பியும்
ரசித்து ருசித்து சொன்னதை
நானும் மெண்டு முழுங்கினேன்

நீங்கள் கண்ட அழகை
நானும் கண்டும் கடந்தும்
தானே வந்தேன் கண்களால்

கண்களால் ரசித்ததை
உள்ளத்தால் சுவைத்தீர்கள்
உன்னதமான வரிகளில்
தெளிவாய் சொன்னீர்கள்

உங்கள் கவியும் அதன் அழகும்
அழகழகே, வாழ்க தமிழ்

வாழ்க வளமுடன், நன்றி
Title: Re: கடலழகை விழுங்கிடும் அழகழகே !
Post by: BlazinG BeautY on December 21, 2016, 07:47:19 AM
வணக்கம் ஆசை . அழகான வரிகள் .. 

அலைகளை ஆசிர்வதித்திடும் நின் தளிர் பாதங்களை வெல்ல
மெல்ல வெளிவரும் வெள்ளிப் பிறையும் என்ன அழகு ??

சூப்பர் தோழா. வாழ்த்துக்கள்.. எதிர்பார்க்கிறோம் ஆசை ..


பின்குறிப்பு: உங்களுக்கு கவிதை வராதாம்.. கவிஞர்கள் அனைவரும் இப்படித்தான் சொல்லவர்களோ..