FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: aasaiajiith on November 22, 2016, 11:51:03 AM

Title: மண்ணுலகின் பெண்ணிலவே !!
Post by: aasaiajiith on November 22, 2016, 11:51:03 AM
மண்ணுலகின் பெண்ணிலவே !!


உன்னைக்காட்டிலும்
கண்கவர்
இரு கன்னம்
கொண்டவளாய்
தன்னைக்காட்டிக்கொள்ள
விண்னைவிட்டு
வெகுவேகமாய்
மண்ணை வந்து சேர்ந்து
உன்னை தனிமையில் சந்தித்து
நின் கன்னக்குழிகளை
கடன் கோரிடும்
எண்ணம் கொண்டுள்ளது
நிலவு .


கன்னக்குழிக்கடன்
கிடைக்கா கடுப்பினில்
தன் எண்ணக்கனவது
நடக்கா கிடப்பினில்
ஆண்டாண்டு காலம்
பலநூறு ஆண்டுகளாய்
மிக பொலிவான
தன்முகத்தினை
பாலினில் முகம்புதைத்து
"பால் நிலவு "என
பெயர்பெற்றுந்தான்
பயனென்னவென்று
மண்ணுலகின் பெண்ணிலவே
நீ,முகம் கழுவி
மீதமுள்ள நீர்குளத்தில்
முகம்புதைத்து
மிதக்கின்றது
விண்ணுலகின் வெண்ணிலவு
Title: Re: மண்ணுலகின் பெண்ணிலவே !!
Post by: ரித்திகா on November 22, 2016, 12:04:07 PM
(https://electamaleah.files.wordpress.com/2013/11/flores-1.png)


வணக்கம் ஆசைஅஜித் ....

அழகானப் படைப்பு ...
அருமையானக் கவிதை ...!!!
மண்ணுலகில் உங்கள் பெண்நிலா உலாவர   ...
எனது வாழ்த்துக்கள் ....!!!

~ !!! கவிப்பயணம் மென்மேலும் தொடரட்டும் தோழரே !!!
வாழ்த்துக்கள் !!!

(https://electamaleah.files.wordpress.com/2013/11/flores-1.png)
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fwww.picgifs.com%2Fglitter-gifs%2Fc%2Fcinderella%2Fpicgifs-cinderella-491777.gif&hash=8898ef75b151ca62b7f5bad5c7ea95e088899844)
~ !! ரித்திகா !! ~
Title: Re: மண்ணுலகின் பெண்ணிலவே !!
Post by: aasaiajiith on November 22, 2016, 01:47:45 PM
வாசிப்பினில்
ரசிப்பினில்
வாழ்த்தினில்
மகிழ்வு !!
Title: Re: மண்ணுலகின் பெண்ணிலவே !!
Post by: Maran on November 22, 2016, 11:11:10 PM



நண்பா ஆசைஅஜீத், மிக அழகான கவிதை, அருமையான வரிகள்.


சிப்பிக்குள் ஒளிந்திருக்கும் முத்தைப்போல் கன்னக்குழி தெரியும் சில பெண்களின் புன்னகைகள்!. கன்னக்குழி அழகிலே தப்பித்து போனது யாருமில்லை, அதில் தாங்களும் தப்பவில்லை போலும்..!! அந்த பால் நிலவும் அழகிய கன்னக்குழியில் மயங்கி சொக்கித் திரிவதாய்...! அழகாய் கவிதை புனைந்துள்ளீர்கள். வாழ்த்துக்கள்.


இடறிவிழுந்த கன்னக்குழி!
கொன்று வீழ்த்திய கத்தி பார்வை!!
காதலூட்டிய கள்ளச் சிரிப்பு!!!
உயிர் நீப்பினும் நீங்கா நினைவுகள்  :)




Title: Re: மண்ணுலகின் பெண்ணிலவே !!
Post by: aasaiajiith on November 23, 2016, 10:50:33 AM
வாசிப்பினில்
ரசிப்பினில்
வாழ்த்தினில்
மகிழ்வு !!
Title: Re: மண்ணுலகின் பெண்ணிலவே !!
Post by: AnoTH on November 23, 2016, 02:04:33 PM
வணக்கம் சகோதரன் ajith ,

நிலவின் அழகை மண்ணுலகின்
பெண்ணின் முகத்தோடு
ஒப்பிட்டு. அழகான ஓர்
படைப்பு

வாழ்த்துக்கள்
Title: Re: மண்ணுலகின் பெண்ணிலவே !!
Post by: aasaiajiith on November 25, 2016, 10:51:20 AM
வாசிப்பினில்
ரசிப்பினில்
வாழ்த்தினில்
மகிழ்வு !!