FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: thamilan on November 22, 2016, 09:44:46 PM

Title: டானிக்
Post by: thamilan on November 22, 2016, 09:44:46 PM
திட்டுத் திட்டாய்
திசை திசையாய்
தவழ்ந்து செல்லும்
கால்கள் இல்லாத
மேகங்கள்!!!!!

அட.....
ஊனத்தையும் மீறிய
உன்னத வெற்றி என்று
ஆண்டவன் உலகுக்குக் காட்டும்
உற்சாக டானிக் !!!
Title: Re: டானிக்
Post by: BlazinG BeautY on November 25, 2016, 07:14:47 AM
Alagana varigal. semma tamilan...